தாஸன மாடிகோ என்ன
ஸ்வாமி ஸாஸிர நாமத வேங்கட ரமணா...
இன்னு தய பாரதே தாஸன மேலே...
இப்படி நாராயணனை வேண்டி பற்பல பாடல்கள் பாடியுள்ளார் புரந்தரதாஸர்.
அவனைக் காணவேண்டும்.
அவன் தரிசனம் கிடைக்க வேண்டும்.
அவன் வந்தால் வரங்களை கேட்கவேண்டும்.
தாஸர் பாடுகிறார் பாடுகிறார்.
பாடிக்கொண்டே இருக்கிறார்.
அப்படியே ஒரு நாள்,
பக்தனின் வேண்டுகோளுக்கிணங்க
விட்டலனும் வந்தே விட்டான்.
சங்கு சக்கரம் தரித்தவனாய்
கருடன் மேல் அமர்ந்தவனாய்
மந்தகாசப் புன்னகையுடையவனாய்
வேண்டுமளவுக்கு வரங்களை அளிக்கும் பக்தவத்ஸனாய்
விட்டலன் வந்தே விட்டான்.
தாஸருக்கு எப்படி இருக்கும்?
ஆடுகிறார்
பாடுகிறார்
ஆனந்தக் கூத்தாடுகிறார்
மேலும் என்ன செய்வார் தாஸர்?
நமக்குத்தான் தெரியுமே?
பாட்டுதான் பாடுவார்.
அந்த விட்டலனைக் குறித்து
பாடினார் ஒரு அருமையான பாடலை.
அது என்ன பாடல்?
இதோ இந்த பாடல்தான்.
தேவ பந்தா நம்ம ஸ்வாமி பந்தானோ
தேவர தேவ சிகாமணி பந்தானோ (தேவ பந்தா)
கடவுள் வந்தார் நம்ம ஸ்வாமி வந்தாரே
தேவர்களின் தேவர் சிகாமணி வந்தாரே (தேவ பந்தா)
உரக சயன பந்தா கருட கமன பந்தா
நர கொலிதவ பந்தா நாராயண பந்தானோ (தேவ பந்தா)
சர்ப்பத்தின் மேல் படுத்திருப்பவர் வந்தார்
கருடனின் மேல் பயணிப்பவர் வந்தார்
நரகத்தை ஒளிர்விப்பவர் வந்தார்
நாராயணன் வந்தாரே (தேவ பந்தா)
மந்தரோத்தர பந்தா மாமனோஹர பந்தா
பிருந்தாவன பதி கோவிந்த பந்தானோ (தேவ பந்தா)
மந்தர மலையை தூக்கியவர் வந்தார்
அதிஅற்புத அழகைக் கொண்டவர் வந்தார்
பிருந்தாவனத்தின் தலைவர்
கோவிந்தன் வந்தாரே (தேவ பந்தா)
நக்ரஹரனு பந்தா சக்தரதரனு பந்தா
அக்ரூர கொலிதா த்ரிவிக்ரம பந்தானோ (தேவ பந்தா)
முதலையை கொன்றவர் வந்தார்
சக்கிரத்தை தரித்தவர் வந்தார்
அக்ரூரருக்கு தரிசனம் தந்த
த்ரிவிக்ரமர் வந்தாரே (தேவ பந்தா)
பக்ஷிவாஹன பந்தா லக்ஷ்மணாக்ரஜ பந்தா
அக்ஷய பலதா ஸ்ரீ லக்ஷ்மிரமண பந்தானோ (தேவ பந்தா)
பறவைமேல் பயணிப்பவர் வந்தார்
லக்ஷமணின் அண்ணன் வந்தார்
அளவில்லாத (முடிவில்லாத) பலன்களை கொடுக்கும்
ஸ்ரீ லக்ஷ்மி ரமணன் வந்தாரே (தேவ பந்தா)
நிகம கோசர பந்தா நித்ய த்ருப்தனு பந்தா
நகேமுக புரந்தர விட்டல பந்தானோ (தேவ பந்தா)
வேதங்களின் உள்ளடக்கமாய் இருப்பவர் வந்தார்
எப்போதும் திருப்தியுடன் இருப்பவர் வந்தார்
புன்னகையுடன் இருக்கும்
ஸ்ரீ புரந்தர விட்டலன் வந்தாரே (தேவ பந்தா)
*****
புரந்தரதாஸரின் வரிகளை முழுவதுமாய் உணர்ந்து அனுபவித்து பாடும் பீமண்ணரின் குரலில் ‘தேவ பந்தா நம்ம’ இதோ.
அவரை அடுத்து ஒரு மழலையின் அழகான குரலில் ‘தேவ பந்தா நம்ம’.
