Wednesday, October 21, 2015

நல்லவங்ககூட சண்டை போடலாமா?

நல்லவங்ககூட சண்டை போடலாமா?

இன்றைய பாடலை எழுதியவர் கனகதாசர். வாழ்க்கையில் பல சமயங்களில், நாம் செய்வது சரியா தவறா என்று தெரியாமலே முழித்திருப்போம். அந்த இடங்களில் என்ன செய்யலாம் என்று தாசர் சொல்கிறார்.

மற்றவர்களைப் புகழ்ந்து பேசி, வெட்டி அரட்டை அடித்து காலத்தைக் கழிப்பதற்கு பதில், ஏதாவது ஒரு காட்டில் போய் தலைமறைவு வாழ்வு வாழலாம் என்கிறார்.

***

அஞ்ஞானிகளகூட அதிக ஸ்னேஹக்கிந்தா
சுஞ்ஞானிகளகூட ஜகளவே லேசு (அஞ்ஞானி)

முட்டாள்களுடன் நட்பு கொண்டாடுவதை விட
ஞானிகளுடன் கருத்து வேறுபாடு கொண்டிருப்பதே மேல் (அஞ்ஞானி)

உம்புடுவதக்கில்லத அரசனோலகக்கிந்தா
தும்பிதூரொளகே திரிதும்புவுதே லேசு
ஹம்பலிஸி ஹாள் ஹரட்டே ஒடயுவுதக்கிந்தா
ஹரி எம்ப தாசர கூட சம்பாஷணெயே லேசு (அஞ்ஞானி)

உடுக்க, உண்ண (இந்த) தேவைகளுக்காக அரசனை (புகழ்ந்து பாடி) அவனுடன் இருப்பதற்கு
மக்கள் நிறைந்த ஊரில் பிச்சை எடுத்துப் பிழைக்கலாம்
வேலையில்லாமல் அரட்டை அடித்துக் கொண்டிருப்பதைவிட
ஹரியின் தாசர்களுடன் பேசிக் கொண்டிருக்கலாம் (அஞ்ஞானி)

ஒடனே ஹங்கிசுவனு கரவ நுங்குதகிந்தா
குடிநீரு குடிதுகொண்டு இருவுதே லேசு
பிடதே பாந்தவரொடனே கடிதாடுவுதக்கிந்தா
அடவியொள் அஞ்ஞாதவாசவே லேசு (அஞ்ஞானி)

செய்யும் உதவிக்கு பிரதிபலன் எதிர்பார்ப்பவரின் கைகளில் சாப்பிடுவதற்கு பதிலாக
குடிநீர் குடித்துக்கொண்டு இருப்பதே மேல்
உறவினர்களுடன் (அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுடன்) சண்டை சச்சரவுடன் இருப்பதற்கு
காட்டில் அஞ்ஞாதவாசம் (யாருக்கும் தெரியாமல் ஒளிந்து) வாழ்வதே மேல் (அஞ்ஞானி)

மசெயுதிஹ மத்சரத நெரெயொளகே இருவகிந்தா
ஹசனில்லத ஹாளு குடியே லேசு
பிசஜாக்‌ஷ காகிநெலெ ஆதி கேசவ ராயா
வசுமதியொளு நின்ன தாசத்வவே லேசு (அஞ்ஞானி)

பொறாமையுடன் வாழ்பவர் நடுவில் இருப்பதற்கு பதிலாக
(ஆளில்லாத) பாழடைந்த கோயிலில் வசிப்பதே மேல்
தாமரைக் கண்ணனாக காகிநெலெ ஆதிகேசவனே,
நல்ல புத்தியுடன் உன் தாசனாக இருப்பதே மேல் (அஞ்ஞானி)

***

Tuesday, October 20, 2015

தர்மத்தின் வாழ்வுதனை..


தர்மத்தின் வாழ்வுதனை..

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இறுதியில் தர்மமே வெல்லும்.
இந்த வாக்கியத்தின் பொருளையே இந்த முழுப்பாடலில் சொல்லியிருக்கிறார் புரந்தரதாசர்.

நமக்கு கெட்டது நினைப்பவர்கள், நம் எதிரிகள், இப்படி அனைவருக்கும் நாம் என்ன செய்ய வேண்டும்? பாடலைக் கேட்டு, விளக்கத்தைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இப்படியெல்லாம் செய்ய முடியுமா? செய்யவும் வேண்டுமா என்ற கேள்விகளுக்கு பதில்? தாசர் சொன்னபிறகு அதற்கு எதிராக ஏதேனும் சொல்ல முடியுமா? அதனால் அவர் சொன்னதேதான் பதில்.***

தர்மவே ஜயவெம்ப திவ்ய மந்த்ர
மர்மவனரிது மாடலு பேகு தந்த்ர (தர்மவே)

தர்மம் வெல்லும் - இதுவே உண்மையான மந்திரம் ஆகும்
அது எப்படி என்று தெரிந்து கொள்வது சுலபமல்ல (சில வழிகளைக் கையாள வேண்டும்)

விஷவிக்கிதவகே ஷட்ரசவனுணிசலு பேகு
த்வேஷ மாடிதவன போஷிசலு பேகு
புசியாடி கெடிசுவன ஹாடி ஹரசலு பேகு
மோச மாடுவன ஹெசரு மகனிகிட பேகு (தர்மவே)

விஷம் கொடுத்தவருக்கு அறுசுவை உணவுகளையும் கொடுக்க வேண்டும்
விரோதம் செய்தவனிடம் நட்பு பாராட்ட வேண்டும்
பொய்களைச் சொல்லி (நம்மை) கெடுப்பவனை, பாடிப் புகழ்ந்து பாராட்ட வேண்டும்
மோசம் செய்பவனின் பெயரை நம் வாரிசுக்கு வைக்க வேண்டும் (தர்மவே)

ஹிந்தே நிந்திபரன்னு வந்திசுதலிரபேகு
பந்தனதொளிட்டவர பெரெய பேகு
கொந்த வைரிய மனெகே நடெது ஹோகலு பேகு
குந்தெணிசுவவர கெளெதன மாட பேகு (தர்மவே)

நம் பின் நம்மைப் பற்றி புரளி பேசுபவரை எப்போதும் வணங்கிக் கொண்டிருக்க வேண்டும்
நம்மை கைது செய்ய வைத்தவரை (பிரச்னைகளிலிருந்து) காப்பாற்ற வேண்டும்
எதிரியின் வீட்டுக்கு நடந்து சென்று (அவரிடம்) பேச வேண்டும்
நமக்கு கெட்டது நடக்கவேண்டும் என்று நினைப்பவருக்கு நல்லதே செய்ய வேண்டும் (தர்மவே)

கொண்டைது படியுவர கொண்டாடுதிர பேகு
கண்டு சஹிசதவர கரெய பேகு
புண்டரீகாக்‌ஷ ஸ்ரீ புரந்தர விட்டலன்ன
கொண்டாடி தான் தன்யனாக பேகு (தர்மவே)

நமக்கு துன்பம் கொடுப்பவரை, புகழ்ந்து கொண்டாட வேண்டும்
நம்மைக் கண்டு பொறாமை கொள்பவரை வீட்டுக்குக் கூப்பிட்டு (உபசரிக்க) வேண்டும்
புண்டரிகாட்சனான ஸ்ரீ புரந்தர விட்டலனை
கொண்டாடி, மகிழ்ச்சி பெற வேண்டும் (தர்மவே)


******

Monday, October 19, 2015

வழியைக் காட்டு கோபாலா!

ஸ்ரீ வாதிராஜர் எழுதிய பாடல். அவர் எழுதும் பாடல்களில் 'ஸ்ரீ ஹயவதன' என்னும் அவரது முத்திரை காணப்படும். இலக்குமியுடன் கூடிய ஸ்ரீ ஹயவதனன், ஞான பக்தி வைராஞத்தை அளிக்கக்கூடியவனாக இருக்கிறான்.

இந்த தளத்தில் நாம் பார்க்கும் இந்தப் பாடல், ஸ்ரீ வாதிராஜரின் மூன்றாவது பாடல்.தாரிய தோரோ கோபாலா
வாரிஜனாபஸ்ரீ வைகுண்ட லோலா (தாரிய)

வழியைக் காட்டு கோபாலா
இலக்குமியின் தலைவனே, வைகுண்ட வாசனே (தாரிய)

சிக்கிதே பவ பாஷ தொளகே நான்
லெக்கவில்லத ஜந்துகளிகே
திக்கொப்பரில்லா எனகே, என்னா
திக்கேடிகள களெது கருணிசு எனகே (தாரிய)

வாழ்க்கை என்னும் காட்டில் மாட்டிக் கொண்டேன்
கணக்கற்ற மிருகங்களினால் (காயப் பட்டேன்)
என்னைக் காப்பாற்றுபவர் யாருமில்லை, எந்தன்
கஷ்டங்களை தீர்த்து, எனக்கு கருணை காட்டு (தாரிய)

கஜரக்ஷகனு நீனெந்து தேவா
அஜருத்ராதிகளெந்து
நிஜவாகி பொகளிதரெந்து
சுஜனர நோடய்யா பேடிதே நானெந்து (தாரிய)

கஜேந்திரனைக் காப்பாற்றியவன் நீ என்று
பிரம்மா, சிவன் முதலானோர்
உண்மையிலேயே சொன்னார்கள்  (அப்படிப்பட்ட நீ)
நல்லவர்களை பாருய்யா, உன்னை வேண்டினேன் நான் (தாரிய)

வரத ஸ்ரீ ஹயவதனனே பாரை
கரெதன்ன தாரிய தோரை
பரம பக்தரொளின் யாரை செலுவ
பரபுருஷ நீனல்லதே இன் யாரை (தாரிய)

ஸ்ரீ ஹயவதனனே, இங்கு வாராய்
என்னை அழைத்து, எனக்கு நல்வழி காட்டுவாய்
உந்தன் பக்தனான எனக்கு வேறு யார் உளர்?
சிறந்த தெய்வமான உன்னைத் தவிர இங்கு யாரிடம் போய்க் கேட்பேன்? (தாரிய)

****

வித்யாபூஷணர் குரலில் இந்த அருமையான பாடல்.


***


Thursday, October 15, 2015

தூக்கி விடு அல்லது மூழ்கடித்து விடு

தூக்கி விடு அல்லது மூழ்கடித்து விடு

சம்சார சாகரத்தில் மூழ்கி, என்னென்ன செய்யக் கூடாதோ அதையெல்லாம் செய்துவிட்டு, இறைவனை எள்ளளவும் நினைக்காமல் நேரத்தைக் கழித்தேனே, ஒன்று என்னை கை கொடுத்து தூக்கி விடு அல்லது ஒரேடியாக மூழ்கடித்து விடு என்று தாசர் இறைஞ்சுகிறார்.தேளிசோ இல்லா முளுகிசோ
காலிகே பித்தேனோ பரமக்ருபாளோ (தேளிசோ)

(என்னை) தூக்கிவிடு அல்லது மூழ்கடி
(உன்) காலில் விழுந்தேன் கருணை கொண்டவனே (தேளிசோ)

சதிசுத தனதாசே எந்தெம்ப மோஹதி
ஹிததிந்த அதினொந்து பெண்டாதேனோ
கதியகொடுவவர காணே மதிய பாலிசோ லக்‌ஷ்மி
பதி நின்ன சரணத ஸ்மரணேயிட்டு எனகே (தேளிசோ)

மனைவி, மக்கள், செல்வம் ஆகியவற்றின் மேல் கொண்ட மோகத்தால்
உழைத்து உடல் நொந்து, துவண்டு போனேன்;
என்னைக் காப்பாற்றுபவர் யாருமில்லை; நல்ல புத்தியைக் கொடு
லக்‌ஷ்மிபதியே, உன் பாதங்களை எப்போதும் நினைக்கும்படி இருக்கச் செய் (தேளிசோ)

ஜரரோக தாரித்ரய கஷ்மலவ எந்தெம்ப
ஷரதியொளகே பித்து முளுகிதேனோ
ஸ்திரவல்ல ஈ தேஹவு நெரெனம்பிதெ நின்ன
கருணா பயவித்து பாலிசோ ஹரியே (தேளிசோ)

ஜுரம், வியாதி, ஏழ்மை, அசுத்தங்கள் நிறைந்த இந்த
(சம்சாரம் என்னும்) கடலில் விழுந்து மூழ்கினேனே
இந்த உடம்பு நிலையானதல்ல; உன்னையே நித்தமும் நம்பினேன்
கருணையும் எனக்கு அபயமளித்து காப்பாற்று ஹரியே (தேளிசோ)

தோஷவுள்ளவ நானு, பாஷெயுள்ளவ நீனு
மோசஹோதேனோ பக்திரசவ பிட்டு
சேஷசயன ஸ்ரீ புரந்தரவிட்டலனே
தாசர சங்கவித்து பாலிசோ ஹரியே (தேளிசோ)

குறைகள் உள்ளவன் நான், வாக்கு தவறாதவன் நீ
பக்தி மார்க்கத்தை விட்டு, மோசம் போனேனே
பாம்புப் படுக்கையைக் கொண்ட புரந்தர விட்டலனே
உன் பக்தர்களின் நட்பைக் கொடுத்து எனக்குக் கருணை காட்டு ஹரியே (தேளிசோ)

***Wednesday, October 14, 2015

கலைவாணி நின் கருணை..


