Monday, February 16, 2015

சிவாய நம ஓம்!



வைணவ பக்தியை பரப்பிய தாசர்களின் த்வைத சித்தாந்தத்தில், சிவனுக்கும் ஒரு இடம் இருப்பதால், அவரைப் பற்றியும் பற்பல பாடல்களை பாடியிருக்கின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு பாடலை ஏற்கனவே இங்கே பார்த்திருக்கிறோம். ஹரிதாசர்கள் இயற்றிய சிவன் பாடல்கள், ஸ்லோகங்கள் அனைத்தும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.



இன்றைய பாடலைப் பாடியவர் புரந்தரதாசர். ஆலகால விஷம், மார்க்கண்டேயன், கும்பகோணத்தில் இருக்கும் கும்பேஸ்வரன் ஆகிய சம்பவங்கள் / இடங்களைப் பற்றிப் பாடும் தாசர், சிவனை, விபூதி அணிந்த, ராமரை வணங்கும் ஒரு வைஷ்ணவர் என்கிறார்.

***

சந்திரசூட சிவ சங்கர பார்வதி ரமணனே நினகே நமோ நமோ
சுந்தர மிருகவர பினாக தனுகர கங்கா ஷிர கஜசர்மா அம்பரதர (சந்திரசூட)

சந்திரனை தரித்தவனே, சிவசங்கரனே, பார்வதியின் கணவனே, உன்னை வணங்குகிறேன்
அழகான மிருகங்களை (மான்) உடையவனே, பினாக (என்னும் வில்) ஏந்தியவனே, தலையில் கங்கையைக்
கொண்டவனே, யானையின் தோலை அணிந்தவனே (சந்திரசூட)

நந்தி வாஹனா ஆனந்ததிந்த மூர்ஜகதி மெரெவ நீனே
அந்து அம்ருத கடதிந்த உடிசித விஷ தந்து புஜிசிதவ நீனே
கந்தர்ப்பன க்ரோததிந்த கண் தெரெது கொந்த உக்ர நீனே
இந்திரேச ஸ்ரீ ராமன பாதவ சந்ததி பொகளுவ நீனே (சந்திரசூட)

நந்தி வாகனத்தில் ஆனந்தத்துடன் மூன்று உலகங்களையும் சுற்று வருபவன் நீயே
அன்று அமிர்தத்தை எடுப்பதற்காக கடைந்தபோது வந்த விஷத்தை குடித்தவன் நீயே
காமதேவனை ஆத்திரத்துடன் (மூன்றாவது) கண் திறந்து கொன்ற கோபக்காரன் நீயே
இந்திரன் வணங்கக்கூடிய ஸ்ரீராமனின் பாதங்களை எப்போதும் தொழுபவன் நீயே (சந்திரசூட)

பாலம்ருகண்டன காலனு எளெவாக பாலிசிதவ நீனே
வாலயதி கபால பிடிது பிக்‌ஷா பேடோ திகம்பர நீனே
காலகூடவனு பானமாடித நீலகண்டனு நீனே
ஜாலமாடித கோபாலனெம்ப ஹெண்ணிகே மருளாதவ நீனே (சந்திரசூட)

மிருகண்டு முனிவரின் மகனை (மார்க்கண்டேயன்) எமன் பிடிக்கும்போது காப்பாற்றியவன் நீயே
கைகளில் மண்டையோட்டை பிடித்து, பிக்‌ஷை எடுக்கும் திகம்பரன் (வானத்தை உடையாக உடுத்தியவன்) நீயே
காலகூட விஷத்தை குடித்த நீலகண்டனும் நீயே
அரக்கர்களிடமிருந்து அமிர்தத்தைக் காப்பாற்ற மோகினி வேடமிட்ட விஷ்ணுவின் மேல் மோகம் கொண்டவன் நீயே

(சந்திரசூட)

தரெகே தக்‌ஷிண காவேரி தீர கும்பபுர வாசனு நீனே
கொரளலு ருத்ராக்‌ஷ பஸ்மவு தரிசித பரம வைஷ்ணவ நீனே
கரதல்லி வீணெய நுடிசுவ நம்ம உரகபூஷணனு நீனே
கருடகமன ஸ்ரீ புரந்தர விட்டலகே ப்ராண ப்ரியனு நீனே (சந்திரசூட)

தெற்கில், காவேரி நதிக்கரையில், கும்பேஸ்வரனாக வசிப்பவன் நீயே
கழுத்தில் ருத்ராக்‌ஷம், சாம்பல் அணிந்த பரம வைஷ்ணவன் நீயே
கையில் வீணையை மீட்டுபவன், பாம்பை மாலையாக அணிந்தவன் நீயே
கருட வாகனன் ஸ்ரீ புரந்தர விட்டலனின் உயிருக்கு உயிரான நண்பன் நீயே (சந்திரசூட)

***





****

Chandra Chooda Shiva Sankara by Purandara Dasar.

No comments: