Friday, September 25, 2015

இறைவன் எழுதிய கடிதம்



இறைவன் நம் எல்லார்க்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் என்னெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது? நாம் எதையெல்லாம் செய்ய வேண்டும்? எதையெல்லாம் செய்யக்கூடாது என்று எழுதியிருக்கிறது? இறைவன் ஆனவன், அவனே, தன் கைப்பட எழுதியிருப்பதால், தயவு செய்து அதை பின்பற்றுமாறு புரந்தரதாசர் இந்தப் பாடலில் எழுதியிருக்கிறார்.

கடிதம் = உடம்பு / வாழ்க்கை.

இறைவனால் கொடுக்கப்பட்ட இந்த உடம்பை, இந்த வாழ்க்கையை வீணாக்காமல் எப்படியெல்லாம் நல்வழியில் செலவழிக்கலாம் என்று இந்தப் பாடலில் பார்க்கலாம். மிகவும் எளிமையான பாடல். மக்களுக்கு அறிவுரை கூறுமாறு அமைந்த இன்னொரு தாசர் பாடல்.

***

காகத பந்திதே நம்ம கமலநாபனது
ஈ காகதவன்னு ஓதிகொண்டு கால களயிரோ (காகத)

நம் பத்பனாபனின் கடிதம் வந்துள்ளது
இந்தக் கடிதத்தை படித்துக் கொண்டு காலத்தைக் கழியுங்கள் (காகத)

காம க்ரோதவ பிடிரெம்போ காகத பந்திதே
நேமெ நிஷ்டெயொள் இரிரெம்போ காகத பந்திதே
தாமஸ ஜனர கூடதிரெம்போ காகத பந்திதே
நம்ம காமனய்யனு தானே பரெத (காகத)

காமம் விரோதம் ஆகியவற்றை விட்டுவிடுங்கள்...
பூஜை, புனஸ்காரங்கள் (ஆகிய தினசரி கடமைகளில்) ஈடுபடுங்கள்..
தாமஸ (கீழ்த்தரமான நோக்கங்களை உடைய) மக்களிடமிருந்து விலகி இருங்கள்...
நம் மன்மதன் தந்தை தானே எழுதிய (காகித)

ஹெண்ணின் ஆசே பிடிரெம்போ காகத பந்திதே
ஹொன்னின் ஆசே பிடிரெம்போ காகத பந்திதே
மண்ணின் ஆசே பிடிரெம்போ காகத பந்திதே
நம்ம கமலனாபனு தானே பரெத (காகத)

பெண்ணாசையை விட்டுவிடுங்கள்..
பொன்னின் ஆசையை விட்டுவிடுங்கள்..
மண்ணின் ஆசையை விட்டுவிடுங்கள்..
நம் பத்பனாபன் அவனே எழுதிய.. (காகித)

கெஜ்ஜெயெ காலிகெ கட்டிரெம்போ காகத பந்திதே
ஹெஜ்ஜெ ஹெஜ்ஜேகெ ஹரியெனிரெம்போ காகத பந்திதே
லஜ்ஜெயெ பிட்டு குணியிரெம்போ காகத பந்திதே
நம்ம புரந்தர விட்டல தானே பரெத (காகத)

கால்களில் கொலுசு அணியுங்கள்...
ஹரி என்றபடியே நடனமாடத் துவங்குங்கள்...
வெட்கத்தை விட்டு ஆடுங்கள்..
நம் புரந்தரவிட்டலன் தானே எழுதிய.. (காகித)

***

இந்த தொகுப்பில் முதல் பாடலே நாம் இன்று பார்த்தது.



***










No comments: