Monday, January 5, 2015

கேசவா நாரயணா மாதவா!


ஹரிதாசர்களின் Hierarchy - யார் முதலில் வந்தாங்க, யார், யாருக்கு குரு என்கிற வரிசைகளை இந்த தளத்தில் விரைவில் படமாக போடுகிறேன்.



இன்றைய மிகமிக அருமையான, என் மனதுக்கு மிகவும் நெருங்கிய இந்தப் பாடலை எழுதியவர் - நம் தளத்தில் இவரது முதலாம் பாடல் இதுவே - அவர், ஸ்ரீ வாதிராஜர். இவர் வாழ்ந்த காலம் 1480 - 1600. 120 வருடங்கள் வாழ்ந்து, மாத்வ வழியில் பல்வேறு முக்கிய முடிவுகளை, புத்தகங்களை, பாடல்களை எழுதியவர். புரந்தரதாசர் இவரது சமகாலத்தில் வாழ்ந்தவர். வாதிராஜரின் விக்கி பக்கம் இங்கே : http://en.wikipedia.org/wiki/Vadirajatirtha

விழித்திருக்கும் நேரம் எல்லாம் அந்த கேசவன், நாராயணன், மாதவன் பெயரைச் சொல்லிக் கொண்டே இருக்கலாமே என்கிறார். அந்த பெயர் எப்படிப்பட்டது, அதனை உச்சரித்ததால் பலன் அடைந்தவர்கள் என்பதற்கு சில உதாரணங்கள் - இப்படிப்பட்ட விஷயங்களை இந்தப் பாடலில் பாடுகிறார்.

வாதிராஜரின் பாடல்களில் அவரது முத்திரையான ‘ஹயவதன’ என்னும் பெயர் இருக்கும். இவர் பூஜித்து வணங்கிய ஸ்ரீ ஹயக்ரீவரின் பெயரே அது. இந்தப் பாடலிலும் கடைசி வரியில் ‘ஹயவதன’ என்று பாடியிருக்கிறார்.



***

மாது மாதிகே கேசவா நாராயண மாதவ எனபாரதே

(ஒவ்வொரு முறை) பேசும்போதும், கேசவ, நாராயண, மாதவ என்று சொல்லக்கூடாதா..

ப்ராதஹ் காலதி எத்து பார்த்தசாரதி எந்து
ப்ரீதிலி நெனெது சத்கதிய ஒந்ததே வ்யர்த்த
மாதுகள் ஆடல்யாகே, ஹே ஜிஹ்வே, மாதவ எனபாரதே (மாது)

காலையில் எழுந்தவுடன் பார்த்தசாரதி என்று (அவன் பெயர்) சொல்லி,
(அவனைப் பற்றி) அன்புடன் நினைத்து, பிறவிப்பயனை அடையவில்லையென்றால் இந்தப் பிறவியே பயனற்றது;
வெட்டிப் பேச்சு பேசித் திரியாமல், ஹே நாக்கே, மாதவா என்று சொல்லக்கூடாதா (மாது)

ஜலஜ நாபன நாமவு ஈ ஜகக்கெல்ல ஜனன மரண ஹரவு
சுலபவாகிவுது சுகக்கே காரணவிது
பலித பாபகளனல்ல பரிஹரிசுவுதெந்து
திளிது திளியதிஹரே, ஹே ஜிஹ்வே மாதவ எனபாரதே (மாது)

அந்தப் பத்மநாபனின் பெயரானது, மறுபிறப்பு என்பதே இல்லாமல் செய்துவிடும்
உச்சரிக்க மிகவும் சுலபமானது; சுகங்கள் பெறுவதற்கு காரணமானது;
செய்து குவித்துள்ள பாவங்கள் அனைத்தையும் போக்க பரிகாரமானது;
இவை அனைத்தையும் தெரிந்தும், தெரியாதவாறே இருக்கிறாயே, ஹே நாக்கே, மாதவா என்று சொல்லக்கூடாதா (மாது)

தருணி திரௌபதிய சீரே செளெயுதீரே ஹரி நீனே கதிஎனலு
பரம புருஷ பவ பஞ்சன கேஷவ
துருளரமர்திசி தருணிகே வரவித்த
ஹரி நாமப் ப்ரியவல்லவே, ஹே ஜிஹ்வே மாதவ எனபாரதே (மாது)

திரௌபதியின் சேலையை (ஒருவன்) இழுக்கும்போது, அவள் நீயே கதி, ஹரி, என்று சொன்னாள்
உத்தமமானவனும், பிரச்னைகளில் சிக்கியவர்களுக்கு உதவுபவனுமான கேசவன் ஆனவன்
கெட்டவர்களை வீழ்த்தி திரௌபதிக்கு வரம் அளித்தான்
(அப்படிப்பட்ட) ஹரியின் பெயரானது (சொல்வதற்கு) மிகவும் பிரியமானதல்லவா, ஹே நாக்கே, கேசவா என்று சொல்லக் கூடாதா (மாது)

ஹேம கஷ்யப சம்பவ ஈ ஜகக்கெல்ல நாமவே கதி எனலு
ப்ரேமதிந்தலி பந்து காமிதார்த்தகளித்த
ஸ்வாமி ஹயவதனன நாமாவ நெனெயுத்தா
யாம யாமக்கே பிடதே ஹே ஜிஹ்வே மாதவ எனபாரதே (மாது)

ஹிரண்யகசிபு கதை (மூலம்) - நாராயணனின் பெயரே நமக்கு கதி (என்று தெரியவந்தது)
(கூப்பிட்டவுடன்) அன்புடன் வந்து, கேட்டதைக் கொடுப்பவன்,
(அந்த) ஹயவதனனின் பெயரை, ஒவ்வொரு வேளையும்,
விடாமல் சொல்லலாமே, ஹே நாக்கே, மாதவா என்று சொல்லக் கூடாதா (மாது)

***

கீழே கொடுத்திருக்கும் சுட்டியில் இந்தப் பாடலைப் பாடியவர் திரு. நரசிம்ம நாயக்.

***




2 comments:

maithriim said...

கிட்டத்தட்ட பஜ கோவிந்தம் மாதிரி.

amas32

maithriim said...

கிட்டத்தட்ட பஜ கோவிந்தம் மாதிரி.

amas32