புரந்தரதாசரின் இன்னொரு அழகான பாடல். பிரம்மனின் மனைவியான சரஸ்வதி தேவியை வணங்கி, அவரை நம் நாக்கில் எப்பொழுதும் இருந்து, நல்ல சொற்களை பேசவைக்குமாறு வேண்டும் பாடல்.***

பாலிஸம்மா முத்து சாரதே
என்ன நாலிகே மேலே நில்ல பாரதே (பாலிஸெம்ம)

காப்பாற்று அம்மா, என்னை சாரதாதேவி
என் நாக்கின் மேல் எப்பொழுதும் நிற்கக்கூடாதா (பாலிஸெம்ம)

லோல லோசனே தாயி நிருத நம்பிதே நின்ன

கண்களில் எப்பொழுதும் கருணையைக் காட்டுபவளே,
உன்னை எக்கணமும் நம்பினேன் என்னை (பாலிஸெம்ம)

அக்‌ஷராக்‌ஷர விவேகவ நின்ன
குக்‌ஷியொளிரேளு லோகவனு
சாக்‌ஷாத்ரூபதிந்த ஒலிது ரக்‌ஷிசு தாயீ
நீலலோசன தாயே நிருத நம்பிதே நின்ன (பாலிஸெம்ம)

நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லும், ஞானம் நிறைந்தது
ஈரேழு பதினான்கு உலகமும் உன்னை வணங்குகின்றது
உன் அழகிய ரூபத்தால் எம்மை காப்பாற்று தாயே
அழகான கண்களை உடையவளே, உன்னையே நம்பினேன் என்னை (பாலிஸெம்ம)

ஸ்ருங்காரபுர நெலெவாசினி தேவி சங்கீத கான விலாசினி
மங்களகாத்ரளே பளிரே ப்ரம்மன ராணி
நீலலோசன தாயே நிருத நம்பிதே நின்ன (பாலிஸெம்ம)

அழகான ஊரில் வசிப்பவளே
பாடல்களால் வசீகரிப்பவளே
மங்களகரமானவளே, பிரம்மனின் ராணியே
அழகான கண்களை உடையவளே, உன்னையே நம்பினேன் என்னை (பாலிஸெம்ம)

சர்வாலங்கார தயா மூர்த்தி நின்ன
சரணவ ஸ்துதிசுவே கீர்த்தி
குருமூர்த்தி புரந்தரவிட்டலன்ன ஸ்துதிசுவே
நீலலோசன தாயே நிருத நம்பிதே நின்ன (பாலிஸெம்ம)

சர்வ அலங்காரங்களுடன் இருப்பவளே
கருணா மூர்த்தியே நின் சரணங்களை வணங்கிப் பாடுவேன்
நம் குருமூர்த்தியான புரந்தரவிட்டலனை
வணங்கியவுடன்,
அழகான கண்களை உடையவளே, உன்னையே நம்பினேன் என்னை (பாலிஸெம்ம)

***
Tuesday, October 13, 2015

உன்னைக் கண்டு தன்யனானேனே.. ஸ்ரீனிவாசா..
ஸ்ரீனிவாசனைக் கண்ட புரந்தரதாசர், அந்த ஆனந்தத்தில் பாடிய பாடல். உன்னைப் பார்த்து மிகவும் தன்யனானேன், தரிசனம் தந்ததற்கு நன்றி என்று கூறி, ஸ்ரீனிவாசனின் கருணையை வேண்டும் இன்னொரு மிகவும் புகழ் பெற்ற பாடல்.

நின்ன நோடி தன்யனாதெனோ ஹே ஸ்ரீனிவாசா (நின்ன)

உன்னைக் கண்டு தன்யனானேன் ஸ்ரீனிவாசா (நின்ன)

பக்‌ஷிவாஹன லக்‌ஷ்மி ரமணா லக்‌ஷ பிட்டு நோடோ
பாண்டவ பக்‌ஷ செல்வ தைத்ய சிக்‌ஷ ரக்‌ஷிசென்ன கமலாக்‌ஷ (நின்ன)

கருடனை வாகனமாகக் கொண்டவனே இலக்குமியின் கணவனே
(என்னை) அலட்சியம் செய்யாமல் பாரப்பா
பாண்டவர்களின் பக்கம் நின்றவனே கெட்டவர்களுக்கு பாடம் புகட்டுபவனே
என்னை காப்பாற்று தாமரைக் கண்ணனே (நின்ன)

தேச தேச திருகி நானு ஆச பக்தனாதே ஸ்வாமி
தாசனு நானல்லவே ஜகதீச ஸ்ரீச ஸ்ரீனிவாசா (நின்ன)

ஊர் ஊராக அலைந்து நான் (கண்டதையும் பார்த்து) ஆசைப்பட்டேன் ஸ்வாமி
உன் தாசன் ஆனேனே, ஜகதீசனே, ஸ்ரீனிவாசனே (நின்ன)

கந்து ஜனக கேளோ என்ன அந்தரங்கத ஆசெயன்னு
அந்தரவில்லத பாலிஸு ஸ்ரீகாந்த புரந்தரவிட்டலா (நின்ன)

மன்மதனின் தந்தையே என் ஆசையைக் கேளப்பா
முடிவேயில்லாமல் காப்பாற்று, ஸ்ரீகாந்தனே, புரந்தரவிட்டலனே (நின்ன)

***

இந்தப் பாடல் திரு. மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் குரலில்:***Monday, October 12, 2015

கிருஷ்ணனை கண்டீர்களா?சற்றே பெரிய பாட்டு. கிருஷ்ணனின் லீலைகள், அந்தக் குழந்தையின் சேட்டைகள் அனைத்தையும் சொல்லணும்னா, எவ்வளவு பத்திகள் பாடினாலும் போதாதே?

குட்டி கிருஷ்ணன் உங்க வீட்டுக்கு வந்தானா என்று கேட்டவாறு அவன் அருமை பெருமைகளைப் பற்றி புரந்தரதாசர் பாடும் பாடல். மிகவும் எளிமையான, மிகச் சுலபமாக புரியும் பாடல்.

இத்துடன் மூன்று ஒளித்துண்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடகரும் சிற்சில பத்திகளை மட்டுமே பாடியுள்ளனர்.***

அம்மா நிம்ம மனெகளல்லி
நம்ம ரங்கன காணீரே (அம்மா)

அம்மா உங்க வீட்டில்
நம்ம ரங்கன் வந்தானான்னு பார்த்தீர்களா (அம்மா)

ப்ரம்ம மூர்த்தி நம்ம கிருஷ்ணன
நிம்ம கெரெயல்லி காணீரே (அம்மா)

கிருஷ்ணன், பிரம்மனும் அவனே
உங்க தெருக்களில் வந்தானான்னு பார்த்தீர்களா (அம்மா)

காசி பீதாம்பர கையல்லி கொளலு பூசித
ஸ்ரீ கந்த மையொளகம்மா
லேசாகி துளசிய மாலெய தரிசித
வாசுதேவனு பந்தா கண்டீரேனே (அம்மா)

காசிப் பட்டு, கைகளில் குழல்,
உடம்பில் சந்தனம் பூசியவன்
கழுத்தில் துளசி மாலை அணிந்திருப்பான்
அந்த வாசுதேவன் வந்தானான்னு பார்த்தீர்களா (அம்மா)

கரதல்லி கனகன பெரெளல்லி உங்குர
கொரளல்லி ஹாகித ஹுலியுகுரம்மா
அரளெலெ கனக குண்டல காலந்துகே
உரக சயன பந்தா கண்டீரேனே (அம்மா)

கைகளில் வளையல், விரல்களில் மோதிரம்,
கழுத்தில் புலி நகத்தாலான மாலை
தங்கத் தோடுகள், கொலுசுகள் இவற்றையணிந்து
பாம்புப் படுக்கை கொண்டவன், வந்தானான்னு பார்த்தீர்களா (அம்மா)

குங்கும கஸ்தூரி கரி நாம திட்டி
சங்க சக்ரகள தரிசிஹனம்மா
பினகதிந்தலி கொளலூதுத பாடுத
பங்கஜாக்‌ஷனானு கண்டீரேனே (அம்மா)

குங்குமம், கஸ்தூரி ஆகியவற்றால் நெற்றியில் நாமம் தீட்டி
சங்கு சக்கரங்களுடம் இருப்பானம்மா
தன் குழலை வாசித்தவாறே பாடுவானம்மா
அந்த தாமரைக் கண்ணனை பார்த்தீர்களா (அம்மா)

மாவன மடுஹித ஷகடன கெடஹித
கோவர்தன கிரி எத்திதனம்மா
அவ தாயிகே ஈரேளு ஜக தோரித
காமனய்யா பந்தா கண்டீரேனே (அம்மா)

தன் மாமன் கம்சனைக் கொன்றவன், சகடாசுரனை வென்றவன்
(மக்களைக் காப்பதற்காக) கோவர்த்தன மலையைத் தூக்கியவன்
தன் தாய்க்கு ஈரேழு உலகத்தையும் (தன் வாயில்) காட்டியவன்
மன்மதனின் தந்தை வந்தானா பார்த்தீர்களா (அம்மா)

காலல்லி கிரு கெஜ்ஜெ நீலத பாவுலி
நீலவர்ணனு நாட்யவாடுதல்லி
மெலகி பாயல்லி ஜகவன்னு தோரித
மூருலோகதொடெயன கண்டீரேனே (அம்மா)

கால்களில் சிறு கொலுசு, நீலத்தினாலான காதணிகள்
நடனமாடியவாறு கார்வண்ணன்
தன் வாயில் உலகத்தைக் காட்டியவன்
மூன்று உலகங்களின் தலைவனை பார்த்தீர்களா (அம்மா)

ஹதினாரு சாவிர கோபியர கூடி
சதுராங்க பாகதேயன்ன ஆடுவனம்மா
மதன மோஹன ரூப எடெயல்லி கௌஸ்துப
மதுசூதன பந்தா கண்டீரேனே (அம்மா)

16,000 கோபியர்களுடன் சேர்ந்து
சதுரங்கம் விளையாடுபவன்
அழகான தோற்றம் கொண்டவன், இடையில்
கௌஸ்துபம் (என்கிற நகை) அணிந்தவன்,
மதுசூதனன் வந்தானா பார்த்தீர்களா (அம்மா)

தெட்டெச கோடி தேவருகள ஒடகூடி
ஹத்தவதாரவன்னு ஹெத்திதனம்மா
சத்யபாமப்ரிய ப்ரிய புரந்தரவிட்டலா
நித்யோத்ஸவ பந்தா கண்டீரேனே (அம்மா)

33 கோடி தேவர்கள் கூடியிருப்பார்கள்
இந்த உலகத்தில் 10 அவதாரங்கள் எடுத்தவன்
சத்யபாமையின் ப்ரியமான அந்த புரந்தர விட்டலன்
தினந்தோறும் உத்சவம் செய்து கொள்பவன்
இங்கு வந்தானா பார்த்தீர்களா (அம்மா)

***

Monday, October 5, 2015

உகாபோகங்கள்.

உகாபோகங்கள்.


இவை சாதாரண பாடல்களைப் போல் - சரணம், பல்லவி, அனுபல்லவி - என்ற விதிகளைக் கொண்டிருக்காது. ஒரு பத்தி - குறைந்த பட்சம் நான்கு வரிகளைக் கொண்ட பாடல். மற்ற பாடல்களைப் பாடும் முன்னர் இந்த உகாபோகங்களைப் பாடுவது பாடகர்களின் வழக்கம். ராக ஆலாபனைகள் செய்வதற்கு மிகவும் வசதியானவை இந்த உகாபோகங்கள். அனைத்து தாசர்களும் இவ்வகைப் பாடல்களை இயற்றியுள்ளனர். இன்றைய பாடலை இயற்றியவர் புரந்தரதாசர்.

த்வைத சித்தாந்தத்தில், பல்வேறு கடவுளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு தனித்தனி பொறுப்புகள் உள்ளன. அவர்களை வழிபட்டால் அந்தந்த பலன்கள் கிடைக்கும். ஆனால், இவர்கள் அனைவர்க்கும் தலைமை ஸ்ரீமன் நாராயணன் ஆவார். அவரே சர்வோத்தமன். அனைத்து கடவுளர்களும், தங்கள் பொறுப்பைச் செய்வதற்கு ஹரியே காரணம். அவரே அவர்களை வழிநடத்துகிறார்.இந்த கருத்தை வெளிப்படுத்துவதே இன்றைய பாடல்.

***

சதத கணநாத சித்திய நீவ கார்யதலி
மதி ப்ரேரிசுவளு பார்வதி தேவியு

நிரந்தரமானவன், கணங்களின் தலைவன் (கணபதி) நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் கூட இருந்து அருள் புரிவான்
நல்ல புத்தியைக் கொடுப்பாள் பார்வதி தேவி

முகுதி பதக்கே மனவீவ மஹா ருத்ர தேவரு
ஹரி பகுதி தாயகளு பாரதி தேவி

முக்தி பெறுவதற்கான வழியைக் காட்டுவார் சிவபெருமான்
ஹரி பக்தி செய்வதற்கான வழியைக் காட்டுவாள் பாரதி தேவி

யுக்தி சாஸ்திரகளல்லி வனஜா சம்ப்ஹவனரசி
சத்கர்மகள நடெசி சுஞான மதி இத்து

புத்திகூர்மை, எதையும் அடைவதற்கான செயல்திறனை கொடுப்பாள் தாமரையில் அமர்ந்திருப்பவள் (சரஸ்வதி)
நற்செயல்களை நம்மை செய்ய வைத்து, நல்ல புத்தியைக் கொடுப்பான் (பவமானன்=அனுமான்)

கதி பாலிசுவ நம்ம பவமானனு
சித்ததல்லி ஆனந்த சுகவ நீவளு ரமா

உதவி புரிவான் நம்ம பவமானன் (அனுமான்)
எப்பொழுதும் அமைதியாக இருக்க ஆனந்தத்தைத் தருவான் இலக்குமி தேவி

பகுத ஜனரொடெய நம்ம புரந்தர விட்டலனு
சதத இவரளு நிந்து ஈ க்ருதிய நடெசுவனு

பக்தர்களின் பாதுகாவலன் நம் புரந்தர விட்டலன்
எப்பொழுதும் இந்த எல்லாக் கடவுளர்களின் உள்ளேயும் இருந்து, அவரவர்களின் செயல்களை செய்ய உதவி புரிவான்.

***

Wednesday, September 30, 2015

பக்தி vs முக்தி

பக்தி vs முக்தி

இறைவனின் வேண்டும்போது எதைக் கேட்பது? பக்தியா அல்லது முக்தியா? இவ்விரண்டையும் கேட்டவர்களுக்கு கடைசியில் என்ன கிடைத்தது? அவர்கள் என்ன ஆனார்கள்? விஜயதாசரின் இந்தப் பாடலைப் பார்ப்போம்.

***

பக்தி சுகவோ ரங்கா முக்தி சுகவோ
பக்தி சுகவோ முக்தி சுகவோ
யுக்திவந்தரெல்லா ஹேளி (பக்தி)

பக்தி நல்லதா ரங்கா முக்தி நல்லதா
பக்தி நல்லதா முக்தி நல்லதா
புத்திமான்களே கொஞ்சம் சொல்லுங்கள் (பக்தி)

பக்தி மாடித ப்ரஹ்லாத முக்தியனு படெது கொண்டா
முக்தி பேடித துருவராய முக்தியிந்த ஹரியா கண்டா (பக்தி)

பக்தி செய்த பிரகலாதனுக்கு இறுதியில் முக்தி கிடைத்தது
முக்தி கேட்ட துருவனுக்கு, இறுதியில் முக்தி கிடைத்து, ஹரியின் தரிசனமும் கிடைத்தது (பக்தி)

பக்தி மாடித அஜாமிளனு அந்த்யதல்லி ஹரியா கண்டா
முக்தி பேடித கரிராஜ துரிதகளனு களெது கொண்டா (பக்தி)

பக்தி செய்த அஜாமிளன் இறுதியில் ஹரியைக் கண்டான்
முக்தி கேட்ட கஜேந்திரன் (என்னும் யானை), தன் கஷ்டங்களைப் போக்கிக் கொண்டான் (பக்தி)

பக்தி முக்திதாத நம்ம லக்குமி அரச விஜய விட்டல
ஷக்த தான் எனுத பஜனே மாடிரோ (பக்தி)

பக்தி, முக்தி இவ்விரண்டையும் கொடுக்கக்கூடிய நம் விஜய விட்டலனே
சக்தி வாய்ந்தவன் என்று பஜனை செய்யுங்கள் மக்களே (பக்தி)

***Tuesday, September 29, 2015

ஹனும பீம மத்வ...இன்றைய பாடலை எழுதியவர் ஸ்ரீ வியாசராயர். புரந்தரதாசரின் குருவான இவரது இன்னொரு புகழ் பெற்ற பாடல் - கிருஷ்ணா நீ பேகனே பாரோ - அனைவரும் அறிந்ததே.

இன்றைய பாடலில், ஹனும பீம மத்வ அவதாரங்களைப் பற்றி பாடுகிறார்.

***ஜய வாயு ஹனுமந்தா ஜய பீம பலவந்தா
ஜய பூர்ண மதிவந்தா சலஹோ சந்தா (ஜய)

ஜய வாயு ஹனுமந்தா, ஜய பீம பலவந்தனே
ஜய மத்வ மதிவந்தா, என்னைக் காப்பாற்றுவாய் நன்றாக (ஜய)

அஞ்ஜனெயலி ஹுட்டி அந்து ராமர சேவே
நந்ததிந்தலி மாடி கபி பலவ கூடி
சிந்து லங்கிசி களன வன பங்கிசி சீதே
டுங்குரவ கொட்டே லங்காபுரவ சுட்டே (ஜய)

அஞ்சனாதேவியிடம் பிறந்து, அன்று ராமனின் சேவை
சந்தோஷத்துடன் செய்து, சக-குரங்குகளின் உதவியுடன்
கடல் கடந்து அங்கே வனத்தை அழித்து சீதைக்கு
அடையாள முத்திரை கொட்டாய், இலங்கையை அழித்தாய் (ஜய)

ஹரிகே சூடாமணியனித்து கரிகள கூடி
ஷரடியனு கட்டி அரிபலவ ஹுடிகுட்டி
உரக பந்தனதிந்த கபிவரரு மைமரெயே
வர சஞ்ஜீவனவ தந்து பதுகிசிதே (ஜய)

ஸ்ரீராமனிடம் சூடாமணி கொடுத்து நண்பர்களுடன் சேர்ந்து
(கடல் மேல்) பாலத்தைக் கட்டி, யுத்தத்தின் போது
நாகாயுதத்தால் ராமர் படையினர் மயக்கமடைந்துவிட
சஞ்சீவி மலையை கொண்டு வந்து அனைவரையும் காப்பாற்றினாய் (ஜய)

த்வாபரதலி பாண்டு பூபநாத்மஜனாதே
ஸ்ரீபார்த்தசாரதி ஹரி பஜக நீனாதே
பாபி மாகத பக கீசக ஹிடிம்பகர
கோபதிந்தலி தரிதே மூர்ஜகதி மெரெதே (ஜய)

த்வாபர யுகத்தில் பாண்டுவின் புத்திரனாக அவதரித்தாய்
ஸ்ரீ பார்த்தசாரதி என்கிற ஹரியின் பக்தனாக ஆனாய்
கெட்டவர்களான பகாசுரன், கீசகன், ஹிடிம்பன் ஆகியோரை
கோபத்துடன் கொன்றாய், மூவுலகத்தையும் காத்தாய் (ஜய)

துரதல்லி துர்யோதனன பலவனு தரிதே
அரிது துஷ்ஷாசனன ஒடலன்னு பகெதே
உரவ தப்பிசி கௌரவன்ன தொடெகள முரிதே
ஹரிய கிங்கர துராந்தரகாரு சரியே (ஜய)

யுத்தத்தில் துரியோதனின் பலத்தைக் குறைத்தாய்
துச்சாதனனின் உடலைக் கிழித்தாய்
கௌரவர்களின் தொடைகளைக் கிழித்து அவர்களைக் கொன்றாய்
ஹரியின் எதிரிகளை பந்தாடினாய், அது சரியே (ஜய)

கலியுகதலி கள்ளருடிசி துர்மதகளனு பலிசி
ஸ்ரீஹரிய குணகளனு தூஷிசி
கலியனனு சரிசே குருவாகி அவதரிசி
களர துர்மத முரிதே ஸ்ரீக்ருஷ்ண பரனெந்தே (ஜய)

கலியுகத்தில் பலர் அவரவர் மதங்களைப் பரப்ப வந்தபோது
ஸ்ரீஹரியின் குணங்களைத் திட்டியபோது,
இவைகளை சரிசெய்ய, குருவாக் அவதரித்தாய்
அந்த மதங்களை வீழ்த்தினாய், ஸ்ரீகிருஷ்ணனே தெய்வம் என்றாய் (ஜய)

****


***


Monday, September 28, 2015

பெற்றெடுத்த குழந்தை, தாய்க்கு பாரமா?ஹனும பீம மத்வ என்னும் மூன்று அவதாரங்களைப் பற்றிப் பேசும் இன்னொரு பாடல். தாசர்களில் மிகவும் முக்கியமானவர்களாகக் கருதப்படும் - நால்வரில் (ஸ்ரீபாதராயர், வியாசராயர், புரந்தரதாசர் & விஜயதாசர்) - விஜயதாசர் எழுதிய பாடல் இது.

ஹனும பீம மத்வர் ஆகியோர்களின் பெருமைகளைச் சொல்லி, இவ்வளவு பெருமைகளை உடையவனே, நான் என்ன குற்றம் செய்தேன்? ஏன் என்னை காப்பாற்ற மறுக்கின்றாய் என்று மன்றாடும் விஜயதாசரின் அருமையான பாடல் இது.

***

பாரவே பாரதி ரமணா, நினகே நான் (பாரவே)

பாரதிதேவியின் ரமணனே, உனக்கு நான் மிகவும் பாரமாக தெரிகிறேனா? (பாரவே)
(ஏன் என்னை காப்பாற்ற மறுக்கின்றாய்?)

லங்கா நாதன பிங்கவ முரிது
அகளங்க சரிதன கிங்கர நெனெசிதி
பங்கஜாக்‌ஷிகே அங்கிததுங்குர வித்தே
ஷங்கே இல்லதே நீ லங்கேயா தஹிசிதே (பாரவே)

லங்கா அரசனின் கர்வத்தைப் போக்கி
அவன் மகன் & முழு சேனையையும் அழித்தாய்
சீதைக்கு அடையாள முத்திரை கொடுத்தாய்
பயமில்லாமல், நீ இலங்கையை எரித்தாய் (பாரவே)

சோம குலதி நிஸ்ஸீம மஹிம நெனெசி
தாமஸ பகன நிர்தூமவ மாடிதே
காமினி மோஹிசே ப்ரேமதி சலஹிதே
தாமர சாக்‌ஷன ப்ரேமவ படெதே (பாரவே)

சோம குலத்தில் உதித்து
பகாசுரனை கொன்றாய்
ஹிடிம்பி என்னும் அரக்கி உன் மேல் ஆசைப்பட்டபோது, (வேதவியாசரின் ஆணைக்கேற்ப) அவளைத் திருமணம் செய்துகொண்டாய்
தாமரை மணாளன் (கண்ணணின்) பாசத்தைப் பெற்றாய் (பாரவே)

வேதவ்யாசர சேவெய மாடி
மோததிந்த பஹு வாதகளாடி
அதம சாஸ்திரகள ஹோமவ மாடி
விஜய விட்டலன சேவக நெனெசிதி  (பாரவே)

வேதவியாசருக்கு பூஜைகளை செய்து
பற்பல விவாதங்களை மேற்கொண்டு
மற்ற சாஸ்திரங்களுக்கு எதிராக வாதிட்டு, அவற்றை வென்று
விஜய விட்டலனின் சேவகன் என்று எப்போதும் எண்ணிக் கொண்பவனே, உனக்கு (பாரவே)

***

Friday, September 25, 2015

இறைவன் எழுதிய கடிதம்இறைவன் நம் எல்லார்க்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் என்னெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது? நாம் எதையெல்லாம் செய்ய வேண்டும்? எதையெல்லாம் செய்யக்கூடாது என்று எழுதியிருக்கிறது? இறைவன் ஆனவன், அவனே, தன் கைப்பட எழுதியிருப்பதால், தயவு செய்து அதை பின்பற்றுமாறு புரந்தரதாசர் இந்தப் பாடலில் எழுதியிருக்கிறார்.

கடிதம் = உடம்பு / வாழ்க்கை.

இறைவனால் கொடுக்கப்பட்ட இந்த உடம்பை, இந்த வாழ்க்கையை வீணாக்காமல் எப்படியெல்லாம் நல்வழியில் செலவழிக்கலாம் என்று இந்தப் பாடலில் பார்க்கலாம். மிகவும் எளிமையான பாடல். மக்களுக்கு அறிவுரை கூறுமாறு அமைந்த இன்னொரு தாசர் பாடல்.

***

காகத பந்திதே நம்ம கமலநாபனது
ஈ காகதவன்னு ஓதிகொண்டு கால களயிரோ (காகத)

நம் பத்பனாபனின் கடிதம் வந்துள்ளது
இந்தக் கடிதத்தை படித்துக் கொண்டு காலத்தைக் கழியுங்கள் (காகத)

காம க்ரோதவ பிடிரெம்போ காகத பந்திதே
நேமெ நிஷ்டெயொள் இரிரெம்போ காகத பந்திதே
தாமஸ ஜனர கூடதிரெம்போ காகத பந்திதே
நம்ம காமனய்யனு தானே பரெத (காகத)

காமம் விரோதம் ஆகியவற்றை விட்டுவிடுங்கள்...
பூஜை, புனஸ்காரங்கள் (ஆகிய தினசரி கடமைகளில்) ஈடுபடுங்கள்..
தாமஸ (கீழ்த்தரமான நோக்கங்களை உடைய) மக்களிடமிருந்து விலகி இருங்கள்...
நம் மன்மதன் தந்தை தானே எழுதிய (காகித)

ஹெண்ணின் ஆசே பிடிரெம்போ காகத பந்திதே
ஹொன்னின் ஆசே பிடிரெம்போ காகத பந்திதே
மண்ணின் ஆசே பிடிரெம்போ காகத பந்திதே
நம்ம கமலனாபனு தானே பரெத (காகத)

பெண்ணாசையை விட்டுவிடுங்கள்..
பொன்னின் ஆசையை விட்டுவிடுங்கள்..
மண்ணின் ஆசையை விட்டுவிடுங்கள்..
நம் பத்பனாபன் அவனே எழுதிய.. (காகித)

கெஜ்ஜெயெ காலிகெ கட்டிரெம்போ காகத பந்திதே
ஹெஜ்ஜெ ஹெஜ்ஜேகெ ஹரியெனிரெம்போ காகத பந்திதே
லஜ்ஜெயெ பிட்டு குணியிரெம்போ காகத பந்திதே
நம்ம புரந்தர விட்டல தானே பரெத (காகத)

கால்களில் கொலுசு அணியுங்கள்...
ஹரி என்றபடியே நடனமாடத் துவங்குங்கள்...
வெட்கத்தை விட்டு ஆடுங்கள்..
நம் புரந்தரவிட்டலன் தானே எழுதிய.. (காகித)

***

இந்த தொகுப்பில் முதல் பாடலே நாம் இன்று பார்த்தது.***


Thursday, September 24, 2015

பாரதி தேவி.பாரதி தேவி

ஸ்ரீமத்வர் நிறுவிய த்வைத சித்தாந்தத்தில் முக்கியமான கோட்பாடு - Hierarchy. கடவுளர்களிலிருந்து இந்த hierarchy, set செய்து வைத்துள்ளனர். அந்தப் பட்டியல் இங்கு உள்ளது.

https://dvaitavedanta.wordpress.com/2009/03/15/taratamya-of-sri-madhvacharya/

இந்த hierarchyல் மேலே, முதல் இடத்தில் ஸ்ரீமன் நாராயணன். அவனே சர்வோத்தமன். அனைத்திலும் / அனைவரிலும் உயர்ந்தவன். பிறகு வருபவர் ஸ்ரீலக்‌ஷ்மி. மூன்றாவது இடத்தில் வருபவர் பிரம்மா & வாயு பகவான்.
நான்காவது இடத்தில் இவர்களது மனைவிகள் - சரஸ்வதி & பாரதி தேவி.இந்த பாரதி தேவியைப் பற்றிய பாடலே இன்று பார்க்கப் போவது. புரந்தரதாசர் பாடிய இது மிகவும் புகழ் பெற்ற பாடலாகும்.

இந்தப் பதிவுக்காக இவரின் படத்தைத் தேடலாம்னா, அஃபீஷியலான படமே எங்கும் கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமான விஷயம். பல இணைய குழுமங்களில் கேட்டும் பார்த்துட்டேன். ம்ஹூம். கிடைத்தால் மறுபடி பதிவிடுகிறேன். அதுவரை பாடலைப் பார்த்துவிடுவோம்.

***

பாரதி தேவிய நெனெ நெனெ
நிருத பகுதிகிது மனெ மனெ (பாரதி)

பாரதி தேவியை நினை மனமே
நிலையான பக்திக்கு இதுவே வழி வழி (பாரதி)

மாருதனர்தனாகி சுசரித கோமலாங்கி
சாரசாக்‌ஷி க்ருபாங்கி ஆபாங்கி (பாரதி)

மாருதனின் மனைவி நற்பண்புகளை உடைய இனிமையானவள்
தாமரை போன்ற கண்களை உடையவள், கருணையே உருவானவள் (பாரதி)

கிங்கிணி கிணிபாத பங்கஜ நூபுர
கன்கண குண்டித ஆங்க்ருத தேஹ (பாரதி)

கிங்கிணி என ஒலிக்கும் புனிதமான கொலுசு அணிந்தவள்
பளபளக்கும் ஆபரணங்களை உடலெங்கும் அணிந்தவள் (பாரதி)

சங்கர சுரவர வந்தித சரணே
கிங்கரி புரந்தரவிட்டலன கருணே (பாரதி)

சிவன் மற்றும் மற்ற கடவுளர்கள் இவளை வழிபடுவர்
இவள் புரந்தரவிட்டலனின் கருணையைப் பெற்றவள் (பாரதி)

***

திருமதி.சுதா ரகுனாதனின் குரலில் இந்தப் பாடல்:***


Wednesday, September 23, 2015

வாராய் நீ வாராய், கிருஷ்ணா!இன்றைய பாடலை இயற்றியது ஸ்ரீவாதிராஜர். மிகவும் எளிமையான பாடல். அஷ்டோத்திரத்தை அப்படியே பக்கத்து பக்கத்தில் போட்டு பாட்டு வரிகளில் எழுதியதைப் போல் உள்ளது. ஆகவே ஒவ்வொரு சொல்லுக்கும் பொருளைக் கொடுத்து விட்டால், பாட்டு எளிதாகப் புரிந்துவிடுகிறது.ராமனை, கிருஷ்ணனை வரவேற்கும் இந்தப் பாடல் இதோ.

பாரோ பேக பாரோ நீல மேக வர்ணா
பாரோ பேக பாரோ பேலபுரத சென்னா (பாரோ)

வாராய் வேகமாய் வாராய், கருமை நிறத்தவனே
வாராய் வேகமாய் வாராய், பேலூரின் சென்ன கேசவனே (பாரோ)

இந்திரெ ரமண கோவிந்தா பேக பாரோ
நந்தன கந்த முகுந்தா பேக பாரோ (பாரோ)

இலக்குமியின் கணவனே கோவிந்தனே வேகமாய் வாராய்
நந்தகோபனின் மகனே முகுந்தனே வேகமாய் வாராய் (பாரோ)

தீர உதார கம்பீர பேக பாரோ
ஹார அலங்கார ரகுவீர பேக பாரோ
ருத்தா அனிருத்தா நிரவத்யா பேக பாரோ
ஹத்தா நேரித்தா சுப்ரசித்தா பேக பாரோ (பாரோ)

வீரனே தயாளனே கம்பீரமான தோற்றம் உடையவனே
மாலை அலங்காரத்துடன் காணப்படும் ராமனே
எங்கும் வியாபித்திருப்பவனே, அனிருந்த்தனே, எவ்வித களங்கமும் இல்லாதவனே
யானையின் மேலேறி வரும், மிகவும் பிரபலமானவனே (பாரோ)

ரங்கா உத்துங்கா நரசிங்கா பேக பாரோ
மங்கள மஹிம சுபாங்கா பேக பாரோ
ஐயா விஜய சஹாயா பேக பாரோ
அஹ்யத்ரி வாசா ஹயவதனா பேக பாரோ (பாரோ)

ரங்கனே அழகிய சிங்கனே
மங்களகரமான மகிமை பொருந்தியவனே, அழகிய அங்கங்களைக் கொண்டவனே
தலைவனே, (பக்தர்களைக்) காத்திட வேகமாய் வருபவனே
பாம்பின் மேல் படுத்திருப்பவனே, ஹயவதனனே, வேகமாய் வாராய் (பாரோ)

***

வித்யாபூஷணரின் குரலில் இந்த அருமையான பாடல்:

***


Tuesday, September 22, 2015

ஆரத்தி’யின் விளக்கொளியில் இறைவனைப் பாருங்கள்.

ஆரத்தி’யின் விளக்கொளியில் இறைவனைப் பாருங்கள்.

இறைவனின் பூஜையில் செய்யப்படும் உபசாரங்கள் மொத்தம் 16 என்பர். (அதற்கு மேலும் சிலவற்றை சேர்ப்போரும் உண்டு). இறைவனை வரவேற்று, உட்கார ஆசனம் கொடுத்து, என்றவாறு போகும் அந்த 16 உபசாரங்கள் இங்கே விரிவாக உள்ளது. http://www.salagram.net/upacharas.html

இதில் தூபாரத்தி என்று ஒரு உபசாரம் சொல்லப்பட்டுள்ளது. தூபாரத்தி = நெய்யில் முக்கி எடுக்கப்பட்ட திரியில் விளக்கேற்றி இறைவனுக்கு காட்டப்படும் ஆரத்தி. அப்படிப்பட்ட ஆரத்தி பற்றி மட்டுமே ஒரு முழுமையான பாடலை இயற்றியுள்ளார் புரந்தரதாசர்.ஆரத்தி காட்டும்போது மணி அடிப்பது வழக்கம். வீட்டில் மணியுடன், ஜாங்கடே என்றழைக்கப்படும் கருவியையும் சிலர் அடிப்பர். கோயில்களில் கூடுதலாக மத்தளம், முரசு ஆகிய வாத்தியங்களும் வாசிப்பதுண்டு. தற்போது இவை அனைத்தும் தானியங்கிகள் ஆகிவிட்டன.இத்தகைய கருவிகளின் இனிமையான சத்தத்தின் நடுவே, சாம்பிராணி மற்றும் இன்னபிற நறுமண பொருட்களின் வாசத்துடன் நடந்து கொண்டிருக்கும் இறைவனின் பூஜையில், தற்போது காட்டப்படும் ஆரத்தியை பார்க்க வாருங்கள் என்று அழைக்கிறார் தாசர்.

வாருங்கள், நாமும் அவருடன் சேர்ந்து பூஜையை கவனிப்போம்.

***

தூபாரத்தியா நோடுவ பன்னி - நம்ம
கோபாலகிருஷ்ண தேவர பூஜைய (தூபாரத்தியா)

தூபாரத்தியை பார்க்கலாம் வாங்க - நம்
கோபாலகிருஷ்ணனின் பூஜையில்.. (தூபாரத்தியா)

மத்தளே ஜாகடே தாள தண்டிகே பேரி
தத்திமி திமிகெந்து ரவசகளு
அத்புத சங்க நாதகளிந்ததி நம்ம
பத்பனாப தேவர திவ்ய பூஜைய.. (தூபாரத்தியா)

மத்தளம், ஜாங்கடே, தாளத்துடன் கூடிய முரசு
தத்திமி திமி என்ற லயத்துடன்
அற்புதமான சங்க நாதத்துடன், நம்
பத்பனாபனின் பூஜையில்.. (தூபாரத்தியா)

அகரு சந்தன தூப குக்குள சாம்ப்ராணி 
மகமதிசுவ தாரதியு
விவிதாத ஏகாரதி பத்தி நம்ம
ஜகன்னாத விட்டல தேவர பூஜைய (தூபாரத்தியா)

அகர், சந்தனம், தூபம், குங்கிலியம், சாம்பிராணி
ஆகியவற்றின் நறுமணத்தினால் ஆன ஆரத்தி;
விதவிதமான ஏகாரத்தி (ஒற்றைத்திரி) ஏற்றி நம்
ஜகன்னாத விட்டலனின் பூஜையில்.. (தூபாரத்தியா)

ஹரி சர்வோத்தமன பக்தராதனா
பரம மங்கள மூர்த்தி பாவனனா
பர தெய்வவாதந்த ஸ்ரீ ரங்க நாதன
புரந்தர விட்டலன தேவர பூஜைய (தூபாரத்தியா)

அனைவரிலும் உத்தமனான, பக்தர்களின் பாதுகாவலனான
அழகிய வடிவம் கொண்டவனான
ஸ்ரீ ரங்கனாதனின், புரந்தர விட்டலனின் பூஜையில்.. (தூபாரத்தியா)

***
Monday, September 21, 2015

ரங்கன் எங்கு இருக்கிறான்?இறைவன் எங்கே இருக்கிறான்? நாம் கூப்பிட்ட நேரத்தில், சற்றும் தாமதிக்காமல், எப்படி நம்மை வந்தடைந்து, நம்மை துன்பத்திலிருந்து காப்பாற்றுவான் என்கிற கேள்விகளுக்கு பல்வேறு உதாரணங்களுடன் விளக்குகிறார் தாசர்.

பிரகலாதன் கூப்பிட்டவுடன் ஸ்ரீஹரி வந்தானே?
அஜாமிளன் தன் இறுதிகாலத்தில் நாராயணா என்றவுடன் ஓடோடி வந்தானே?
கஜேந்திரன் என்கிற யானையை எப்படி விரைந்து வந்து காப்பாற்றினான்?
திரௌபதிக்கு உதவியனும் அவன்தானே?

இப்படியெல்லாம் சொல்லிவிட்டு, முத்தாய்ப்பாக, இறைவன் எங்கும் இருப்பவன், அவனை எப்பொழுதும் நினைத்து, பாடி, தொழுது வருபவர்கள் மனதிலேயே இருந்து காப்பவன் என்று அருமையாக முடிக்கிறார்.
***

எல்லிருவனோ ரங்க எம்ப சம்சய பேடா
எல்லி பக்தரு கரெதரல்லே ஒதகுவன்னு (எல்லி)

எங்கே இருப்பானோ ரங்கன், என்கிற சந்தேகமே வேண்டாம்
எங்கே பக்தர் கூப்பிடுகிறாரோ, அங்கே உடனடியாக வந்து சேருவான் (எல்லி)

தரள பிரஹ்லாத ஸ்ரீ ஹரி விஸ்வமயனெந்து
பரெதோதலெ அவன பிதா கோபதிந்தா
ஸ்திரவாதடீ கம்பதொளு தோர எனலு
பரதிபரலு அதக்கே வைகுண்ட நெரமனயே (எல்லி)

சிறுவன் பிரகலாதன், ஸ்ரீ ஹரி உலகத்தில் எல்லா இடத்திலும் இருக்கிறான் என்று சொல்ல,
அவன் தந்தை கோபத்துடன்,
இந்த கம்பத்தில் ஹரி இருக்கிறாரா, காட்டு என்று சொல்ல
உடனடியாக அங்கே தோன்றினார் ஹரி. வைகுண்டம் என்பது அருகிலேயேவா இருந்தது? (எல்லி)

பாபகர்மவ மாடித அஜாமிளன எமபடரு
கோபதிந்த எளயுதிரே பீதியிந்த
காபுத்ரனனு கரெயே கேளி ரக்‌ஷிஸே
ஸ்வேத த்வீபவீதரகே அதி சமீப தல்லிஹுதே (எல்லி)

வாழ்க்கை முழுவதும் பாவங்களைச் செய்த அஜாமிளனைக் கூப்பிட்டுச் செல்ல வந்த எமதூதர்கள்
கோவத்துடன் அவனை இழுத்தனர்; அப்போது பயத்துடன்
நாராயணனை (அஜாமிளன்) கூப்பிட்டதும், வந்தானே,
ஸ்வேதத்வீபம் என்னும் இடம் நமக்கு மிக அருகிலேயே இருக்கிறதா என்ன? (எல்லி)

கரிராஜனனு நெகளு நுங்குதிரே பயதிந்தா
மொரெயிடலு கேளி அதி த்வரதிதிந்தா
கருணதலி பந்தனவ பிடிசலா கஜராஜ
இருவ சரசிகே அனந்தசானவு மும்மனெயே (எல்லி)

கஜேந்திரன் என்னும் யானை (தன் காலை முதலை பிடித்ததும்) பயத்துடன்
இறைவனிடம் முறையிட்டதும், அதிவேகமாக
கருணையுடன் சென்று முதலையிடமிருந்து அந்த யானையை மீட்டினான்; அந்த யானை
இருந்த குளம், அனந்தனின் வீட்டின் ஒரு பகுதியா என்ன? (எல்லி)

குருபதியு த்ரௌபதிய சீரெயனு செளெயதிரே
தருணி ஹா கிருஷ்ணா எந்தொதரே கேளி
பரதிந்தா அக்‌ஷயாம் பரவித்தா
ஹஸ்தினாபுரிகு த்வாராவதிகு கூகளதெய (எல்லி)

குரு வம்சத்தின் அரசன், திரௌபதியின் சேலையை இழுக்கும்போது
அந்தப் பெண், கிருஷ்ணா என்று கூப்பிட்டத்தைக் கேட்டு
வந்து முடிவில்லாத ஆடையை அளித்த (அந்த கிருஷ்ணனின் இடமான)
துவாரகை, ஹஸ்தினாபுரத்திற்கு கூப்பிடு தூரத்திலா இருந்தது? (எல்லி)

ஹணுமஹத்துகளல்லி பரிபூர்ண நெந்தெனசி
கணனெயில்லதா மஹா மஹிம நெனிபா
கனக்ருபா நிதி நம்ம புரந்தரவிட்டலன
நெனெதவர மனதல்லி இஹனெம்ப பிருதிரலு (எல்லி)

எங்கும் வியாபித்திருக்கும், சர்வ வல்லமை படைத்த, பரிபூர்ணனான
எண்ணில் அடங்காத மகிமைகளைக் கொண்ட,
கருணைக்கடலான நம் புரந்தரவிட்டலனானவன்,
(அவனை) நினைத்தவரின் மனதில் கண்டிப்பாக இருப்பான் (இது நிரூபிக்கப்பட்ட உண்மை) (எல்லி)

***


இந்தப் பாடலின் ஒலிவடிவம் இங்கே:***


Friday, September 18, 2015

அனும, பீம, மத்வர்.த்வைத சித்தாந்தத்தை நிறுவிய ஸ்ரீமத்வர், முந்தைய பிறப்புகளில் அனும மற்றும் பீமன் அவதாரங்களைக் கொண்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது. புரந்தரதாசர் தன் பல பாடல்களில் இந்த மூன்று அவதாரங்களைப் பற்றியும் (ஒரே பாடலில் வருமாறு) பாடியுள்ளார். அதில் ஒன்றுதான் இந்தப் பாடல். அனுமன், பீமன் மற்றும் மத்வருக்கு ஒவ்வொரு பத்தி, அவர்களில் சிறப்புகளைப் பற்றி சொல்லி, புரந்தரவிட்டலனின் பெயரோடு பாடலை முடிக்கிறார்.வீர ஹனும பஹு பராக்ரமா
சுஞானவித்து பாலிசென்ன ஜீவரோத்தமா (வீர)

வீரனான ஹனுமனே, வீரனே
நல்ல ஞானத்தைக் கொடுத்து என்னைக் காப்பாற்று ஜீவர்களில் உத்தமனே (வீர)

ராம தூத நெனெசி கொண்ட நீ
ராக்‌ஷசர வனவரெல்ல கித்து பந்தே நீ
ஜானகிகே முத்ரே இத்து ஜகத்திகெல்ல ஹருஷவித்து
சூடாமணிய ராமகித்து, லோகக்கே முட்டெனிசி மரெவ (வீர)

ராமனின் தூதனாக அறியப் படுபவன் நீ
அரக்கர்களின் வனங்களைக் கொன்றுவிட்டு வந்தவன்
(ராமனிடமிருந்து கொண்டு வந்த) மோதிரத்தை சீதையிடம் கொடுத்து, முழு உலகத்திற்கும் ஆனந்தமளித்தவன்
(பின்னர் சீதையிடமிருந்து) சூடாமணியை ராமனிடம் கொடுத்து, உலக மக்களின் பிரியத்திற்கு பாத்திரமானவன் (வீர)

கோபி சுதன பாத பூஜிஸி
கதெய தரிசி பகாசுரன சம்ஹரிசிதே
த்ரௌபதிய மொரெய கேளி மத்தே கீசகன கொந்து
பீம நெம்ப நாம தரிசி சங்க்ராம தீரனாகி ஜகதி (வீர)

கோபிகையின் மகனான கிருஷ்ணனின் பாதங்களை பூஜித்தவன்
கதையைக் கொண்டு பகாசுரனைக் கொன்றவன்
திரௌபதியின் கோரிக்கையை ஏற்று, கீசகனைக் கொன்று
பீமன் என்ற பெயரைக் கொண்டு, போர்களை வென்றவன் (வீர)

மத்ய கேஹனல்லி ஜனிஸி நீ
பால்யதல்லி மஸ்கரீய ரூப கொண்டே
சத்யவதிய சுதன பஜிஸி சன்முகதி பாஷ்ய மாடி
சஜ்ஜனர பொரெவ முத்து புரந்தர விட்டலன தாச (வீர)

மத்யகேஹ பட்டர் என்பவர் வீட்டில் பிறந்தவன்
சிறிய வயதில் துறவி ஆனவன்
சத்யவதியின் மகனான வியாஸரை வணங்கி, பல பாஷ்யங்களை (நூல்களுக்கான விளக்கங்களை) எழுதியவன்
நல்லவர்களைக் காக்கும் ஸ்ரீ புரந்தர விட்டலனின் தாசன் (வீர)

***


இந்தப் பாடலை பாடி, வரிகளுக்குத் தகுந்தாற்போல் படங்களைக் காட்டும், மைசூர் ராமசந்திராச்சார் அவர்கள்.Thursday, September 17, 2015

பிள்ளையாரப்பா!


