ஒரு கோவிலைப் பற்றி, அதில் இருக்கும் கடவுளின் சிறப்புகளைப் புகழ்ந்து தாசர்கள் பாடிய பல பாடல்கள் உள்ளன. அது நமக்குத் தெரியும். ஆனால், ஒரே பாடலில் பல க்ஷேத்ரங்களை குறிப்பிட்டு பாடியதோடல்லாமல், இறைவனை குழந்தை, மகன், தந்தை என்று பல்வேறு உறவுமுறைகளை குறிப்பிட்டு பாடியிருக்கும் ஒரு பாடலும் உண்டு.
அதுதான் இன்றைக்கு பார்க்க இருப்பது.
இந்த புகழ் பெற்ற பாடலில் வரும் க்ஷேத்ரங்கள்: ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், மகிஷபுரி (பேலூர்) மற்றும் உடுப்பி.
தாசர்கள் ஸ்ரீமன் நாராயணனை குழந்தையாக, மகனாக, தோழனாக, தகப்பனாக - இப்படி பல்வேறு ரூபங்களில் நினைத்து பாடியிருக்கின்றனர். ஒவ்வொன்றிலும் அந்த உறவிற்கேற்ப - கெஞ்சல், கொஞ்சல், மிரட்டல், அதட்டல் என்று பாடும் தொனி மாறும்.
திருப்பதி வேங்கடரமணனிடம், தாசர், தனக்கு தரிசனம் / மோட்சம் தரவேண்டி பல நாட்களாய் வேண்டிக் கொண்டிருக்கிறார். பல்வேறு பாடல்கள் பாடுகிறார். இறைவனுக்கு சேவை செய்கிறார். அப்படியும் இறைவன் வரவில்லை. இவருக்கு கோபம் (மாதிரி!) வந்துவிடுகிறது. அதெப்படி எனக்கு கருணை காட்டாமல் போகலாம்? பல்வேறு சமயங்களில் பல பேருக்கு கருணை / தரிசனம் தந்திருக்கிறாயே, ஹரியே, எனக்கு மட்டும் ஏன் இப்படி பாரபட்சம் காட்டுகிறாய்? என்று உதாரணங்கள் காட்டி ‘நானேன மாடிதேனொ’ என்று இறைவனை தோழனாக வரித்து, உரிமையுடன் கோபமாக பாடுகிறார்.
இப்படி கோபப்பட்டு, கடவுளை திட்டுகிறா மாதிரி பாடுவதை ‘நிந்தா ஸ்துதி’ என்று அழைக்கிறார்கள்.
சரி. அது என்ன உதாரணங்கள்?
திரௌபதி தேவி, அகலிகை, துருவன், குசேலன் - இப்படி பல்வேறு உதாரணங்களை சொன்னாலும், highlightஆ ஒண்ணு சொல்றாரு தாசர். அஜாமிளன். தன் வாழ்நாள் முழுக்க பாவ காரியங்களை செய்தவனாகிய அஜாமிளன், மரணப்படுக்கையில், தன் கடைசி மகனான நாராயணனைக் கூப்பிட்டதால், மோட்சத்துக்கு சென்றான். நான் இப்படி கஷ்டப்பட்டு உனக்கு தினமும் சேவை செய்கிறேன். ஆனா நீ என்னடான்னா, எதுவுமே கேட்காத, எதுவுமே (சத்காரியங்கள்) செய்யாத அந்த அஜாமிளனுக்கு முக்தியைக் கொடுத்தாய். அவன் என்ன உனக்கு அக்கா மகனா? என்று கேட்கிறார்.
வாங்க. அந்த பாட்டையும் பொருளையும் பார்த்தாலே உங்களுக்கு புரிஞ்சிடும். மிகமிகமிக அற்புதமான பாடல்.
