Tuesday, February 28, 2012

பாரய்யா வேங்கடரமணா...புரந்தரதாசருக்கு திருப்பதி வெங்கடரமணன் மேல் அபார பிரியம். அவரைக் குறித்து பற்பல பாடல்களைப் பாடியிருக்கிறார். அனைத்துமே புகழ் பெற்ற பாடல்கள்தான். அவற்றில் ஒன்றுதான் இன்று பார்க்கப் போவது. இதுவும் ஒரு புகழ்பெற்ற பாடல்தான்.


ஸ்ரீமன்நாராயணனின் பத்து அவதாரங்களையும் சொல்லி, அவன் சிறப்புகளை பாடி, அவனை எப்படி அழைக்கிறார் என்று இந்த பாடலில் பார்ப்போம்.


பாரய்யா வேங்கடரமணா பாக்யதா நிதியே
பாரோ விஸ்வம்பரனே பாரோ
பக்தர சலஹுவனே பாரோ (பாரய்யா)

அளவில்லாத செல்வத்தை வேண்டியவருக்கு
வாரி வழங்கும் வேங்கடரமணனே, நீ வாராய்.
உலகத்தையே ஆடை/அணிகலனாக அணிந்தவனே,
பக்தர்களை கைவிடாமல் காப்பவனே, நீ வாராய் (பாரய்யா)

வேத கோசரனே பாரோ ஆதி கஷ்யபனே பாரோ
மேதினி சுரரொடெயனே பாரோ
பிரஹ்லாதன காய்தவனே பாரோ (பாரய்யா)

வேதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவனே,
முதன்முதலில் தோன்றிய கூர்மமே,
வராகனாய் உலகத்தை மீட்டவனே,
பிரகலாதனை காத்த நரசிம்மனே நீ வாராய் (பாரய்யா)

வாமன பார்கவனே பாரோ ராம கிருஷ்ணனே பாரோ
பிரேமதிம் பௌத்தனே பாரோ சுவாமி கல்கி நீ பாரோ (பாரய்யா)

வாமனனே, பார்கவனே, ராம, கிருஷ்ணனே,
அன்பே உருவான பௌத்தனே, கல்கியே நீ வாராய் (பாரய்யா)

குரு மத்வபதி நீ பாரோ வரத கேசவனே பாரோ
பரமாத்மா நீ பாரோ புரந்தரவிட்டலனே நீ பாரோ (பாரய்யா)

மத்வபதியான ஸ்ரீ மத்வரே, வரதராஜனே,
பரமாத்மனே, ஸ்ரீ புரந்தர விட்டலனே, நீ வாராய் (பாரய்யா)

*** மிகவும் அழகான இந்த பாடலை கேட்க:

http://www.muzigle.com/track/baarayya-venkataramana

***

அதே பாடல் முழுவதுமாக இல்லை, ஆனாலும் இவர் பாடும்போது கேட்பதற்கு ஆனந்தமாக இருக்கும்.

***

பாரய்யா வேங்கடரமணா!

***

Saturday, February 25, 2012

தேனீயை போன்ற வாழ்க்கை என்னுடையது.***

தோழனாக, தாயாக, குழந்தையாக இன்னும் பலவாறெல்லாம் தன்னை எண்ணி பாடியிருக்கும் ஸ்ரீ புரந்தரதாசர் இந்த பாடலில், தன்னை ஒரு தேனீ'யாக நினைத்து பாடியிருக்கிறார்.

தேனுக்காக எப்பொழுதும் மலர்களையே சுற்றி வரும் தேனீயைப் போல, இவரும் அந்த புரந்தரவிட்டலனின் பாதமலர்களையே சுற்றி வருவதாக கற்பனை செய்து பாடுகிறார்.

இதோ பாடல்.

***

மதுகர விருத்தி என்னது -
அது பலு சன்னது
பதுமனாபன பாத - பதும மதுபவெம்ப (மதுகர)

தேனீயைப் போன்ற வாழ்க்கை என்னுடையது
அது (வாழ்க்கை) மிக அருமையானது
பத்மனாபனின் சரணத்தை - தாமரையாக பாவித்து
அதை சுற்றி வரும் (மதுகர)

காலிகெ கெஜ்ஜெ கட்டி நீல வர்ணன குண
ஆலாபிஸுத்த பலு ஒலக மாடுவந்த (மதுகர)

கால்களில் கொலுசு அணிந்து - நீலவண்ணனின் குணத்தை
புகழ்ந்து பாடியவாறே திரிந்தவாறு இருக்கும் (மதுகர)

ரங்கனாதன குண ஹிங்கதெ பாடுத்த
சிருங்கார நோடுத்த கண்களானந்த வெம்ப (மதுகர)

ரங்கனாதனின் குணங்களை மறைக்காமல் பாடியவாறு
அவன் அழகை என் கண்களால் ரசித்தவாறே இருக்கும் (மதுகர)

இந்திராபதி புரந்தர விட்டலனல்லி செந்தத
பக்தியிந்தானந்தவ படுவந்த (மதுகர)

இலக்குமியின் கணவனாகிய புரந்தர விட்டலனிடத்தில்
ஆழமான பக்தி வைத்து
அதனால் ஆனந்தமாய் பாடியவாறு இருக்கும் (மதுகர)

***

இந்த பாடலை அருமையாக பாடும் வித்யாபூஷணர்.புரந்தரதாஸரைப் பற்றிய கன்னட திரைப்படம் - நவகோடி நாராயணா படத்தில் வந்த இந்த பாடல்.

