தாசர் பாடல் போட்டிகளில் பங்கேற்று பாடுபவர்கள், மிகமிக சின்னதாய், எளிமையாய் சில பாடல்களை தேர்ந்தெடுத்து, அதை மனப்பாடம் செய்து கொண்டு பாட ரெடியாய் இருப்பார்கள். புகழ்பெற்ற சில பாடல்கள் எல்லார் பட்டியலிலும் இருக்கும். அப்படி எளிமை, இனிமை, ச்சின்னது இப்படி எல்லா அளவுகோலிலும் வெற்றி பெற்று, அனைவர் பட்டியலிலும் இடம்
பிடிக்கும்படியான ஒரு பாடல்தான் இன்னிக்கு பார்க்கப் போகிறோம்.
’கரெதரே பரபாரதே’ என்னும் இந்தப் பாடலை பாடியவர் கமலேஷ விட்டலதாசர். வாழ்ந்த காலம் 1780AD. 'கமலேஷ விட்டலா' என்னும் முத்திரையை இணைத்து பற்பல பக்திப் பாடல்களை பாடியவர் இவர்.
மந்திராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரரைக் குறித்து பாடப்பட்டுள்ளது இந்த பாடல்.
***
கரெதரே பரபாரதே
குரு ராகவேந்திரா (கரெதரே)
கூப்பிட்டால் வரக்கூடாதா
குரு ராகவேந்திரா (கரெதரே)
வர மந்திராலய புர மந்திர தவ
சரண சேவகரு கரவா முகிது (கரெதரே)
(புனித தலமான) மந்திராலயத்தில் உங்கள் கோவிலின் முன் நின்று
சேவை செய்யும் பக்தர்கள் கைகூப்பி தொழும்போது (கரெதரே)
ஹரிதாசரு சுஸ்வர சம்மேலதி
பரவசதல்லி பாயி தெரது கூகி (கரெதரே)
ஹரியின் பக்தர்கள் நல்ல ராக, தாளத்துடன்
பக்தி பரவசத்துடன் உன்னை போற்றி பாடி, தொழும்போது (கரெதரே)
பூஷரபித கமலேஷ விட்டலன்ன
தாசகிரேஸரு ஈ சமயதல்லி (கரெதரே)
மன்மதனின் தந்தையான கமலேஷ விட்டலனே
உன் தாசர்கள் உன்னை வணங்கும் இந்த தருணத்தில் (கரெதரே)
***
பூஜ்யாய ராகவேந்திராய சத்யதர்ம ரதாயச
பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே
அவரைக் குறித்து பஜிப்பவர்களுக்கு கல்பவிருக்ஷமாகவும், அவர் பெயரை ஜபிப்பவர்களுக்கு அனைத்தையும் காமதேனுவுமாய் இருப்பவர் ஸ்ரீ ராகவேந்திரர் என்று இந்த சுலோகம் சொல்கிறது.
***
இந்தப் பாடலை பாடுபவரின் ஒரு காணொளி; பின்னர் வாத்திய இசையிலும், ஒலித்துண்டாகவும் இதே பாட்டு.
http://www.muzigle.com/track/karedare-barabarade#!track/karedare-barabarade
***
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ.
***
No comments:
Post a Comment