Thursday, January 1, 2015

உத்தமர் தம் உறவு வேண்டும்!

உத்தமர் தம் உறவு வேண்டும்!

அனைவருக்கும் இனிய 2015 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!இன்றைய பாடலை இயற்றிய ஸ்ரீபாதராயர் பற்றி ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம். ஹரிதாசர்கள் வரிசையை துவக்கி வைத்தவரும், புரந்தரதாசர் முதலனாவர்களுக்கே முன்னோடியான இவரைப் பற்றி, இந்தப் பதிவில் பார்த்துக் கொள்ளவும்.

http://dasar-songs.blogspot.in/2011/05/blog-post.html

இந்தப் பிறப்பில் செய்யும் விதவிதமான பாவங்கள், மற்றவர்களுக்கு / உடன் இருப்போருக்குக் கொடுக்கும் தொந்தரவுகள் / துன்புறுத்தல்கள், இவை எதுவும் வேண்டாம், ஏன் என்னை மறுபடி மறுபடி பிறக்க வைக்கிறாய்? உன் பக்தர்கள் அனைவரையும் நீ காப்பாற்றியதைப் போல், என்னையும் காப்பாற்று. இப்போதைக்கு, இந்தப் பிறவியில், நான் எப்போதும் உத்தமர்களோடே இருக்கச் செய், மேன்மேலும் பாவங்களைச் செய்ய வைக்காதே - என்றெல்லாம் மனமுருகி கடவுளிடம் வேண்டுகிறார் ஸ்ரீபாதராயர்.

ஞான, பக்தி, வைராக்கியத்தை அடைந்து, இறைவனை தொடர்ந்து வழிபட்டு, அவனை அடைந்த ஸ்ரீபாதராயரே இப்படியெல்லாம் பாடினால், நாமெல்லாம் எந்த மூலைக்கு?

மிகமிக அருமையான இந்தக் கீர்த்தனையை கேட்டு / படித்து மகிழவும்.

உத்தமர சங்க எனகித்து சலஹோ
சித்த ஜனக சர்வோத்தம முகுந்தா (உத்தமர)

உத்தமர்கள் உடனே என்னை எப்போதும் இருக்கச் செய்
அனைவரில் உத்தமரே, முகுந்தனே, (உத்தமர)

திருதிருகி புட்டலாரே பரர பாதிசலாரே
பரிபரிய பாபகள மாடலாரே
மரண ஜனனகளெரடு பரிஹார மாடய்யா
கருணா சமுத்ரா முரவைரி கிருஷ்ணா (உத்தமர)

திரும்பத் திரும்பப் பிறக்க மாட்டேன்; (அப்படிப் பிறந்து) மற்றவரை துன்புறுத்த மாட்டேன்
விதவிதமான பாவங்களை செய்ய மாட்டேன்
மரணம், பிறப்பு இவ்விரண்டையும் (இந்த சுழற்சியை) எனக்குக் கொடுக்காதே
கருணைக்கடலே, முர (என்னும்) அரக்கனின் எதிரியான கிருஷ்ணனே (உத்தமர)

ஏன பேளலி தேவ நா மாடித கர்ம
நானா விசித்ரவை ஸ்ரீனிவாசா
ஹீனஜனரொளகாடா ஷ்வானிதகள கூடா
ஞானவந்தன மாடோ ஜானகிரமணா (உத்தமர)

என்ன சொல்வேன் தேவனே, நான் செய்த பாவங்கள்
விதவிதமானவை, ஸ்ரீனிவாசனே
கீழ்த்தரமானவர்களுடனான என் சேர்க்கை, அவர்களுடனான என் நட்பு (இவைகளை விடுவித்து)
(என்னை) ஞானியாக்குவிடு ஜானகி ரமணனே (உத்தமர)

நின்ன நம்பித மேலே இன்னுபய(வ்) யாதகே
பன்னகாதிப சயன மன்னிசய்யா
முன்ன பகுதரனெல்லா சென்னாகி பாலிசித
ஒடெய ரங்கவிட்டலா என்ன தொரெயே (உத்தமர)

உன்னை நம்பிய பிறகு, எனக்கு பயம் எதற்கு
பாம்புப் படுக்கையில் படுத்திருப்பவனே, என்னை மன்னித்துவிடு
முந்தைய பக்தர்களையெல்லாம் நன்றாக காப்பாற்றிய
ரங்க விட்டலனே, என் தலைவனே (உத்தமர)

**

இந்த அருமையான பாடலை திரு. நரசிம்ம நாயக் அவர்கள் பாடியதை இங்கு கேட்டு மகிழுங்கள்.***

3 comments:

amas said...

இந்த வருடம் நல்ல வருடமாக இருக்கும் என்று எனக்குப் பல நற்சகுனங்கள் மூலம் தெரிகிறது. அதில் உங்கள் பதிவு ஒன்று :-) நன்றி :-)

amas32

Venky said...

Wish you and your family a happy new year. Thanks for tagging me to this and am really happy to follow this.
Adiyen
arvenky

Venky said...

Wish you and your family a happy new year. Thanks for tagging me to this and am really happy to follow this.
Adiyen
arvenky