***
நானேன மாடிதேனோ ரங்கய்யா ரங்கா நீ என்ன காய பேகோ (நானேன)
நான் என்ன (பாவம்) செய்தேன், ரங்கா நீ என்னை காப்பாற்ற வேண்டும் (நானேன)
துரியோதனன் கூப்பிட்டு (அவமானப்படுத்தியபோது) திரௌபதி தேவி கடிதமா எழுதி அனுப்பினாள்? (கூப்பிட்ட நேரத்திற்கு வந்து காப்பாற்றினாயல்லவா?) ஒரு நிமிடத்தில் ரிஷிபத்தினியின் (அகலிகை) சாபத்தை போக்கினாய் அல்லவா? (நானேன)
அரக்கர்களை அழித்தவனே கேளாய் துருவ மகாராஜா சின்னப்பையன்தானே? மறுபிறவி எடுக்கும்படியான பாவத்தை செய்த அஜாமிளன் (அப்படி எடுக்காமல் மோட்சத்தை கொடுத்து காப்பாற்றினாயே) அவன் என்ன உன் அக்கா மகனா? (நானேன)
மூன்று பிடி அவல் தந்தவருக்கு உலகிலுள்ள அனைத்து செல்வங்களையும் நீ கொடுத்தாய் அல்லவா? சர்ப்பத்தின் மேல் சயனித்திருக்கும் புரந்தர விட்டலனே இறைவனே (எண்ணிக்கையில் அடங்காதவனே) என்னைக் காப்பாற்று (நானேன)
***
இணையத்தில் இந்த பாடல் சரியாக கிடைக்கவில்லை. ஊரில் taperecorder cassetteலும், என் நினைவில் மட்டுமே இருப்பதால், கிடைத்ததை போட்டிருக்கிறேன். ஒரு பத்தியும் மிஸ்ஸு. பஞ்ச் லைனையும் (தலைப்பு) மாத்தி பாடிட்டாங்க.
ஆனாலும் கேட்கலாம். நல்லாவே பாடியிருக்காங்க.
***
++நான் பக்தவத்சலன் - அதாவது பக்தர்களை அரவணைத்து காப்பாற்றுவேன் என்று நீயே கூறியிருக்கிறாய். அதனால் உன் வாக்குப்படியே நீ என்னை காப்பாற்றி ஆகவேண்டும். அப்படி செய்யவில்லையென்றால், அதைப் பற்றி கவலைப்படுபவன் நீதானேயன்றி நானில்லை.
புரந்தரதாசருக்கு திருப்பதி வேங்கடரமணன் மேல் தனியான அபிமானம் இருந்தது. அவர் மேல் பற்பல பாடல்கள் பாடியிருக்கிறார். பாலாஜியின் பார்வை / தயை / தரிசனம் வேண்டி, அப்படி தரிசனம் கிடைத்தபிறகு ஆனந்தத்தில் - இப்படி பல சூழ்நிலைகளில் பாடல்கள் இயற்றியுள்ளார்.
அப்படிப்பட்ட ஒரு புகழ்பெற்ற பாடல்தான் இன்று பார்க்க இருப்பது.
வேங்கடரமணனே பாரோ என்னும் இந்த பாடலில், அவரை ஸ்ரீ கிருஷ்ணனாக, குழந்தையாக பாவித்து, கொஞ்சி, முத்தம் கொடுத்து, அவன் லீலைகளை பாடி தரிசனம் தரவேண்டுகிறார்.
தருமரின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் பீஷ்மர், விஷ்ணு சஹஸ்ரநாமத்தை அருளும் முன்னர், இந்த ஸ்லோகத்தை சொல்கிறார்.
உலகத்துக்கெல்லாம் தலைவன், தேவர்களுக்கெல்லாம் தேவன், ஆயிரம் நாமங்கள் கொண்டவனை எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கவேண்டும். அவன் பெயரை எப்பொழுதும் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும்.
இதற்கு பிறகே, விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ என்று ஆரம்பிக்கிறார்.
ஸ்லோகத்தில் பகவானின் பெயர்கள் தொடர்ச்சியா வருவது சரி. அதே மாதிரி பாட்டு இயற்ற முடியுமா? புரந்தரதாசரால் முடியும். அப்படிப்பட்ட ஒரு புகழ்பெற்ற பாடல்தான் இன்று பார்க்க இருப்பது.
தன வாழ்நாள் முழுக்க ஸ்ரீமன் நாராயணனின் புகழைப் பாடியே ; அவன் நாமங்களை சொல்லியே மகிழும் தாசரின் முன்னால் அந்த இறைவன் வந்தால், தாசர் என்ன கேட்பார்?
ஒன்றுமே கேட்க மாட்டார்.
மறுபடி அந்த நாராயணனின் பெயரைச் சொல்லியவாறே பாட ஆரம்பிப்பார். அப்படி அவர் பாடிய பாடல்தான் இது.
கோவிந்தனை கண்டேன் புண்டரீகாக்ஷனை ; பாண்டவர்கள் பக்கம் நின்ற கிருஷ்ணனை (கண்டேன)
கேசவ நாராயண ஸ்ரீ கிருஷ்ணன வாசுதேவ அச்சுதா அனந்தன சாசிர நாமத ஸ்ரீ ரிஷிகேஷன சேஷ சயன நம்ம வசுதேவ சுதன (கண்டேன)
கேசவனை நாராயணனை ஸ்ரீ கிருஷ்ணனை வாசுதேவனை அச்சுதனை அனந்தனை ஆயிரம் நாமங்கள் கொண்ட ஸ்ரீ ரிஷிகேசனை சேஷன் மேல் சயனித்திருக்கும் நம்ம வசுதேவரின் புதல்வனை (கண்டேன)
தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அளப்பரிய செல்வத்தையும், வளத்தையும் அளிக்கும் லக்ஷ்மியானவள், ஸ்ரீமன் நாராயணனை ஒருகணமும் விட்டுப் பிரியாமல் கூடவே இருந்து பணிவிடை செய்கிறாள்.
லக்ஷ்மி நரசிம்மர் லக்ஷ்மி நாராயணன் திருமால்
என்று பெயரில்கூட ஸ்ரீ ஹரியை விட்டுப் பிரியாமல் இருப்பதால்தான், நாம் ஸ்ரீமன் நாராயணனை வழிபடும்போது, 'லக்ஷ்மி சமேத ஸ்ரீ சத்ய நாராயணாய நமஹ' என்று லக்ஷ்மியையும் சேர்த்தே வழிபடுகிறோம்.
ஏன், ரெண்டு பேரில் ஒருத்தருக்குத் தெரியாமே இன்னொருத்தரை வணங்கக் கூடாதான்னு கேட்டா - சீதை இல்லாத ராமரை கவர முற்பட்ட சூர்ப்பனகைக்கும் ; ராமர் இல்லாமல் சீதையை கவர்ந்திட்ட ராவணனுக்கும் என்ன கதி ஆனதென்று ராமாயணம் சொல்லும்.
நிற்க.
அனைவரிலும் உத்தமமான, அதிசுந்தரனான, களங்கமில்லாத குணபரிபூர்ணனான ஹரிக்கு எக்காலமும்; எந்நேரமும் பணிவிடை செய்து கொண்டே இருப்பதென்பது எப்படிப்பட்ட புண்ணியம் தரும் செயலாகும்? அப்படி செய்வதற்கு லக்ஷ்மிதேவி எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும்?
இதைத்தான் புரந்தரதாசர், 'ஏனு தன்யளோ' என்னும் இந்தப் பாடலில் பாடியிருக்கிறார்.