நம்மம்ம சாரதே!

மிகவும் பிரபலமான இந்தப் பாடலை இயற்றியவர் கனகதாசர். இன்றைய நாயகனான விநாயகரைக் குறித்து பாடியதாகும். அவரின் தாயான பார்வதியிடம், விநாயகரின் பெருமைகளைக் கூறி, இப்படிப்பட்டவர் யார் - அது நம் கணபதிதானே என்று பதில் கூறுவதைப் போல் அமைந்துள்ளது இப்பாடல்.


நம்மம்ம சாரதே உமா மகேஸ்வரி
நிம்மொளகிவன் யாரம்மா (நம்மம்ம)

எங்கள் தாயே சாரதே, உமா மகேஸ்வரி,
உன் உள் உறைபவன் யாரம்மா (நம்மம்ம)

கொம்மகொளன வைரி சுதனாத சொண்டில
ஹெம்மெய கணநாதனே கணம்மா (நம்மம்ம)

பூக்களால் ஆன வில் ஏந்திய மன்மதனின் எதிரியான சிவனின் மகன்,
நம் பெருமைமிகு கணபதிதான் அவன் (நம்மம்ம)

மோரெ கப்பின பாவ மொரத கலத கிவி
கோரெ தாடெயன் யாரம்மா
மூரு கண்ணன சுத முரிதிட்ட சந்திரன
தீரத கணநாதனே அம்மய்யா ( நம்மம்ம)

கருப்பு நிற (யானை போன்ற) முகம், முறத்தைப் போன்ற காதுகள்,
தந்தங்களை உடையவன் யாரம்மா?
மூன்று கண்களை உடையவனின் மகன், சந்திரனை முறித்தவன்,
வீரமான கணபதியே, நம் கணபதியே ( நம்மம்மா)

உட்டதட்டியு பிகிதுட்ட சல்லனதா திட்டதான் இவன் யாரம்மா
பட்டதா ராணி பார்வதியா குமாரனு
ஹொட்டேயா கண நாதனே கணம்மா (நம்மம்மா)

இடுப்பில் வேட்டியை இறுக்கி கட்டியவன், (அவனை வணங்குபவர்களின்)
எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் அகற்றுபவன்,
சிவனின் ராணி பார்வதியின் குமாரன் தொந்தியை உடைய கணபதியே, நம் கணபதியே ( நம்மம்மா)

ராசி வித்யேய பல்ல ரமணி கொம்பலனொல்ல பாஷிக இவன்யாரம்மா
லேசாகி ஜனர சலகுவ காகி நெலெயாதி கேசவ தாச காணே (நம்மம்மா)

அளவில்லா ஞானத்தை உடையவன்
பெண்களின் மேல் மோகம் கொள்ளாதவன்
மக்களின் துன்பங்களைப் போக்கும் காகிநெலெ
ஆதிகேசவனின் தாசன், இந்த கணபதி.. (நம்மம்மா)

***

வித்யாபூஷணரின் குரலில் இந்த அருமையான பாடலைக் கேளுங்கள்.Friday, June 5, 2015

போகாதே ரங்கா போகாதே!

கிருஷ்ணா நீ பேகனே பாரோன்னு கிருஷ்ணனைக் கூப்பிட்டு வீட்டில் இருக்கச் சொன்ன தாசர்கள், அந்தக் கிருஷ்ணனை வெளியில் போகவேண்டாமென்றும் பாடியுள்ளனர். வெளியில் போனால் என்னென்ன பிரச்னைகள் வரும், யாரெல்லாம் அவனைக் கூப்பிட்டுக் கொண்டுபோக காத்திருக்கின்றனர் என்றெல்லாம் இந்த அருமையான பாட்டில் பாடியுள்ளார் புரந்தரதாசர்.

***
போகாதிரேலோ ரங்கா பாகிலிந்தாச்சே
பாகவதரு கண்டு எத்தி கொண்டைவரு (போகாதிரேலோ)

கதவுக்கு அந்தப்பக்கம் (வெளியே) போகாதே, ரங்கா
(எப்போதும் உன்னை நினைத்து, தேடிக் கொண்டிருக்கும்) பாகவதர்கள், உன்னைக் கண்டு தூக்கிப் போய்விடுவார்கள் (போகாதிரேலோ)

சுரமுனிகளு தம்ம ஹ்ருதய கமலதல்லி
பரமாத்மன காணதே அரசுவரு
தொரகத வஸ்துவு தொரகிது தமகெந்து
ஹருஷதிந்தலி நின்ன கரெதெத்தி கொம்புவரு (போகாதிரேலோ)

முனிவர்கள் தங்கள் இதயத்தில்
இறைவனைக் காணாமல் வருந்தும் நேரத்தில்
கிடைக்காத பொக்கிஷம் நமக்குக் கிடைத்தது என்று
ஆனந்தத்துடன் உன்னை கையில் தூக்கிக் கொண்டுவிடுவார்கள் (போகாதிரேலோ)

அகணீத குண நின்ன ஜகத நாரியரெல்ல
ஹகெயாகி நுடிவரோ கோபாலனே
மகுகள மாணிக்யன தகலித்து கரகெந்து
வேகதிந்தலி பந்து பிகிதப்பி கொம்புவரு (போகாதிரேலோ)

எண்ணற்ற நற்குணங்களையுடைய உன்னை, ஊரிலுள்ள பெண்கள் அனைவரும்
(உன் குறும்புகளை) மறந்து, உன்னைக் கூப்பிடுவார்கள், கோபாலனே
குழந்தைகளில் முதல்வனே, உன்னுடன் இருக்க வேண்டுமென்று
வேகமாக வந்து, வாரி அணைத்துக் கொள்வார்கள் (போகாதிரேலோ)

திட்ட நாரியரெல்ல இஷ்டவ சலிசெந்து
அட்டட்டி பென்னட்டி திருகுவரோ
ஸ்ருஷ்டீச புரந்தர விட்டல ராயனே
இஷ்டிஷ்டு பெண்ணெய கொட்டேனோ ரங்கய்யா (போகாதிரேலோ)

விரதங்களை செய்யும் பெண்மணிகள், தங்கள் விரும்பியதை அடைய
(உன்னை) பின்தொடர்ந்து எப்போதும் சுற்றிக் கொண்டிருப்பர்
உலகத்தைப் படைத்த புரந்தர விட்டலனே
உனக்கு கொஞ்சமே கொஞ்சம் வெண்ணையைக் கொடுக்கிறேன் ரங்கய்யா (போகாதிரேலோ) ***
இதே பாடலை அருமையாகப் பாடியுள்ள Dr.ராஜ்குமார்:

 

 ***

Pogadirelo Ranga Lyrics and Meaning in Tamil.

Wednesday, June 3, 2015

உலகம் மாயை - தற்காலிகமானதுபூஜை புனஸ்காரங்கள், கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் வணிகத்தில் ஈடுபட்டு கருமியாக வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருந்த புரந்தர தாசர், அனைத்து செல்வங்களையும் தானம் செய்துவிட்டு, தினப்படி பிக்‌ஷை பெற்று வாழலானார் என்பது நமக்குத் தெரியும். அப்படிப்பட்ட வைராக்கியம் கொண்டவர், அதைப் பற்றி பல பாடல்களாகவும் எழுதியுள்ளார்.முதலில் இந்தப் பாடலைப் பார்த்துவிடுவோம். சிறு விளக்கம் பின்னர்.

அல்லிதே நம்மனே
இல்லி பந்தே சும்மனே (அல்லிதே)

நம்ம வீடு அங்கே இருக்கிறது;
நான் இங்கே வந்தது தற்காலிகமாகத்தான் (அல்லிதே)

கட பாகிலிரிசிதா கள்ள மனே இது
முததிந்த லோலாடோ சுள்ளு மனே
இடிராகி வைகுண்ட வாச மாடுவந்தா
பதுமனாபன திவ்ய பதுகு மனே (அல்லிதே)

வாசல், கதவுகளுடன் கூடிய பொய்யான வீடு இது
மிகவும் பிரியத்துடன் கட்டிக் காக்கப்படும் பொய்யான வீடு இது
வைகுண்டத்தில் வாசம் செய்யும்
பத்பனாபன் வந்து தங்கி இதை தன் வீடாகிக் கொண்டான் (அல்லிதே)

மாளிகேமனேயெந்து நெச்சி கெடலி பேடா
கேளய்யா ஹரிகதே ஸ்ரவணங்களா
நாளே யமதூதரு பந்தெளெதொவ்யாக
மாளிகே மனெயு சங்கத பாரதய்யா (அல்லிதே)

மாட மாளிகை என்று நினைத்து ஏமாற வேண்டாம்
இறைவனின் கதைகளை, சொற்பொழிவுகளைக் கேட்கவும்
நாளையெ எமதர்மனின் தூதர்கள் வந்து உன்னை கூப்பிடும்போது
இந்த மாட மாளிகைகள் உன் கூட வராது (என்று தெரிந்துகொள்) (அல்லிதே)

மடதி மக்களெம்ப ஹம்பல நினகேகோ
கடுகொப்புதனதல்லி மெரெயதிரோ
ஒடெய ஸ்ரீ புரந்தரவிட்டல ராயன
த்ருட பக்தியல்லி நீ பஜிசெலோ மனுஜா (அல்லிதே)

மனைவி மக்கள் என்று (எப்போதும்) அவர்களையே எண்ணி ஏங்கிக் கொண்டிருக்காதே
எப்போதும் ஆணவத்துடன் சுற்றிக் கொண்டிருக்காதே
நம் முதல்வன் ஸ்ரீ புரந்தரவிட்டலன் மேல்
பக்தி கொண்டு, அவரைப் பற்றி எப்போதும் பஜித்துக் கொண்டிருப்பாய் நீ (அல்லிதே)

***

இந்தப் பாடலை இரு விதமாகப் புரிந்து கொள்ளலாம். வீடு என்பதை இந்த உலகம் அல்லது இந்த உடல் என்றும் பொருள் கொள்ளலாம். இந்த உலகம் தற்காலிகமானது, நாம் இங்கு வந்தது நிரந்தரமானதல்ல என்று கூறுவது போலவும், ஆத்மா இந்த உடலுக்கு வந்து சேர்ந்தது தற்காலிகமானதுதான் என்றும் பொருள் கொள்ளலாம்.

மாட மாளிகைகள், உறவுகள் எவையும் இறுதியில் எமதூதர்கள் வந்து கூப்பிடும்போது நம்முடன் வராது. அதனால் ஆணவத்துடன் சுற்றித் திரியாமல், அந்த புரந்தர விட்டலனை நினைத்துக் கொண்டிருப்பாயாக என்று கூறுகிறார் தாசர்.

Allidhe Namma Mane - Purandharadasar
***

Monday, June 1, 2015

பாடல்களை எப்படிப் பாட வேண்டும்?


மலகி பரமாதரதி பாடலு
குளிது கேளுவா குளிது பாடலு நிலுவா
நிந்தரே நலிவா, நலிதரே ஒலிவே நிமகெம்பா
சுலபனோ ஹரி தன்னவரனர
களிகே பிட்டகலனோ ரமாதவன
ஒலிசலரியதே பாமரரு பளலுவரு பவதொளகே..சரணம், பல்லவி etc கொண்ட பாடல் அல்ல இன்று பார்க்கப்போவது. ஒரு சிறிய ஸ்லோகம் போன்றதொரு வரிகள் மட்டுமே. பாடல்களுக்கு முன் இப்படிப்பட்ட ஸ்லோகங்களைப் பாடுவது வழக்கம்.

மேற்சொன்ன புகழ்பெற்ற வரிகள், ஜகன்னாததாசர் எழுதிய ஹரிகதாம்ருத சாரம் என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

இதன் பொருள்?

இறைவனைப் பற்றிப் பாட வேண்டும். எப்படிப் பாடுவது? உட்கார்ந்து? நின்று? நடந்து? எப்படிப் பாடினால், அவனுக்குப் பிடிக்கும்? எப்படிப் பாடினால், எப்படி கேட்பான்? தாசர் சொல்கிறார் - படுத்துக் கொண்டு கூட அவன் புகழ் பாடலாம்.

மலகி பரமாதரதி பாடலு குளிது கேளுவா
படுத்துக் கொண்டு (அவன் புகழ்) பாடினால், உட்கார்ந்து கேட்பான்

குளிது பாடலு நிலுவா
உட்கார்ந்தவாறு பாடினால், நின்றுகொண்டு கேட்பான்

நிந்தரே நலிவா
நின்றுகொண்டு பாடினால், ஆடிக்கொண்டே கேட்பான்

நலிதரே ஒலிவே நிமகெம்பா
நாம் ஆடிக்கொண்டே பாடினால், என்னையே உங்களுக்குக் கொடுப்பேன் என்பான்

சுலபனோ ஹரி தன்னவரனர களிகே பிட்டகலனோ
ஹரியை கண்டுபிடிப்பது மிகவும் சுலபம்; அவன் தன் பக்தர்களை விட்டு ஒரு கணமும் அகலாதவன்

ரமாதவன ஒலிசலரியதே பாமரரு பளலுவரு பவதொளகே
(இந்த உண்மைகளை அறியாமல்) அந்த லட்சுமிபதியை எப்படி திருப்திப்படுத்துவது என்று அறியாமல் மக்கள் சம்சார சாகரத்தில் மூழ்கித் திளைக்கிறார்களே!