***

Friday, February 10, 2012

கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா...இன்றைய பாட்டின் முன்னுரை - திரு. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் தொடர் 'கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்'லிருந்து எடுக்கப்பட்டது.


பகவானுக்காக அவனது திருநாமத்தை நீங்கள் சொல்லவில்லை. உங்களுக்காக, உங்களின் நலனுக்காகத்தான் அவனது திருநாமத்தைச் சொல்கிறீர்கள். ஆகவே, அவனுடைய திருநாமத்தை, அனுதினமும் சொல்லவேண்டும்; சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும் என்று நீங்கள் மனதார ஆசைப்பட வேண்டும். ஒரு பொருளை அடைவதற்கு ஆசைப்படுகிறோம். இத்தனைக்கும் அந்தப் பொருள், மிகமிகச் சாதாரணமானதாக இருக்கலாம்; கீழே விழுந்தால், சுக்குநூறாக உடையக்கூடிய தன்மை கொண்டதாகவும் இருக்கலாம்.ஆக, நிலையற்ற ஒரு பொருளை அடைவதற்கு, எவ்வளவு ஆசைப்படுகிறோம்! அந்த ஆசையை, பகவானின்மீது வையுங்கள்; அவனை நினைப்பதில் விருப்பமாக ஈடுபடுங்கள்; அவனுடைய திருநாமத்தைச் சொல்வதில் கிடைக்கிற ஆத்மதிருப்தியை நேசியுங்கள். பகவானின் திருநாமத்தை ஆசையுடனும் பிரியத்துடனும், அன்புடனும் நேசத்துடனும் நீங்கள் சொல்லச் சொல்ல, அவனது பரிபூரணமான ஆசீர்வாதம் உங்களையும் உங்களின் சந்ததியையும் வந்து அடையும் என்பதில் மாற்றமில்லை!எனவே, பகவானின் நாமங்களை, ஒரு கடமையாக, ஒரு தவமாக, சந்தோஷமாக, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் சொல்லி வாருங்கள். யார் கண்டது… உங்கள் வீடு தேடி அந்தக் கண்ணனே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!


***

நரஜன்ம பந்தாக நாலிகே இருவாக
கிருஷ்ணா என பாரதே

கிருஷ்ணா எந்தரே கஷ்டவு பரிஹார
கிருஷ்ணா என பாரதே (நரஜன்ம பந்தாக)

மனிதப் பிறவி வாய்த்திருக்கும்போது,
நாக்கும் (பேச்சும்) இருக்கும்போது
கிருஷ்ணா என சொல்லக் கூடாதா?

கிருஷ்ணா என்று சொன்னால்,
அனைத்து கஷ்டங்களும் போய்விடுமே,
கிருஷ்ணா என சொல்லக் கூடாதா?

ஸ்நான பான ஜப தபகள மாடுத்தா
கிருஷ்ணா என பாரதே

ஷால்யான்ன ஷடுரச திந்து த்ருப்தனாகி
கிருஷ்ணா என பாரதே

கந்தன்ன பிகி பிகிதப்பி முத்தாடுதா
கிருஷ்ணா என பாரதே

மந்தகாமினியொளு சரசவாடுத்தலொம்மே
கிருஷ்ணா என பாரதே (நரஜன்ம பந்தாக)

குளிக்கும்போதும், குடிக்கும்போதும்,
தியானங்கள் செய்யும்போதும்

அறுசுவைகளுடன் செய்த விருந்தினை உண்டு
திருப்தியாக இருக்கும்போதும்

உடலெங்கும் சந்தனம் பூசிக் கொள்ளும்போதும்

மனதுக்கு பிரியமானவளுடன் சிரித்துப் பேசும்போதும்
கிருஷ்ணா என சொல்லக்கூடாதா?

பரிஹாஸ்யத மாத ஆடுத லொம்மே
கிருஷ்ணா என பாரதே

பரிபரி கெலசதொளு ஒந்து கெலசவெந்து
கிருஷ்ணா என பாரதே

துரித ராசிகளன்னு தரிது பிடிசுவ
கிருஷ்ணா என பாரதே

கருடகமன நம்ம புரந்தர விட்டலன
கிருஷ்ணா என பாரதே (நரஜன்ம பந்தாக)

நகைச்சுவையாக பேசும்போதும்

தினப்படி வேளைகளில் இன்னொரு வேலையாகவும்

துஷ்ட ராசிகள் தூர விலகிப் போகும்படியான

கருட வாகனனான நம் புரந்தர விட்டலனை
கிருஷ்ணா என சொல்லக் கூடாதா?

****

கேட்டீங்கல்லே? சொல்லுங்க. கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா..

***

இப்போ ஸ்ரீ வித்யாபூஷணர் குரலில் இந்த அருமையான பாடல்.

***

Saturday, February 4, 2012

ரங்கா, கிருஷ்ணா - எனக்கு எதுவும் தெரியாதுப்பா!

கருணிசோ ரங்கா கருணிசோ
 
மிக மிக அழகான பாடல். பதிவைப் பார்க்க கண்ணன் பாடல்களுக்கு செல்லவும். சுட்டி இதோ.