****
தேவ பந்தா நம்ம ஸ்வாமி பந்தானோ
தேவர தேவ சிகாமணி பந்தானோ
*****
8 comments:
ச்சின்னப் பையன்....நீங்க நல்லா இருக்கணும்! ஏதோ ஒரு தீவிர அழுத்தத்தில், பீம்சென் ஐயா பாடுவதைக் கேட்டேன்....ஐயோ முருகா.....அப்படியே தேவன் வந்து வந்து வந்து கொண்டே இருந்தான்! லக்ஷ்மீ ரமண பந்தான்! தேவ பந்தா நம்ம தேவ பந்தான்!
பீம்சென் ஜோஷி பாடும் அதே மெட்டு மாறாமல்...கன்னடத்தில் இருந்து தமிழில்...தர முயன்றுள்ளேன்
தேவன் வந்தான், நம்ம தேவன் வந்தான்-ஓம்!
தேவாதி தேவ தெய்வ, சிகாமணி வந்தானோ!
(தேவன் வந்தான் நம்ம தேவன் வந்தான்)
பாம்பணை அப்பன் வந்தான், கருட வாகனன் வந்தான்!
நரகிலும் ஒளி தரும் நாராயணன் வந்தானோ!
(தேவன் வந்தான் நம்ம தேவன் வந்தான்)
மந்தர மத்து-ஆமை வந்தான், மாயன் அழகன் வந்தான்!
விருந்தாவன நந்தவன கோவிந்தனும் வந்தானோ!
(தேவன் வந்தான் நம்ம தேவன் வந்தான்)
ஆனை காத்தவன் வந்தான், ஆழி தொட்டவன் வந்தான்!
அன்பர்கள் கும்பிடும் திரு, விக்ரமனும் வந்தானோ
(தேவன் வந்தான் நம்ம தேவன் வந்தான்)
புள் அரையனும் வந்தான், இலக்குவன் அண்ணன் வந்தான்!
அள்ள அள்ளக் குறையாத, நப் பின்னை நாதன் வந்தானோ!
(தேவன் வந்தான் நம்ம தேவன் வந்தான்)
மறை பாற்கடல் வந்தான், மன நிறைவாக வந்தான்!
சிரிசிரி சிங்கார விட்டல் புரந்தரன் வந்தானோ!
(தேவன் வந்தான் நம்ம தேவன் வந்தான்)
purantharaa's simple words [with deep meaning]
sung in a very sweet and simple tune is a real treat!except the last verse-first line,your all other thamizh verses fit in the same tune .perhaps that particular line can be changed as :
"vedha utporulaanavar vanthaar "
ஆகா. மிக அருமையான பாடல். மிக்க நன்றி ச்சின்னப்பையன்.
வாங்க KRS,
4.05லேந்து 5.03 வரைக்கும் இதே பாடலில் மூழ்கியிருந்தீர்களா? அருமை. இந்த பாடலைப் போல் பற்பல முத்துக்கள் உள்ளன. அனைத்தும் ஒவ்வொன்றாய் இங்கேயும், கண்ணன் பாடல்களிலும் பதிகிறேன். இந்த 'மூடு' போய்விடாமல் இருக்க அந்த விட்டலன் தான் அருள்புரியணும். :-))
உங்க மொழிபெயர்ப்பு அருமை.
வாங்க லலிதாம்மா,
தாஸரும் எளிமை ; அவர் பாடல்களும் எளிமை; சரிதானே?
நன்றி குமரன். பாட்டை ரசித்தீர்கள்தானே? தாஸருக்கு நன்றி.
I very much like this taasar paadal site.
தங்களின் தாசர் பஜனை பாடல்கள் பதிவு மிகவும் அருமை
பதிவை ஓபன் செய்யும் போதெல்லாம் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி
அதிலும் தமிழ் விளக்கம் வேறு கொடுக்கிறீர்கள் . மிகவும் நன்றி
பாண்டு ரங்கா விட்டலே ஹரி நாராயண
புரண்டார விட்டலே பஜ நாராயண
ஹரி நாராயண ஹரி நாராயண
இந்த பாடலும் புரந்தர தாசர் பாடினாரா!
அந்த பாடலையும் போடுவீங்களா!
வாங்க ராஜேஷ்,
மிக்க நன்றி.
நீங்க சொல்ற வரிகள் ஏதோ ஒரு பாடலின் நடுவில் வருகின்ற வரிகள்னு நினைக்கிறேன். தேடிப் பார்த்து சொல்கிறேன்.
யோக நரசிம்மரைப் பார்த்தது மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சி.
அற்புதம்
Post a Comment