***

அது சரி, இதற்கு உதாரணங்கள் உண்டோ? உண்டு.

பீஷ்மர். படுத்துக் கொண்டே சொன்னது விஷ்ணு சஹஸ்ரநாமம். குனிந்து கேட்ட கிருஷ்ணன் சொன்னது - நான் சொன்ன பகவத்கீதையை விட என்னைப் பற்றி சொன்ன விஷ்ணு சஹஸ்ரநாமம் மிகச் சிறந்தது.

புண்டரீகன். தன் தாய் தந்தையருக்கு சேவை செய்தவாறு இறைவன் புகழ் பாடுகையில், அவன் போட்ட செங்கல் மேல் நின்று விட்டலன் அதைக் கேட்டு மகிழ்ந்தான்.

பிரகலாதன். தூண் முன் நின்றவாறு இறைவனைப் பாடிய பிரகலாதன் முன் இறைவன் தோன்றி மகிழ்வித்தான்.

நாரதர். பாடி ஆடியவாறு திரியும் நாரதர் மேல் இறைவனுக்கு அதிக பிரியம் என்பது நாம் படித்து அறிந்ததே.

***


Friday, February 20, 2015

ராமா, உன் கால்களைக் காட்டு!

ராமா, உன் கால்களைக் காட்டு!

ஸ்ரீ ரங்கனாதனின் கால்களின் பெருமையைப் பற்றி இந்தப் பாட்டில் பார்த்தோம்.அப்படிப்பட்ட பாதங்களைப் பற்றி, இவ்வுலகில் வேறொன்றினைப் பற்றியும் கவலைப் படாமல், நமக்கு வேண்டிய அனைத்தையும் அந்த ராமனே பார்த்துக் கொள்வான் என்ற பொருளுடன் ஸ்ரீபாதராயர் பாடும் பாடல் இது.***

ஸ்ரீராமா நின்ன பாதவ தோரோ
மோஹன்ன குணதாமா நின்ன மோஹத பாதவ (ஸ்ரீராமா)

ஸ்ரீராமா உன் பாதங்களைக் காட்டு
நற்குணங்கள் அனைத்தையும் கொண்டவனே, உன் அழகிய பாதங்களைக் காட்டு (ஸ்ரீராமா)

வரகுணஜால சுரகணலோல 
கருணா பால தருணி பரிபால (ஸ்ரீராமா)

உன்னதமான குணங்களைக் கொண்டவனே, கடவுளர்கள் சூழ் வலம் வருபவனே
கருணையுள்ளம் கொண்டவனே, பெண்ணைக் (திரௌபதி, அகலிகை) காப்பாற்றியவனே (ஸ்ரீராமா)

அஜபவ புஜித கஜவர பாவித 
சுஜனர சேவித த்ரிஜக வந்தித (ஸ்ரீராமா)

அனைவர்களாலும் பூஜிக்கப்படுபவனே; யானைக்கு வரம் கொடுத்து காத்தவனே
மக்களால் வணங்கப்படுபவனே, மூவுலகிலும் கொண்டாடப்படுபவனே

அங்கஜ ஜனக விஹங்க துரங்க
துங்க விக்ரம ஸ்ரீ ரங்க விட்டலா (ஸ்ரீராமா)

கருணையுள்ளம் கொண்டவனே, தந்தையே, சூரியனே, (சூரியனைப் போல்) வேகமாகப் பயணிப்பவனே,
உயர்ந்தவனே வீரனே ஸ்ரீ ரங்க விட்டலா (ஸ்ரீராமா)

****

***

Sri Rama Ninna Padhava Thoro by SriPadaRayaru


Monday, February 16, 2015

சிவாய நம ஓம்!வைணவ பக்தியை பரப்பிய தாசர்களின் த்வைத சித்தாந்தத்தில், சிவனுக்கும் ஒரு இடம் இருப்பதால், அவரைப் பற்றியும் பற்பல பாடல்களை பாடியிருக்கின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு பாடலை ஏற்கனவே இங்கே பார்த்திருக்கிறோம். ஹரிதாசர்கள் இயற்றிய சிவன் பாடல்கள், ஸ்லோகங்கள் அனைத்தும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.இன்றைய பாடலைப் பாடியவர் புரந்தரதாசர். ஆலகால விஷம், மார்க்கண்டேயன், கும்பகோணத்தில் இருக்கும் கும்பேஸ்வரன் ஆகிய சம்பவங்கள் / இடங்களைப் பற்றிப் பாடும் தாசர், சிவனை, விபூதி அணிந்த, ராமரை வணங்கும் ஒரு வைஷ்ணவர் என்கிறார்.

***

சந்திரசூட சிவ சங்கர பார்வதி ரமணனே நினகே நமோ நமோ
சுந்தர மிருகவர பினாக தனுகர கங்கா ஷிர கஜசர்மா அம்பரதர (சந்திரசூட)

சந்திரனை தரித்தவனே, சிவசங்கரனே, பார்வதியின் கணவனே, உன்னை வணங்குகிறேன்
அழகான மிருகங்களை (மான்) உடையவனே, பினாக (என்னும் வில்) ஏந்தியவனே, தலையில் கங்கையைக்
கொண்டவனே, யானையின் தோலை அணிந்தவனே (சந்திரசூட)

நந்தி வாஹனா ஆனந்ததிந்த மூர்ஜகதி மெரெவ நீனே
அந்து அம்ருத கடதிந்த உடிசித விஷ தந்து புஜிசிதவ நீனே
கந்தர்ப்பன க்ரோததிந்த கண் தெரெது கொந்த உக்ர நீனே
இந்திரேச ஸ்ரீ ராமன பாதவ சந்ததி பொகளுவ நீனே (சந்திரசூட)

நந்தி வாகனத்தில் ஆனந்தத்துடன் மூன்று உலகங்களையும் சுற்று வருபவன் நீயே
அன்று அமிர்தத்தை எடுப்பதற்காக கடைந்தபோது வந்த விஷத்தை குடித்தவன் நீயே
காமதேவனை ஆத்திரத்துடன் (மூன்றாவது) கண் திறந்து கொன்ற கோபக்காரன் நீயே
இந்திரன் வணங்கக்கூடிய ஸ்ரீராமனின் பாதங்களை எப்போதும் தொழுபவன் நீயே (சந்திரசூட)

பாலம்ருகண்டன காலனு எளெவாக பாலிசிதவ நீனே
வாலயதி கபால பிடிது பிக்‌ஷா பேடோ திகம்பர நீனே
காலகூடவனு பானமாடித நீலகண்டனு நீனே
ஜாலமாடித கோபாலனெம்ப ஹெண்ணிகே மருளாதவ நீனே (சந்திரசூட)

மிருகண்டு முனிவரின் மகனை (மார்க்கண்டேயன்) எமன் பிடிக்கும்போது காப்பாற்றியவன் நீயே
கைகளில் மண்டையோட்டை பிடித்து, பிக்‌ஷை எடுக்கும் திகம்பரன் (வானத்தை உடையாக உடுத்தியவன்) நீயே
காலகூட விஷத்தை குடித்த நீலகண்டனும் நீயே
அரக்கர்களிடமிருந்து அமிர்தத்தைக் காப்பாற்ற மோகினி வேடமிட்ட விஷ்ணுவின் மேல் மோகம் கொண்டவன் நீயே

(சந்திரசூட)

தரெகே தக்‌ஷிண காவேரி தீர கும்பபுர வாசனு நீனே
கொரளலு ருத்ராக்‌ஷ பஸ்மவு தரிசித பரம வைஷ்ணவ நீனே
கரதல்லி வீணெய நுடிசுவ நம்ம உரகபூஷணனு நீனே
கருடகமன ஸ்ரீ புரந்தர விட்டலகே ப்ராண ப்ரியனு நீனே (சந்திரசூட)

தெற்கில், காவேரி நதிக்கரையில், கும்பேஸ்வரனாக வசிப்பவன் நீயே
கழுத்தில் ருத்ராக்‌ஷம், சாம்பல் அணிந்த பரம வைஷ்ணவன் நீயே
கையில் வீணையை மீட்டுபவன், பாம்பை மாலையாக அணிந்தவன் நீயே
கருட வாகனன் ஸ்ரீ புரந்தர விட்டலனின் உயிருக்கு உயிரான நண்பன் நீயே (சந்திரசூட)

***

****

Chandra Chooda Shiva Sankara by Purandara Dasar.

Friday, February 13, 2015

ஸ்ரீ ராகவேந்திராய நமஹ..

ஸ்ரீ ராகவேந்திராய நமஹ..

ஜகன்னாத தாசர்.


ஹரிதாசர்களில் முக்கியமானவர்களில் இவரும் ஒருவர். 18ம் நூற்றாண்டில், 80 வருடங்கள் வரை வாழ்ந்தவர். தன் முதல் 40வருடங்களுக்குப் பிறகு, விஜயதாசர் மற்றும் கோபாலதாசர்களில் அருள்+ஆசியால் தாச தீட்சை பெற்று ஜகன்னாத தாசர் ஆனவர். பின்னர் பற்பல பாடல்கள் இயற்றி, தன் 80வது வயதில், ஹரிகதாம்ருத சாரம் என்னும் மிகவும் உன்னதமான நூலைப் படைத்தவர்.

இந்த தளத்தில் இது இவரது முதல் பாடலாகும். மந்திராலய பல்கலைக்கழகத்தில் படித்து, ராகவேந்திரரின் தீவிர பக்தரான இவர், ராகவேந்திரர் மேல் பல பாடல்களைப் பாடியுள்ளார். இதுவும் ஒரு புகழ் பெற்ற பாடலே.***

ரோக ஹரனே க்ருபா சாகர ஸ்ரீகுரு
ராகவேந்திரா பரிபாலிஸோ (ரோக)

நோய்களைத் தீர்ப்பவனே, கருணைக் கடலே,
ஸ்ரீ ராகவேந்திரனே, எனக்கு வழிகாட்டு (காப்பாற்று / ஆட்கொள்வாயாக) (ரோக)

சந்தத துர்மத த்வாந்த திவாகர
சந்த வினுத மாத லாலிஸோ (ரோக)

தடையில்லாமலும் எந்த பாரபட்சம் இல்லாமலும் (அனைவருக்கும் கிடைக்கும்) சூரிய ஒளியைப் போன்றவனே
அனைத்து திசைகளிலும் ஆனந்தத்தை பரப்பும் நல்ல சொற்களையே (எங்களைப்) பேசச் செய் (ரோக)

பாவன காத்ர சுதேவ வரனே தவ
சேவக ஜனரொளகாடிஸோ (ரோக)

தூய்மையான உடலைக் கொண்டவனே, கடவுளர்களே வணங்கத் தக்கவனே
உன் சேவகர்களாகிய (தாசர்களாகிய) எங்களை ஆட்கொள்வாயாக (ரோக)

கன்ன மஹிம ஜகன்னாத விட்டல ப்ரிய
நின்ன ஆராதனே மாடிஸோ (ரோக)

(அனைத்திலும்) ஆழ்ந்த அறிவுடைய, மகிமை பொருந்தியவனே, (இந்த) ஜகன்னாத விட்டலனின் தாசனை,
உன்னை எப்போதும் பூஜிக்கச் செய்வாயாக (ரோக)

***

இந்தப் பாடலை மிகவும் அற்புதமாக, மனமுருகி பாடியிருக்கும் வித்யாபூஷணர்.***

Roga Harane by Jagannatha Dasar.Monday, February 9, 2015

ரங்கனாதனின் சின்ன பாதங்கள்..

ரங்கனாதனின் சின்ன பாதங்கள்..

நம் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் வேங்கடேஸ்வர கோயிலில் ரங்கனாதரும் ஒரு சன்னிதியில் எழுந்தருளியிருக்கிறார். கோயிலின் இணையதளம் இங்கே. ரங்கனாதர் உயரம் 13.5அடி. பிரம்மாண்டமான அழகான உருவம். அவரைப் பார்க்கப் போகும்முன்னர், பிரகாரத்திலேயே, அவர் பாதங்களைப் பார்க்கும் விதமாக சுவற்றில் ஒரு ஜன்னலைப் போன்று ஏற்படுத்தியிருக்கின்றனர். இதன் வழியாக அவர் பாதங்களைப் பார்த்தபிறகு, சன்னிதியில் போய், கால்கள் இருக்கும் திசையிலிருந்து, தலை இருக்கும் திசை நோக்கி நகர்ந்து, அவர் அழகைப் பருகியவாறே, வெளியே வர மனமின்றி வருவோம்.

அந்த ரங்கனாதனின் பாதங்களில் (தங்கக் கவசத்தில்) பல்வேறு சின்னங்கள் இருக்கும். அவை என்னென்ன? உற்றுப் பார்த்தாலும் சரிவர புரியவில்லை. கூகுளில் தேடியதில் கிடைத்தது இந்தப் படம்.ஆனால், ஸ்ரீபாதராயரின் இந்தப் பாடலைப் பார்த்ததும் அனைத்து சந்தேகங்களும் தீர்ந்தன. அந்தப் பாதங்களில் என்னென்ன இருக்கும்? அவரே சொல்கிறார் பாருங்கள். இவ்வளவு சிறப்பு மிக்க பாதங்களைக் கண்ட ஆனந்தத்தில் உருவாகியது இந்த புகழ்பெற்ற அவரது பாடல்.***


இக்கோ நோடே ரங்கனாதன சிக்க பாதவ
சிக்கிதே ஸ்ரீ லக்‌ஷ்மி பதிய திவ்ய பாதவ (இக்கோ)

இங்கே பாருங்க ரங்கனாதனின் சின்ன பாதங்களை
(காணக்) கிடைத்தன ஸ்ரீ லக்‌ஷ்மிபதியின் திவ்யமான பாதங்கள் (இக்கோ)

சங்க சக்ர கதா பத்ம அங்கித பாதவ
அங்குச குலிஷ த்வஜா ரேகா அங்கித பாதவ
பங்கஜாசனன ஹ்ருதயதல்லி நலியுவ பாதவ
சங்கட ஹரண வேங்கடேசனன திவ்ய பாதவ (இக்கோ)

சங்க சக்ர கதா பத்ம ஆகியவை இருக்கும் பாதங்கள்
அங்குசம் கோடரி கொடி ரேகைகள் (அல்லது சூரியனின் ரேகைகள்) இருக்கும் பாதங்கள்
தாமரை ஆசனத்தில் வீற்றிருக்கும் லக்‌ஷ்மியின் இதயத்தில் இருக்கும் பாதங்கள்
கஷ்டங்களைப் போக்கும் வேங்கடேசனின் திவ்ய பாதங்களை (இக்கோ)

லலனே லக்‌ஷ்மி அங்கதல்லி நலியுவ பாதவ
ஜலஜாசனன அபீஷ்டவெல்ல சலிசுவ பாதவ
மல்லர கெலிது கம்சாசுரன கொந்த பாதவ
பலிய மெட்டி பாகிரதிய படெத பாதவ (இக்கோ)

(அவன்) மனைவியான லக்‌ஷ்மியின் ஒரு பாகமாக விளங்கும் பாதங்கள்
பிரம்மனின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றும் பாதங்கள்
மல்லர்களை வென்று கம்சனைக் கொன்ற பாதங்கள்
பலிச் சக்கரவர்த்தியை மிதித்து பாகிரதியை அடைந்த பாதங்களை (இக்கோ)

பண்டெய பாலெய மாடித உத்தண்ட பாதவ
பண்டியொளித்த சகடாசுரன ஒத்த பாதவ
அந்தஜ ஹனும புஜதொளுப்புவ அந்தத பாதவ
கண்டேவே ஸ்ரீ ரங்க விட்டலன திவ்ய பாதவ (இக்கோ)

பாறையை ஒரு அழகிய பெண்ணாக மாற்றிய அசாதாரணமான கால்கள்
வண்டியைத் தள்ளி சகடாசுரனைக் கொன்ற பாதங்கள்
அனுமனின் தோள்களில் ஏறும் கால்கள்
கண்டேனே ஸ்ரீ ரங்க விட்டலனின் திவ்யமான கால்களை (இக்கோ)

***

Thursday, February 5, 2015

கோவிந்தன், கிருஷ்ணன் வந்தான்...


இன்னொரு எளிமையான புரந்தர தாசர் பாடல்.

திருவீதி வலம் வந்து, மக்களுக்கு தரிசனம் கொடுக்கும் உற்சவரைப் பார்த்து பாடும்படியாக அமைந்த இந்த புகழ்பெற்ற பாடலை இன்று பார்ப்போம்.
***

பந்த நோடி கோவிந்தா கிருஷ்ணா
பந்த பந்த ஆனந்த தீர்த்த முனீந்த்ர வந்த்ய
ஹரி நந்த முகுந்தனு (பந்த)

கோவிந்தன், கிருஷ்ணன் வந்தான் பாருங்கள்
ஆனந்த தீர்த்தர் (மத்வர்) வணங்கிய ஹரி, முகுந்தன் வந்தான் (பந்த)

சரசிஜாக்‌ஷ தொரெயே சர்வர பொரெவ தயாநிதியே
கரிய வரன சக்ரதி உத்தரிசித
ஹரி நம்ம பாலிப பால்கடலொடெயனு (பந்த)

தாமரைக் கண்ணன், (நம்) தலைவன், அனைவரையும் ஆட்கொள்பவன், கருணைக் கடல்;
கஜேந்திரனை (யானையை) தன் சக்கிரத்தால் காப்பாற்றிய
ஹரி, பாற்கடலில் படுத்திருப்பவன் (பந்த)

இந்திர தேவ வந்த்யா இஷ்டர இந்து காவ்ய நித்யாநந்தா
சந்திர கோடி லாவண்ய முகதலி
சுந்தர அரளெல ஹாரகெ லிந்தலி (பந்த)

இந்திர தேவனால் வணங்கப் பெறுபவன்,
வணங்குபரை உடனே காக்கும் நித்யானந்தன்,
கோடி சந்திரன்(கள்) சேர்ந்தால் கிடைக்கும் ஒளி போன்ற முகத்தை உடையவன்,
அழகான இலைகளால் ஆன மாலைகளை அணிந்தவன் (பந்த)

சரண கமல காந்தே சர்வத மாள்புது தயவந்தே
தர தர ஜனரிகே கரெது வரவனிவ
சரசிஜாக்‌ஷ நம்ம புரந்தர விட்டலனு (பந்த)

ஒளி மிகுந்த சரணகமலத்தைக் கொண்டவன், அனைவரையும் ஆட்கொள்ளும் கருணையைக் கொண்டவன்
அனைத்து மக்களையும் அழைத்து வரங்களை அளிப்பவன்
தாமரைக் கண்ணன், அவனே நம் புரந்தர விட்டலன் (பந்த)

***Monday, February 2, 2015

ஸ்ரீ குரு ராகவேந்திரரை வணங்குவோம்

இறைவனைப் பற்றி தாசர்கள் பாடிய பாடல்களை பார்த்தோம். பின்னர் வந்த தாசர்கள்,  குருபக்தியை வெளிப்படுத்தும் விதமாக, தங்கள் குருவைக் குறித்தும் பல பாடல்களைப் பாடியுள்ளனர்.

அவற்றுள் ஒருவரான கமலேஷ விட்டல தாசர் என்பவரின் பாடலை இன்று பார்ப்போம். இவர், மந்திராலய மகான், ஸ்ரீ குரு ராகவேந்திரரின் வழி வந்தவர் ஆவார். ஆகவே குருவைக் குறித்து பல அருமையான பாடல்களைப் பாடியுள்ளார்.இவரது ‘கரெதரே பரபாரதே’ பாடலை ஏற்கனவே இங்கே பார்த்துள்ளோம்.

***

துங்கா தீர விராஜம் பஜமன
ராகவேந்திர குரு ராஜம் பஜமன (துங்கா)

துங்கபத்ரா நதி தீரத்தில் வீற்றிருப்பவரை வணங்குவோம்
ராகவேந்திரரை, குருராஜரை வணங்குவோம் (துங்கா)

மங்கள கர மந்திராலய வாசம்
ஸ்ரிங்காரானன ராஜித ஹாசம்
ராகவேந்திர குரு ராஜம் பஜமன (துங்கா)

மங்களங்களைத் தரக்கூடிய மந்திராலயத்தில் வசிக்கும்
அழகான திருமுகத்தில், வசீகரிக்கும்படியான புன்னகையை உடைய
ராகவேந்திரரை, குருராஜரை வணங்குவோம் (துங்கா)

கரத்ருத தண்ட கமண்டல மாலம்
சுருசிர சேலம் த்ரித மணி மாலம்
ராகவேந்திர குரு ராஜம் பஜமன (துங்கா)

கைகளில் தண்டம், கமண்டலங்களை கொண்டவரான
அழகான, காவி உடை அணிந்தும், கழுத்தில் (துளசி) மணிமாலை அணிந்தவருமாகிய
ராகவேந்திரரை, குருராஜரை வணங்குவோம் (துங்கா)

நிருபம சுந்தர காய சுஷீலம்
வர கமலேஷார்பித நிஜ சகலம்
ராகவேந்திர குரு ராஜம் பஜமன (துங்கா)

ஒப்பில்லாதவரும், தூய்மையான மேனியைக் கொண்டவரான
(அனைத்தையும்) கிருஷ்ணார்ப்பணம் என்று சமர்ப்பிப்பவருமான
ராகவேந்திர குரு ராஜம் பஜமன (துங்கா)

***

இந்தப் பாடலை பாடியுள்ள திரு.மகாராஜபுரம் சந்தானம் அவர்கள்: (Youtubeல் இன்னும் பலர் பாடியதும் கிடைக்கும்).Friday, January 30, 2015

தற்காலிகமான இந்த வாழ்க்கையில்..

தற்காலிகமான இந்த வாழ்க்கையில்..

பக்தி மார்க்கத்தை தங்களின் இனிய பாடல்களால் பரப்புவதை முக்கிய வேலையாகக் கொண்டிருந்த ஹரிதாசர்கள், மக்களை நல்வழிப்படுத்த நல்ல அறிவுரைப் பாடல்களையும் பாடியுள்ளனர்.
மனிதராகப் பிறந்த இப்பிறவியானது நிரந்தரமானதல்ல. ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம். இந்த இடைப்பட்ட சிறு வேளையில், நாம் செய்ய வேண்டிய நல்ல செயல்கள் நிறைய இருக்கின்றன. வறியவர்களுக்கு உதவுங்கள், திருட்டுத்தனம் செய்யாதீர்கள். ஆணவத்தில் ஆடாதீர்கள். அந்த ‘காகிநெலெ’ ஆதிகேசவனை வழிபட்டு, நற்கதி அடையுங்கள் என்று பாடியுள்ளார் கனகதாசர். அந்தப் பாடலைத்தான் இன்று பார்க்கப் போகிறோம்.

***

ஏனு இல்லத இரெடு தினத சம்சார
ஞானதல்லி தான தர்மவ மாடிரய்யா (ஏனு)

ஒன்றுமேயில்லாத இரண்டு நாட்களைக் கொண்ட இந்த வாழ்க்கையில்
தான தர்மங்களைச் செய்யுங்கள் (ஏனு)

ஹசிது பந்தவரிகே அஷனவீயலு பேகு
சிசுவிகே பால் பெண்ணே உணிசபேகு
ஹசனாத பூமியனு தாரெயெரெயலி பேகு
ஹுசி மாடதலே பாஷே நடேசலே பேகு (ஏனு)

பசியுடன் வருபவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும்
குழந்தைகள் உண்பதற்கு பால் & வெண்ணெய் கொடுக்க வேண்டும்
இந்த வளமான பூமியை தானமாக கொடுக்க வேண்டும்
கொடுத்த வார்த்தை தவறாத வாழ்க்கை வாழ வேண்டும் (ஏனு)

கள்ளதனகள மாடி ஒடல ஹொரெயலு பேடா
குள்ளிர்த சபெயொளகே குடில நடெசலு பேடா
ஹொள்ளேயவ நானெந்து பஹு ஹெம்மெ லிரபேடா
பாள்வே ஸ்திரவெந்து நீ நம்பி கெட பேடா (ஏனு)

(பிறர் பொருட்களைத்) திருடி உடலை வளர்க்காதே
சபைதனில் (சிறப்பான ஏதாவது அமைப்பில்) மோசடிகளைச் செய்ய வேண்டாம்
நான்தான் மிகவும் நல்லவன் என்று கர்வப்பட வேண்டாம்
(நாம்) வாழும் இந்த வாழ்க்கை நிரந்தரமானது என்று நம்பி கெட்டுப் போக வேண்டாம் (ஏனு)

தொரெதனவு பந்தாக கெட்ட நுடியலு பேடா
சிரி பந்த காலக்கே மெரெய பேடா
சிரிவந்தனாதரே நெலெ ஆதிகேசவன
சரண கமலவ சேரி சுகியாகு மனுஜா (ஏனு)

பெரிய பதவிகளில் இருக்கும்போது கொடும் சொற்களைப் பேச வேண்டாம்
செல்வம் வந்து சேரும்போது, பகட்டு வேண்டாம்
அப்படி செல்வந்தன் ஆகும்போது, ஏ மனிதனே,
காகிநெலெ ஆதிகேசவனின் சரணங்களை வந்து அடைந்து ஆனந்தப்படு. (ஏனு)

****Sunday, January 25, 2015

வந்தாள் மகாலட்சுமியே!

வந்தாள் மகாலட்சுமியே!

தாசரின் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றான ‘பாக்யதா லக்‌ஷ்மி பாரம்மா’ கேட்டிருப்பீர்கள். இங்கே ஏற்கனவே பார்த்திருக்கிறோம். வரலட்சுமி பூஜையின்போதும், வெள்ளிக்கிழமை பூஜைகளின் போதும் இந்தப் பாடலைப் பாடுவார்கள். மகாலட்சுமியை வீட்டுக்குள் வா என்று கூப்பிட்டு, ஆரத்தி எடுத்து, பூஜை செய்வார்கள். வீட்டுக்குள் வந்த மகாலட்சுமியைப் புகழ்ந்து பாடுவதைப் போல அமைந்த பாடல் இது.

அந்தப் பாடலில் உள்ள அதே போன்ற சொற்கள், சின்னச்சின்ன எளிமையான வரிகள் என்று பூஜைகளில் பாடுவதற்கு மிகவும் ஏற்ற பாடல்.***

பந்தாளு நம்ம மனெகே 
ஸ்ரீ மகாலட்சுமி சந்தேவில்லதந்தே (பந்தாளு)

வந்தாள் மகாலட்சுமியே நம் வீட்டிற்கு
ஒரு தயக்கமும் இல்லாமல் (பந்தாளு)

பந்தாளு நம்ம மனெகே
நிந்தாளு க்ருஹதல்லி
நந்த கந்தன ராணி
இந்திரெ நம்ம மனெகே (பந்தாளு)

வந்தாள் மகாலட்சுமியே
நின்றாளே நம் வீட்டில்
கோபாலகிருஷ்ணனின் மனைவி
வந்தாளே இந்திரா, நம் வீட்டிற்கு (பந்தாளு)

ஹெஜ்ஜெ மேலே ஹெஜ்ஜெய நிக்குதா
கெஜ்ஜெய கால கலுகலுகலு என்னுதா
மூர்ஜகவ மோஹிசுத்த முகுந்தன ராணியு
சம்பத்து கொடலிக்கே வேங்கடேசன சஹித (பந்தாளு)

அடி மேல் அடி எடுத்து வைத்து
கொலுசு மாட்டிய காலினால் சத்தத்தை ஏற்படுத்தியவாறு
மூவுலகும் பூஜிக்கும் முகுந்தனின் மனைவியனவள்
செல்வத்தைக் கொடுப்பதற்காக வேங்கடவன் உடன் (வந்தாள்)

மாச ஸ்ராவண சுக்லவு சுக்ரவார
பௌர்ணமி தினதந்து
பூசுரரெல்ல கூடி சாசிர நாமவ பாடி
வாசவாகிரலிக்கெ வாசுதேவன ராணி (பந்தாளு)

ஆவணி மாத வெள்ளிக்கிழமை
பௌர்ணமி தினத்தில்
(அவளின்) 1000 நாமங்களைப் பாடி, போற்றி பூஜை செய்யும் மக்களின் வீட்டில்
வசிப்பதற்கு, வாசுதேவனின் மனைவி (வந்தாள்)

கனகவாயிது மந்திர ஜனனி பரலு
ஜய ஜய ஜய என்னிரே
சனகாதி முனிகள சேவெயனு ஸ்வீகரிசி
கனகவல்லியு தன்ன காந்தன கரெதுகொண்டு (பந்தாளு)

அவள் வந்ததும் இல்லமே தூய்மை/பிரகாசமானது
வாழ்க வாழ்க வாழ்க என்று சொல்லுங்கள்
சனகாதி முனிவர்கள் அனைவரின் பூஜையையும் ஏற்றுக்கொண்டு
கனகவல்லி ஆனவள் தன் கணவனையும் அழைத்துக் கொண்டு (வந்தாள்)

உட்ட பீதாம்பர ஹொளெயுதா
கரதல்லி கட்டி கங்கண ஹிடியுதா
ஸ்ருஷ்டிகொடெய நம்ம புரந்தரவிட்டலன
பட்டதரசி நமகே இஷ்டார்த்த கொடலிக்கே (பந்தாளு)

பளிச்சென்று இருக்கும் ஆடையுடன்
கையில் கங்கணத்துடன்
இவ்வுலகைப் படைத்துக் காக்கும் நம் புரந்தரவிட்டலனின்
இல்லத்தரசி, நமக்கு வேண்டிய வரங்களைக் கொடுப்பதற்கு (வந்தாள்)

***


Tuesday, January 20, 2015

நல்லதுக்கு காலமே இல்லை!

