Friday, May 20, 2011

ஏன் எப்பவும் கடவுளை நினைக்கணும்?


தம்பி, கோயிலுக்கு போ. கடவுளை நினை. மனசுக்கு அமைதி கிட்டும்.

போங்கண்ணா. எனக்கு தியானம் எப்படி பண்ணனும்னு தெரியாது. கடவுள் ஸ்லோகம் / பாட்டு எதுவுமே தெரியாது. கோயில் எதுவுமே பக்கத்துலே இல்லே. ரொம்ப தூரம் போய்வர நேரம் இல்லே. உங்களுக்கு வேறே வேலையே இல்லே!!

கடவுளை நினையாதிருப்பதற்கு எவ்வளவு வேணா சாக்கு சொல்லலாம். ஆனா, அப்படி சொல்லக்கூடாதுன்னு - நான் சொல்லலே - புரந்தரதாசர் சொல்றாரு.

ஆமா. கடவுளை எந்நேரமும் நினைச்சிக்கிட்டிருந்தா என்ன நடக்கும்?

விருப்பும், வெறுப்பும் இல்லாத இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவர்க்கு எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை.

இதுவும் நான் சொன்னதில்லை. அட, புரந்தரதாசரும் சொல்லவில்லை. சொன்னது நம்ம அய்யன்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.


சரியா.

அதனால், இனிமே நோ சாக்கு. ஒன்லி ராம ராம.

இதே கருத்துகளை புரந்தரதாசர் எப்படி எல்லாருக்கும் புரியும்படி கன்னடத்தில் பாடியிருக்கிறார் பாருங்க. பிறகு கேளுங்க.


***

கலியுகதொளு ஹரி நாமவ நெனேதரே
குலகோடிகளு உத்தரிசுவவோ ரங்கா (கலியுக)


இந்த கலியுகத்தில், ஹரியின் பெயரை நினைத்தால்
உன் குலம் முழுவதற்கும் புண்ணியம் கிட்டும் (கலியுக)

சுலபத முக்திகே சுலபவெந்தேணிசுவ
ஜலருஹநாபன நெனே மனவே (கலியுக)


சுலபமாய் முக்தி பெற, சுலபமாய் நினைவில் வைக்கும்படியான
ஸ்ரீ கமலாநாபனின் (பத்மநாபனின்) பெயரை நினைத்திரு மனமே (கலியுக)

ஸ்னானவனறியேனு மௌனவனறியேனு
த்யானவனறியேன் எந்தெணபேடா
ஜானகிவல்லப தசரத நந்தன
கானவினோதன நெனெ மனவே (கலியுக)


ஸ்னானம் எப்படி செய்யணும்னு தெரியாது; மௌனமாய் இருக்கத் தெரியாது
தியானம் செய்யத் தெரியாது என்று சொல்ல வேண்டாம்
ஜானகியின் கணவனை, தசரதனின் மைந்தனை
பாடலை விரும்பிக் கேட்கும் ஸ்ரீ ராமனை நினைத்திரு மனமே (கலியுக)

அர்ச்சிஸலறியேனு மெச்சிசலறியெனு
துச்சனு தானெந்தெணபேடா
அச்சுதானந்த கோவிந்த முகுந்தன
இச்சேயிந்தலி நெனெமனவே (கலியுக)


அர்ச்சனை / பூஜை செய்யத் தெரியாது; கடவுளை மெச்சவும் (புகழ் பாடவும்) தெரியாது
(அதனால்) நான் ரொம்ப கெட்டவன் என்று நினைக்க வேண்டாம்
அச்சுதன், ஆனந்தன், கோவிந்தன், முகுந்தன், (ஆகிய ஹரியை)
பாசத்துடன் நினைத்திரு மனமே (கலியுக)

ஜபவொந்தறியேனு தபவொந்தறியேனு
உபதேச வில்ல எந்தெணபேடா
அபார மஹிமே ஸ்ரீ புரந்தரவிட்டலன
உபாயதிந்தலி நெனெ மனவே (கலியுக)


(மந்திரங்களை) ஜெபிக்கத் தெரியாது; தபஸ் (தியானம்) செய்யத் தெரியாது
(தக்க குருவினிடத்தில்) உபதேசமும் பெற்றுக் கொள்ளவில்லை என்று சொல்ல வேண்டாம்
பெரும் மகிமை வாய்ந்த ஸ்ரீ புரந்தர விட்டலன் பெயரை
உத்தியுடன் (ஆபத்து காலத்தில் துடுப்பு போல்) நினைத்திரு மனமே (கலியுக)

***

திரு.ஸ்ரீராம் கங்காதரன் அருமையா பாடியிருக்காரு.



***

Prof.வெங்கடேஷ் குமார் மிக அற்புதமா பாடிய இந்த பாடல்.



***

2 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல//

அடி சேரணும்-ன்னு தானே சொல்லி இருக்காரு ஐயன்! "எப்பமே" நினைச்சிக்கிட்டு இருக்கணும்-ன்னு எல்லாம் சொல்லலையே! :) அதெல்லாம் நெம்ப கஷ்டம்! ஏதோ அரை மணிக்கு ஒரு முறை காதலியை நினைப்பது போல் நினைச்சிக்கலாம்! "எப்பமே" நினைக்கணும்-ங்கிறதெல்லாம் டூ மச்! ஏய் கண்ணா - இந்த கண்டிஷன் எல்லாம் என் கிட்ட வேணாம், சொல்லிட்டேன்! நான் உன்னை அரை மணிக்கு ஒரு முறை நினைச்சிக்கறேன்! நீ என்னை எப்பமே நினைச்சிக்கோ! டீல் ஓக்கே? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கலியில் நாரணா என்றே நினைத்துக் கொள்ளுவோம்!
குலங்கள் தோறும் தேறும் என்றே உணர்ந்து கொள்ளுவோம்!
(கலியில் நாரணா)

முக்தி சுலபமே! அவன் நாமம் சுலபமே!
பக்தி சுலபமே! அந்தச் சுலபன் சுலபமே!
(கலியில் நாரணா)

குளித்து தியானம் செய்யக் கடினம் என்று சொல்லாதே!
களித்து மனதில் கண்ணன் பேரைச் சொன்னாற் போதுமே!
(கலியில் நாரணா)

பூசை அர்ச்சனைகள் செய்ய ஒன்றும் அறிகிலேன்!
ஆசை அவனேஅவனே என்று என்றும் உருகுவேன்!
(கலியில் நாரணா)

ஜபதபங்கள் தியானமோனம் செய்யத் தெரியுமோ?
அபயமென்று விட்டலனை அணைக்கத் தெரியுமே!
(கலியில் நாரணா)