
தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அளப்பரிய செல்வத்தையும், வளத்தையும் அளிக்கும் லக்ஷ்மியானவள், ஸ்ரீமன் நாராயணனை ஒருகணமும் விட்டுப் பிரியாமல் கூடவே இருந்து பணிவிடை செய்கிறாள்.
லக்ஷ்மி நரசிம்மர்
லக்ஷ்மி நாராயணன்
திருமால்
என்று பெயரில்கூட ஸ்ரீ ஹரியை விட்டுப் பிரியாமல் இருப்பதால்தான், நாம் ஸ்ரீமன் நாராயணனை வழிபடும்போது, 'லக்ஷ்மி சமேத ஸ்ரீ சத்ய நாராயணாய நமஹ' என்று லக்ஷ்மியையும் சேர்த்தே வழிபடுகிறோம்.
ஏன், ரெண்டு பேரில் ஒருத்தருக்குத் தெரியாமே இன்னொருத்தரை வணங்கக் கூடாதான்னு கேட்டா - சீதை இல்லாத ராமரை கவர முற்பட்ட சூர்ப்பனகைக்கும் ; ராமர் இல்லாமல் சீதையை கவர்ந்திட்ட ராவணனுக்கும் என்ன கதி ஆனதென்று ராமாயணம் சொல்லும்.
நிற்க.
அனைவரிலும் உத்தமமான, அதிசுந்தரனான, களங்கமில்லாத குணபரிபூர்ணனான ஹரிக்கு எக்காலமும்; எந்நேரமும் பணிவிடை செய்து கொண்டே இருப்பதென்பது எப்படிப்பட்ட புண்ணியம் தரும் செயலாகும்? அப்படி செய்வதற்கு லக்ஷ்மிதேவி எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும்?
இதைத்தான் புரந்தரதாசர், 'ஏனு தன்யளோ' என்னும் இந்தப் பாடலில் பாடியிருக்கிறார்.
இப்போ பாடல்.
***
ஏனு தன்யளோ லக்குமி
எந்தா மான்யளோ
சானு ராகதிந்தா ஹரியா
தானே சேவே மாடுதிஹளு (ஏனு)
எத்தனை அதிர்ஷ்டம் வாய்ந்தவளோ லட்சுமி
எவ்வளவு மரியாதைக்கு உரியவளோ
சானு ராகத்தினால் அந்த ஹரியை
சேவை செய்து கொண்டிருக்கிறாள் (ஏனு)
கோடி கோடி ப்ருத்யரிரலு
ஹாடகாம்பரனா சேவே
சாடியில்லதே பூர்ண குணலு
ஸ்ரேஷ்டவாகி மாடுதிஹளு (ஏனு)
கோடி (எண்ணிக்கை) பணியாட்கள் இருந்தும்
ஸ்ரீ ஹரியின் சேவையினை
சாடியில்லதே ; குற்றமில்லாதவளான லட்சுமி
மிகவும் அருமையாக செய்து வருகிறாள் (ஏனு)
சத்ர சாமர வ்யஜன பர்யங்க
பாத்திர ரூபதல்லி நிந்து
சித்ர சரிதனு ஹாத ஹரியா
நித்ய சேவே மாடுதிஹளு (ஏனு)
குடை சாமரம் விசிறி கட்டில்
ஆகிய ரூபங்களில் நின்று
அதி சுந்தரனாகிய ஹரியை
தினமும் பணிவிடை செய்கிறாள் (ஏனு)
சர்வஸ்தலதி வ்யாப்தனாதா
சர்வதோஷ ரஹிதனாதா
கருட கமனன நாத
புரந்தர விட்டலன சேவிசுவளு (ஏனு)
எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவனும்
களங்கமில்லாதவனும்
கருடனை வாகனமாகக் கொண்டிருப்பவனுமாகிய
புரந்தர விட்டலனை வணங்குபவள் (ஏனு)
***
புத்தூர் நரசிம்ம நாயக் என்பவர் பாடியது:
மஹாலக்ஷ்மி ஷெனாய் அவர்கள் பாடியது:
***
1 comment:
நின்றால் குடையாம் இருந்தால் சிங்காதனமாம்... என்று எல்லாவிதமாகவும் ஆதிசேஷன் பணிவிடை செய்வதாகச் சொல்லிப் படித்திருக்கிறேன். திருமகளும் அதைப் போல் சத்ர சாமர வ்யஜன பர்யங்க பாத்திர ரூபங்களில் பணிவிடை செய்கிறாள் என்பது புதிதாகப் படிப்பது. நன்றி.
Post a Comment