Tuesday, May 10, 2011

பூச்சாண்டியை கூப்பிடாதேம்மா, பூச்சாண்டியை கூப்பிடாதே!கண்ணனின் விளையாட்டுகள், குறும்புகள் தாங்க முடியலை யசோதாவால். ஒரு நாளைப் போல தினமும் புகார்கள் வந்து குவியுது. வெண்ணையை திருடிட்டான், பாலைக் கொட்டிட்டான் அப்படி இப்படின்னு. குழந்தையை திட்டறா. ”என்ன பண்றேன் பாரு, இப்போ. முடியல என்னாலே”. கயிறால் கட்டி போட முயற்சிக்கறா. ம்ஹூம். அதுவும் முடியல. ”கூப்பிடறேன் பாரு பூச்சாண்டியை. அப்பத்தான் நீ அடங்குவே”.

அனைத்தும் அறிந்திருந்தாலும், இந்த உலகத்தையே காப்பவனானாலும், அந்த சமயத்தில் ஒரு குழந்தைதானே. அந்த தாய்க்கு மகன்தானே - பாலகிருஷ்ணன், அப்படியே பயப்படறா மாதிரி நடிக்கிறானாம். நடுங்கினானாம். ”அம்மா. வேணாம்மா. பூச்சாண்டியை கூப்பிடாதே. பயமாயிருக்கு(!!). நீ சொல்ற மாதிரியெல்லாம் கேக்கறேன். என்னை விட்டுடு. இனிமே நல்ல பிள்ளையா நடந்துக்கறேன்”.

ச்சின்ன குழந்தைமேல் தாய்க்கு வரும் கோபம் எவ்வளவு நேரம் தாங்கும். அதன் மழலையான குரலை கேட்கும்வரை. யசோதையும் கண்ணனை அப்படியே வாரியணைத்து முத்தமாரி பொழியறாளாம்.

இந்த காட்சியை ஸ்ரீ புரந்தரதாஸர் அப்படியே இந்த பாடலில் பாடியுள்ளார் - கும்மன கரெயதிரே. பாவம், அந்த குழந்தை ’பூச்சாண்டிக்கு’ பயந்து என்னல்லாம் செய்ய மாட்டேன்னு அம்மாகிட்டே சொல்லுது பாருங்க.


***

கும்மன கரெயதிரே அம்மா நீனு
கும்மன கரெயதிரே


பூச்சாண்டியை கூப்பிடாதேம்மா, நீ
பூச்சாண்டியை கூப்பிடாதேம்மா

சும்மனே இருவேனு அம்மிய பேடெனு
மம்மு உண்ணுதேனு அம்மா அளுவுதில்லா (கும்மன)


சும்மா இருப்பேன், முலைப்பால் கேட்கமாட்டேன்
உணவு உண்கிறேன், அம்மா இனிமேல் அழமாட்டேன் (கும்மன)

ஹெண்ணுகளிருவல்லிகே அவர
கண்ணு முச்சுவுதில்லவே
சின்னர படியேனு அண்ணன பையேனு
பெண்ணெய பேடேனு மண்ணு தின்னுவுதில்லா (கும்மன)


சிறுமிகள் இருக்குமிடத்தில் போய் அவர்களின்
கண்களை மூடமாட்டேன் (தொந்தரவு செய்ய மாட்டேன்)
சிறியவர்களை அடிக்க மாட்டேன்; அண்ணனை திட்ட மாட்டேன்
வெண்ணையை கேட்க மாட்டேன்; மண்ணைத் தின்ன மாட்டேன் (கும்மன)

பாவிகே போகே காணே அம்மா நானு
ஹாவினொளாடே காணே
ஆவின மொலெயூடே கருகள பிடே நோடே
தேவரந்தே ஒந்து டாவிலி கூடுவே (கும்மன)


கிணற்றடிக்கு போக மாட்டேன் அம்மா நான்
பாம்புகளோடு விளையாட மாட்டேன்
பசுக்களிடத்தில் (பால் குடிக்க) கன்றுகளை விட மாட்டேன்
கடவுளைப் போல் ஒரு இடத்தில் (சும்மா) அமர்ந்திருப்பேன் (கும்மன)

மகன மாதன்னு கேளுத்தா கோபிதேவி
முகுளு நகெயு நகுதா
ஜகதோதடேயனா ஸ்ரீ புரந்தர விட்டலனா
பிகிதப்பி கொண்டளு மோகதிந்தாக (கும்மன)


மகனின் பேச்சைக் கேட்டு தாயானவள்
நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டு
இந்த உலகத்தைக் காப்பவனாகிய ஸ்ரீ புரந்தர விட்டலனை
மிகுந்த பாசத்துடன் வாரியணைத்துக் கொண்டாள். (கும்மன)

***

இந்த அழகான பாடலை, வித்யாபூஷணரின் குரலில் கேளுங்கள்.***

ராஜஸ்ரீ வாரியரின், அழகான பரதநாட்டிய நடனத்தில், ஸ்ரீ கிருஷ்ணனின் அந்தக் குறும்பினை பாருங்கள்.***

4 comments:

புதுவையார் said...

தாஸ சாகித்யத்தைப் பொருளுடன் புரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வமதிகமுள்ளவன் நான்.நன்றி.தேவைப்பட்டால் முடிந்தவரை உதவவும் காத்திருக்கிறேன்.(ஓரளவு கன்னடம் தெரியும்). உளறல்கள் பலவுள்ள இணையத்தில் இப்படியொரு முயற்சியா! ஆச்சரியம்!!

ச்சின்னப் பையன் said...

மிக்க நன்றி புதுவையார். எனக்கும் தாய்மொழி கன்னடம் கிடையாது.

ஓரிரு வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் - பதிவு போடமுடியாமல் சில பாட்டுகள் இருக்கு. அதை உங்ககிட்டே கேட்கிறேன். நன்றி.

Anonymous said...

பொருளுடன் படிக்கும் போது ஒவ்வொரு கன்னட சொல்லும் புரிவது போல் இருக்கிறது. :-) அதிலும் தேவர போல் உட்கார்ந்திருப்பேன் என்று சொல்வதைப் படித்த போது புன்னகை வருகிறது. :-)

Anonymous said...

for some reason, I am not able to post using my google account. posted as anonymous. Dont think it is an issue with my google account as I could use it to post comments in other blogs. You may want to look into it. :-)

- Kumaran.