Wednesday, May 18, 2011

தாயும் நீயே! தந்தையும் நீயே!

சரணாகதி தத்துவம்.

இப்படி சொன்னதும் நினைவில் வரக்கூடிய ஸ்லோகம் என்ன? பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சொன்னதுதான்.

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ!
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஸ்யாமி மா ஷுசஹா!


அர்ச்சுனா! அனைத்தையும் துறந்து என்னை சரணடை. அனைத்து பாவங்களிருந்து உன்னை நான் காப்பாற்றுகிறேன். கவலைப்படாதே.

அர்ஜுனனைப் போல் நானும் உன்னை சரணடைந்தேன். என் தாய், தந்தை, நண்பர்கள், பொன், பொருள் அனைத்தும் நீயே. நீ இருக்கும்போது எனக்கு எந்த கவலையும் இல்லை என்று ஸ்ரீ புரந்தரதாசர் பாடும் பாடல்தான் - நான் ஏகே படவனு.

***


நான் ஏகே படவனு நான் ஏகே பரதேசி
ஸ்ரீநிதி ஹரி எனகே நீ இருவ தனகா (நான் ஏகே)


நான் ஏழையும் அல்ல, அனாதையும் அல்ல
ஸ்ரீ நிதியான ஹரி நீ இருக்கும்வரை (நான் ஏகே)

புட்டிசித்த தாயி தந்தே இஷ்ட மித்ரனு நீனே
அஷ்ட பந்துவு சர்வ பளக நீனே
பெட்டிகேயோளகின அஷ்டா பரண நீனே
ஸ்ரேஷ்ட மூர்த்தி கிருஷ்ணா நீனிருவ தனகா (நான் ஏகே)


பிறவியைக் கொடுத்த தாய்/தந்தை நீயே; நண்பனும் நீயே
சுற்றம் சூழ இருக்கும் உறவினர்களும் நீயே
பெட்டிக்குள் இருக்கும் என் ஆபரணங்களும் நீயே
அனைவரிலும் உத்தமனான கிருஷ்ணனே, நீ இருக்கும் வரை (நான் ஏகே)

ஒட ஹுட்டிதவா நீனே ஒடலிகக்குவ நீனே
உடலு ஹொ தியலு வஸ்த்ர கொடுவே நீனே
மடதி மக்கள நெல்ல கடே ஹாயிசுவவ நீனே
பிடதி சலஹுவ ஒடேயா நீனிருவ தனகா (நான் ஏகே)


கூடப்பிறந்த சகோதர/சகோதரியும் நீயே; எனக்கு உணவளிப்பவனும் நீயே
இந்த உடலை மறைக்கும் ஆடைகளை கொடுப்பவனும் நீயே
மனைவி / குழந்தைகளுக்கு எல்லா இடத்திலும் அருள்/நன்மை பயப்பவன் நீயே
மறக்காமல் என்னை காப்பாற்றும் தலைவனே, நீ இருக்கும் வரை (நான் ஏகே)

வித்யா ஹேளுவ நீனே புத்திகலிசுவே நீனே
உத்தாரகர்த்த மம ஸ்வாமி நீனே
முத்து ஸ்ரீ புரந்தரவிட்டல நின்னடி மேலே
பித்து கொண்டிருவ எனகேதர பயவு (நான் ஏகே)


கல்வியை கற்றுக் கொடுக்கும் ஆசிரியனும் நீயே; நல்ல புத்தி கொடுப்பவனும் நீயே
என்னை முன்னேற்றும்படி செய்யும் என் தலைவனும் நீயே
ஸ்ரீ புரந்தரவிட்டலா, உன் பாதங்களைத் தொட்டு
எப்போதும் வணங்கிக் கொண்டிருக்கும் எனக்கு எதற்கு பயம்? (நான் ஏகே)

***

MS அம்மா மனமுருகி பாடும் இந்த பாடல்:



***

ரஞ்சனி & காயத்ரி பாடியது:



***

4 comments:

Giri Ramasubramanian said...

எம்.எஸ். பாடுவதைக் கேட்கையில் சிலிர்க்கிறது. அர்த்தத்தோடு படிக்கையில் மேலும் புளகாங்கிதம் அடைகிறது மனம். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி என வெறுமனே சொல்ல மனம் வரவில்லை. வசதியிருந்தால் உங்கள் கைகளுக்கு ஸ்வர்ணாபரணம் செய்து அணிவிக்க வேணும்.

சின்னப் பையன் said...

மிக்க நன்றி கிரி. உங்க வார்த்தைகளே போதும். என் சோம்பேறித்தனம் போய் நிறைய பாட்டுக்களை போடனும்ற ஆர்வம் வந்துடுச்சு. :-)

Anonymous said...

Great info

http://www.kannadaaudio.com/Songs/Devotional/home/


this site also contains many dasaru songs

குருமஹா பீடம் -வேப்பம்பட்டு said...

காலம் கடந்து கிடைத்தாலும் இந்த புதையல் மிகவும் நன்றாக இருக்கிறது. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . ரசித்து பாட முடிகிறது மிக்க நன்றி. தொண்டு தொடர்க
வேப்பம்பட்டு ம.ச.அமர்நாத்