மிகச் சிறிய பாடல்
மிகவும் புகழ் பெற்ற பாடல்.
முதல் வரியைக் கேட்டவுடன், MLV அம்மாவின் குரல் டக்கென்று காதில் கேட்கும் பாடல்.
அது என்ன?
வைகுண்டம் எப்படி இருக்கும்?
வைகுண்டத்தைப் பற்றி புரந்தரதாசர், கனகதாசர் ஆகியோர் பல பாடல்கள் பாடியிருக்கின்றனர். கருணையே உருவான ஸ்ரீமன் நாராயணன் - எவ்வித
களங்கமும் இல்லாத சுந்தர வடிவானவன் - காதில் குண்டலங்கள்; கழுத்தில் ஆபரணங்கள்; முகத்தில் புன்னகை - லக்ஷ்மி தேவியுடன் ஆதிசேஷன் மேல்
வீற்றிருப்பான். பிரம்ம, ருத்ராதிகள் அவன் புகழ் பாடிக் கொண்டிருக்க, வேத கோஷங்கள் முழங்கிக் கொண்டிருக்கும். நாரதர் முதலானோர் இறைவனைக்
குறித்து பஜித்துக் கொண்டிருப்பார்கள்.
இப்படியான வைகுண்டக் காட்சியை பின்வரும் பாடலில் தாசர் விவரிக்கிறார்.
வேங்கடாசல நிலையம் வைகுண்ட புரவாசம்
பங்கஜ நேத்ரம் பரம பவித்ரம்
சங்க சக்ரதர சின்மய ரூபம் (வேங்கடாசல)
வேங்கடாசலத்தில் (திருப்பதியில்) வீற்றிருப்பவன் வைகுண்டத்தில் வசிக்கிறான்
தாமரை மலர் போன்ற அழகான கண்கள்; எவ்வித களங்கமுமில்லாத தூய்மையானவன்
இரு கைகளிலும் சங்கு, சக்கரம் தரித்த அழகே வடிவானவன் (வேங்கடாசல)
அம்புஜோத்பவ வினுதம் அகணித குண நாமம்
தும்புரு நாரத கான வினோலம் (வேங்கடாசல)
எப்பொழுதும் அவன் பேரை ஜபித்துக் கொண்டே இருக்கும் பிரம்மன்;
கூடவே தம்புரா வைத்துக்கொண்டு பாடிக் கொண்டிருக்கும் நாரதர் (வேங்கடாசல)
மகர குண்டலதர மதனகோபாலம்
பக்த போஷக ஸ்ரீ புரந்தரவிட்டலம் (வேங்கடாசல)
பளபளக்கும் குண்டலங்களை அணிந்திருக்கும் மதனகோபாலன்
பக்தர்களை காக்கும் ஸ்ரீ புரந்தர விட்டலனே (வேங்கடாசல)
***
MLV அம்மா மிகவும் பக்திபூர்வமாக பாடியது:
***
விசாகா ஹரி மிகவும் விஸ்தாரமாக பாடியது:
***
3 comments:
சின்ன வயது முதலே என் பாட்டி, அம்மாவெல்லாம் பாடி இப்பாடலைப் பலமுறை கேட்டதுண்டு. இப்போதும், வீட்டில் ஏதும் விசேஷங்கள் என்றால் ஆரம்பப் பாடலாக இதுதான் இருக்கும். எனினும் MLV அம்மா குரலில் இப்போதுதான் முதலில் கேட்கிறேன். பாடலின் அர்த்தம் கூட இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன். ரொம்ப நன்றி!
ஆனால், வழக்கமான டியூனில் கேட்டுவிட்டு ஏனோ விசாகா ஹரி ஸ்டைல்'ல் கேட்க முடியவில்லை.
Arumai...
அருமை . நும் பணி வளர்க.
Post a Comment