முந்தைய காலங்களில், வேத சாஸ்திரங்களை மாணவர்கள், குருகுல வாசம் செய்து படித்து வந்தனர். அதாவது, குருவின் வீட்டிலேயே தங்கி, அவருக்கு பணிவிடைகள் செய்து, அவர் சொல்லிக் கொடுப்பதை கற்று வந்தனர். தன்னலமில்லாமல் கற்றுக் கொடுக்கும் குருவை, தெய்வத்துக்கு ஒப்பிட்டு,
குரு பிரம்மா குருர் விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர: குரு சாக்ஷாத் பரப்ரம்ம தஸ்மை ஸ்ரீ குருவே நம:
என்றும் சொல்லியிருக்கின்றனர்.
மாயாஜாலங்கள் எதுவும் செய்யாமல்; அந்த மாயாஜாலங்களை செய்யும் நாராயணனின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லும், பல்வேறு வித்யைகளை கற்றுக் கொடுப்பவரை குருவாக தேர்ந்தெடுத்தல் நலம்.
அப்படிப்பட்ட ஒரு நல்ல குருவை தேர்ந்தெடுத்து, அவரிடம் சரணடைந்து அனைத்தையும் கற்கும் பட்சத்தில், இதைவிட முக்திக்கு குறுக்குவழி எதுவும் கிடையாது என்று தாசர் சொல்கிறார்.
***
குருவின் முக்கியத்துவத்தை குறித்து பாடும் இந்த பாடலை பாடும்போது அவன் குருவைப் பற்றியும் சில வார்த்தைகள்.
பல வருடங்களுக்கு முன்னர், அவனுக்கும் ஒரு குரு கிடைத்தார். அதுவும் அவனாக தேடவில்லை. குருவாக தேடி அவனிடம் வந்தார். வேத, சாஸ்திரங்கள், ஜோசியம், வான் சாஸ்திரம், ஹரிதாஸ சாஹித்யங்கள், உபன்யாசம் ஆகிய எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்ற பண்டிதர். ஒரு சமயம் அவருக்கு தவறுதலாக செய்யப்பட்ட கண் அறுவை சிகிச்சையினால், ஒரு வருடம் வரை கண் பார்வை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டார். அச்சமயம் அவனும் வேலையில்லாமல் (அப்பவுமா?) ச்சும்மா இருந்ததால், அவருடனே முழுவதும் இருந்து அவருக்கு சேவை செய்யும் பாக்கியத்தை அடைந்தான். அவர் மகன் / மகள்களைப் போல் அவனை அவரும், அவருடைய உறவினர்கள் அனைவரும் நடத்தினர். தற்போதும் அப்படியே.
அவருக்குத் தெரிந்த பற்பல விஷயங்களை தொடர்ந்து பல வருடங்களுக்கு, அவர் அவனுக்கு கற்றுத் தந்தார். அவன் எவ்வளவு கத்துக்கிட்டான்றது தனிக்கதை.
திருவல்லிக்கேணியில் வாழும் அவனது குருவிற்கு தற்போது 85 வயது.
பரிபரி ஷாஸ்த்ரவனேகவனோதி வ்யர்தவாய்து பகுதி (குருவின)
விதவிதமான சாஸ்திரங்கள் பலவற்றை படித்தாலும் வீணாகிப் போய்விடும் பக்தி (குருவின)
ஆறு ஷாஸ்த்ரவ ஓதிதரேனு மூராறு புராணவ முகிசிதரேனு சாரி சஜ்ஜனர சங்கவ மாடதே தீரனாகி தான் மெரெதரேனு (குருவின)
ஆறு சாஸ்திரங்களை படித்தாலென்ன (3x6) 18 புராணங்களை முடித்தாலென்ன கற்று உணர்ந்த பெரியவர்களிடம் எதையும் கற்காமல் கர்வத்துடன் எனக்கு எல்லாம் தெரியும் என்று சொன்னாலும் (குருவின)
பெண்களை புறக்கணித்து சன்னியாசி ஆனாலென்ன பட்டினி கிடந்து உடம்பை துக்கப் படுத்தினாலென்ன ஸ்ரீ புரந்தரவிட்டலனை மறக்காமல் மனதில் வைத்து நினைக்கும் வரை (குருவின)