நல்லதுக்கு காலமே இல்லை!

ஸ்ரீ புரந்தரதாசரின் காலம் - கிபி 1484 - 1564. இன்று அவரது 451வது புண்ணிய தினம் ஆகும். தனது குருவான ஸ்ரீ வியாசராயரினால் ‘தாசரென்றாலே அது புரந்தர தாசர்தான்’ என்று பாடப்பட்டவர். தாசரின் வாழ்க்கை வரலாறு ஏற்கனவே இங்கே பார்த்திருக்கிறோம்.விஜய நகர சாம்ராஜ்யத்தில் புகழ்பெற்ற வணிகராக இருந்த ஸ்ரீனிவாச நாயக் ஆன நம் நாயகன், அந்த குறிப்பிட்ட சம்பவத்திற்குப் பிறகு ஆன்மிகத்தில் ஈடுபட வேண்டி ஒரு குருவைத் தேடும்போது, அவரது மனைவியானவர், ஸ்ரீ வியாசராயரின் பெயரைச் சொல்ல, அவரைப் போய் பார்த்திருக்கிறார்.

போனதுமே வியாசராயர் இவரைப் பார்த்து, "இங்கே வருவதற்கு இவ்வளவு காலமா? நான் ரொம்ப நாட்களாக உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேனே" என்றாராம். மேலும், நீ செய்ய வேண்டிய செயல்கள் ஏராளமாக உள்ளன. இனியும் தாமதிக்காமல் ஹரிதாசனாகி இறைவனின் புகழைப் பாடு, மக்களிடம் அவனின் பெருமைகளைப் போய் சொல் என்று உபதேசம் செய்ய, பின்னர் நடந்ததெல்லாம் வரலாறு.

இன்றைய பாடலைப் பற்றி:

மிகவும் புகழ்பெற்ற, பல கச்சேரிகளில் பாடப்பெறும் இந்தப் பாடலைப் பார்த்தால், அந்தக் காலத்திலேயே இப்படி இருந்திருக்கிறார்களா என்றும், 450+ ஆண்டுகள் கழித்தும் இப்போதைய நிலைக்கும் பொருந்தி வருகிறதே என்றும் வியப்படைய வைக்கிறது.

***

சத்யவந்தரிகிது காலவல்லா
துஷ்டஜனரிகிது சுபீட்ச கால (சத்ய)

உண்மையே பேசுபவர்களுக்கு இது காலமல்ல
கெட்டவர்களுக்கு இது நல்ல காலம் (சத்ய)

ஹரிஸ்மரணே மாடுவகே க்‌ஷயவாகுவ கால
பரம பாபிகளிகே சுபீட்ச கால
ஸ்திரவாத பதிவ்ரதெய பரரு நிந்திப கால
தரெகெசாரியள கொண்டாடுவ கால (சத்ய)

எப்போதும் ஹரியை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, நஷ்டமாகும் காலம் இது;
பாவங்களைச் செய்பவர்களுக்கு நல்ல காலம்
பதிவிரதைகளாக இருப்பவர்களை மற்றவர்கள் திட்டும் காலம்
அப்படி இல்லாதோரை அனைவரும் கொண்டாடும் காலம் (சத்ய)

உபகார மாடிதரே அபகரிசுவ கால
சகலவூதிளிதவகே துர்பீட்ச கால
பதிசுதரு எம்புவன நம்பலரியத கால
சடேயல்லவிதே விபரீத கால (சத்ய)

ஒருவருக்கு உதவி செய்தால், இருப்பதையும் எடுத்துக் கொள்ளும் காலம்
அனைத்தும் தெரிந்தவர்களுக்கு கெட்ட காலம்
மனைவி, மக்கள் இவர்களையே நம்ப முடியாத காலம்
(நான் சொல்வது) பொய்யல்ல; இது விபரீதமான காலம் (சத்ய)

தர்ம மாடுவகே நிர்மூலவாகுவ கால
கர்ம பாதகரிகே பஹு சௌக்ய கால
நிர்மலாத்மக ஸ்ரீ புரந்தர விட்டலனா
மர்மதொளு பஜிஸலரியத காலவய்யா (சத்ய)

தர்ம காரியங்கள் செய்பவர்களுக்கு கஷ்டம் வரும் காலம்
கடமைகளை செய்ய மறந்தவர்களுக்கு நல்ல சௌக்யமான காலம்
நிர்மலமான ஸ்ரீ புரந்தர விட்டலனை
புகழ்ந்து பாடி நினைக்கத் தெரியாதவர்கள் இருக்கும் காலம் இது (சத்ய)

***

Thursday, January 15, 2015

காலம் நழுவிக் கொண்டே இருக்கிறதே..


காலம் நழுவிக் கொண்டே இருக்கிறதே..

* இன்றைய பாடலை எழுதியவர் கோபால தாசர். இந்த தளத்தில் இது இவரது முதல் பாடலாகும்.
* இவர் வாழ்ந்த காலம் 1722 - 1762.
* இவர் மறைந்த தினம் சென்ற 13ம் தேதி (13/01/2015) அனுசரிக்கப்பட்டது.
* இவரைப் பற்றி மேலதிகத் தகவல்கள் இங்கே மற்றும் இங்கே.
* மிகக் குறைந்த காலமே வாழ்ந்த கோபால தாசர், அதற்குள் இயற்றிய நூல்கள் மற்றும் கீர்த்தனைகள் எண்ணற்றவை.
* தாசர்களில் மிக முக்கியமானவர்கள் எனக் கருதப்படுபவர்கள் 4பேர். அவர்களில் ஒருவரான ஜகன்னாத தாசர், இவரது சீடராவார். தன் சீடன் மிகக் கொடுமையான நோயால் துயரப்படுவதைக் கண்ட கோபால தாசர், தன் வாழ்நாளில் 40 ஆண்டுகளை தானம் கொடுத்தவர் என்று சொல்லப்படுகிறது.இன்றைய பாடலைப் பற்றி:

ஏதோ ஒரு பிறப்பில் செய்த நல்ல செயலால் இப்போது மனிதனாக பிறந்துள்ளேன். ஆனால், உயிரோடிருக்கும் சிறிது காலத்தையும், வெட்டிப் பேச்சு, கெட்ட சகவாசம், அழியும் இந்த உடலை பேணிப் பாதுகாத்தல் - இதையே செய்து கழித்து விட்டேன். ஒரு நாளும் கோயிலுக்குப் போனதில்லை, சான்றோர் கூறும் நல்லுரைகளைக் கேட்டதில்லை, பூஜை புனஸ்காரங்களை செய்வதில்லை. இப்படி எதுவுமே செய்யாமல், கடைசி காலத்தில் எம தூதர்கள் வந்து, நீ என்ன நல்ல காரியங்கள் செய்தாய் என்று கேட்டால், சொல்வதற்கு எதுவுமே இல்லையே, கோபால விட்டலா - என்று முடிக்கிறார்.

Self-help புத்தகங்களில் நம்மிடம் உள்ள தவறுகள் என்னென்ன, எதைச் செய்தால் முன்னேற்றம் ஏற்படும் என்றெல்லாம் விதவிதமாக பட்டியல் போட்டிருப்பாங்க. மொத்த புத்தகத்தையும் படித்து முடித்தபிறகு, அட, இதெல்லாம் நமக்கு ஏற்கனவே தெரியுமே என்போம். அதைப் போலவே, தாசரின் இந்த பட்டியலும். மொத்தம் 5 பத்திகளில், நாம் செய்யாததையும், இனிமேல் செய்ய வேண்டியவற்றையும், அழகாக எடுத்துரைத்து, இடித்துரைக்கிறார்.

அதைக் கேட்டு, அதன்படி நடந்து கொள்ளவேண்டியது நம் பொறுப்பு.

***

ஹ்யாங்கே மாடலய்யா கிருஷ்ணா ஹோகுதித்தே ஆயுஷ்யா
மங்களாங்க பவபங்க பிடிசி நின்ன டிங்கரிகன மாடோ
அனங்கஜனகா (ஹ்யாங்கே)

எப்படி(என்ன) செய்வேன் கிருஷ்ணா, இந்தப் பிறவியின் நாட்கள் வேகமாக கழிகின்றனவே?
என்னை இந்த துயரக் கடலிலிருந்து விடுவித்து, உன் அடியனாக ஆக்குவாயாக (ஹ்யாங்கே)

யேசு ஜனுமத சுக்ருதத பலவோ தானு ஜனிசலாகி
பூசுர தேஹத ஜனுமவு எனகே சம்பவிசிதேயாகி
மோததீர்த்தமத சின்ஹிதனாகதே தோஷக்கே ஒளகாகி
லேஷ சாதனவா காணதே துஸ்ஸஹவாசதிந்தலே தினதின களெதே (ஹ்யாங்கே)

முந்தைய எந்தப் பிறவியில் செய்த நற்செயலோ, இந்தப் பிறவி கிடைத்தது;
பூலோகத்தில் இந்த உடல் / பிறவி எனக்கு கிடைத்துள்ளது
ஆனந்த தீர்த்தரின் மதத்தைப் பின்பற்றாமல், தோஷம் அடைந்து
எதையும் படிக்காமல், கூடா நட்பினைக் கொண்டு தினம்தினம் கழித்தேன் (ஹ்யாங்கே)

சசிமுக கனகத ஆஷேகே பெரெது வசுபதி நின்னடியா
ஹஸனாகி நின்ன நெனெயதே க்ருபெயா களிசதே கெட்டேனய்யா
நிஷிஹகலு ஸ்திரவெந்து தனுவனு போஷிசலாஷிசி ஜீயா
உசுரித நிலவோ சர்வகால நின்னொடெதன எம்புவோ பகேயனு அரியதே (ஹ்யாங்கே)

நிலவைப் போன்ற முகத்தையுடைய, தங்க மேனியுடைய லட்சுமியின் கணவனே, உன் திருவடியை
எப்போதும் உன்னை நினையாமல், உன் பெருமையைப் பேசாமல், கெட்டுப் போனேன்
இரவும் பகலும் எப்போதும் நிரந்தரம் என்றெண்ணி, இந்த உடலை பேணிப் பாதுகாப்பதில் நேரத்தை செலவிட்டேன்
(ஆனால்) இதெல்லாம் எப்போதும் உன்னுடையதே என்னும் உண்மையை அறியாமல் (ஹ்யாங்கே)

நெரே நம்பித பாவடிகளு எல்ல சரிது ஹோதவல்லா
மரளி ஈ பரி ஜெனுமவு பருவ பரவசே எந்து இல்லா
பரிபரி விஷயத ஆஷெயு எனகே பிரிது ஆயிதல்லா
ஹரியே ஜகதி நீனு ஒப்பனில்லதே பொரெவரின்ன ஆருரில்லா பல்லா (ஹ்யாங்கே)

எதையெல்லாம் இன்பம் கொடுக்கும் என்று எண்ணினேனோ (வீடு, செல்வம் etc), அவையெல்லாம் நிரந்தர இன்பத்தைக் கொடுக்காது என்று இப்போது புரிகிறது;
இந்தப் பிறவியின் இறுதியில் இவை எனக்கு உதவும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை
(இப்படி) பலப்பல விஷயங்களில் ஆசைப்பட்டதால், நான் ஒரு நிலையில் இல்லை;
ஹரியே, நீ ஒருவன்தான் இந்த உலகில் எனக்கு உதவி செய்யமுடியும், உன்னைப் போல் வேறு எவருமில்லை, உனக்கு ஒப்புமில்லை (ஹ்யாங்கே)

அவனியொளகே புண்ய க்‌ஷேத்ர சரிசுவ ஹவணிகே எனகில்லா
பவனாத்மக குரு மத்வ சாஸ்த்ரத ப்ரவசன கேளலில்லா
தவகதிந்த குரு ஹிரியர சேவிசி அவர ஒலிசலில்லா
ரவி நந்தன கேளிதர உத்தர கொடே விவர சரகு ஒந்தாதரில்லா (ஹ்யாங்கே)

உலகில் புனித யாத்திரை போவதற்கு எனக்கு எப்போதும் விருப்பம் இருந்ததில்லை
அனுமனின் அவதாரமாகிய மத்வரின் சாஸ்திர உபன்யாசங்களை கேட்டதேயில்லை
எந்த குரு/ஆசிரியருக்கும் சேவை செய்து, அவர் ஆசிர்வாதங்களை பெற்றதில்லை
(இந்தப் பிறவியில் நீ என்ன செய்தாய் என்று சூரிய புத்திரன்) எமன் கேட்டால், சொல்வதற்கு என்னிடம் நல்ல விஷயங்களே இல்லை (ஹ்யாங்கே)

பாகவதரொடகூடி உபவாச ஜாகர ஒந்தின மாடலில்லா
ராகதி சுகமுனி பேள்த ஹரிகத சம்யோக வெம்போதில்லா
நீகுவந்த பவ பயவ பகுதி வைராக்ய வெம்போதில்லா
யோகிவந்த்ய கோபால விட்டலா தலேபாகி நின்னனெ பேடிகொம்பே (ஹ்யாங்கே)

சான்றோர்களுடன் உபவாசம், ஜாகர்ண** ஒரு நாளும் செய்ததில்லை
சுக முனிவர் (பரிக்‌ஷித்) ராஜனிடம் கூறிய பாகவதத்தின் சாரத்தை கேட்டதில்லை
சம்சார சாகரத்திலிருந்து என்னை விடுவிக்க உதவும் பக்தி & வைராக்கியம் எனக்கு இல்லை
கோபால விட்டலனே, உன்னை தலைவணங்கிக் வேண்டிக் கொள்கிறேன் (ஹ்யாங்கே)


**ஜாகர்ண = இரவு முழுவதும் விழித்திருந்து, இறைவனை வழிபடுதல்

***