Wednesday, February 9, 2011

இன்னும் தயை வரவில்லையா கிருஷ்ணா?***

கடவுளே, நானும் எவ்வளவு நாளா கேக்கறேன், இந்த வருஷம் எனக்கு கண்டிப்பா 30% ஊதிய உயர்வு வேணும். கூடவே பக்கத்து வீட்டில் இருப்பது போல் ஒரு எல்சிடி டிவி வேணும்.

கடவுள்கிட்டே இப்படி யாரு வேண்டிப்பா?

பெரும்பாலான மக்கள் இப்படித்தான் வேண்டிப்பாங்க. கரெக்டா?

நம்ம தாஸர்களும் இப்படித்தான்.

கடவுள்கிட்டே எதையாவது கேட்டுக்கிட்டே இருப்பாங்க.

அப்படியா?

நிஜமாவா?

வெயிட்..

கேப்பாங்கன்னு சொன்னேன். என்ன கேப்பாங்கன்னு சொன்னேனா?

அவங்க கேட்பதெல்லாம் நாராயணனின் கடைக்கண் பார்வை மட்டுமே.

அவன் தயை இருந்தால் போதும் - வேறு எதுவும் வேண்டாம் என்றே வேண்டுகிறார்கள்.

நீ தய ராதா
காதனே வாரெவரு - கல்யாண ராமா நீ தய ராதா

இந்த பாட்டை கேட்டிருப்பீங்க (யேசுதாஸ் குரல் காதுலே கேக்குதா. ஆமா. சிந்துபைரவி படத்தில் வரும்!)

தியாகராஜர், ராமனிடம் - உன் தயை இல்லையான்னு கேட்கிறார்.

இதே போல் நம்ம தாஸரும் அந்த கிருஷ்ணனிடம் அவன் தயை வேண்டி நிறைய பாடல்கள் பாடியிருக்காரு.

ஹோல்ட் ஆன்.

இப்படி இவங்க ஏன்தயைகேக்குறாங்க?

எப்போதும் அவன் நினைவிலேயே இருக்கும், அவன் புகழையே பாடிக்கொண்டிருக்கும், அவனுக்கு பூஜை செய்துகொண்டிருக்கும் தாஸர்கள், வேறென்ன கேக்கப் போறாங்க.

இன்னொரு பிறவி வேண்டாம்.

அப்படியே இன்னொரு பிறவி கொடுத்தாலும், அந்த பிறவியிலும் இறைவனை நினைத்துக் கொண்டிருக்கும்படியான வரம்தான் அவங்க கேட்பது.

சரியா?

இன்னொரு முக்கியமான விஷயம், இதெல்லாம் நமக்காகவும்தான் பாடியிருக்காங்க.

அதனால், ஒழுங்கு மரியாதையா நாமும் இந்த பாடல்களின் பொருளை உணர்ந்து, பாடி, கடவுளை தொழுது, அவன் தயையை பெறுவோமாக.

இப்போ பாட்டு.

**

இன்னு தய பாரதே தாஸன மேலே
பன்னக சயன பரமபுருஷ ஹரியே (இன்னு)

இந்த தாஸனின் மேல் இன்னும் தயை வரவில்லையோ?
ஆதிசேஷனின் மேல் படுத்திருக்கும் அனைவரிலும் உத்தமனான ஹரியே (இன்னு)

நானா தேசகளல்லி நானா காலகளல்லி
நானா யோனிகளல்லி நெளிது ஹுட்டி
நானு நன்னது எம்ப நரகதொளகே பித்து
நீனே கதியெந்து நம்பித தாஸன மேலே (இன்னு)

வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலங்களில்
வெவ்வேறு கர்ப்பத்தில் பிறந்து
நான், எனது என்று இருமாப்பில் (நரகத்தில்) வீழ்ந்து (பிறகு புத்தி தெளிந்து, இப்போ)
நீயே கதி என்று வந்திருக்கும் இந்த தாஸனின் மேல் (இன்னு)

மனோ வாக் காயதிந்த மாடித கர்மகளெல்ல
தானவாந்தக நின்ன தான விட்டே
ஏனு மாடிதரேனு ப்ராண நின்னது ஸ்வாமி
ஸ்ரீநாத புரந்தர தாஸன மேலே (இன்னு)

மனம், சொல், உடல் ஆகிய மூன்றினாலும் நான் செய்த அனைத்து செயல்களையும்
தானவர்களை அழித்த உனக்கு அர்ப்பணம் செய்தேன்
நான் என்னதான் செய்தாலும், ஸ்வாமி, என் வாழ்க்கை (பிறவி) உன்னுடையதே
ஸ்ரீயின் (இலக்குமியின்) நாதனாகிய புரந்தரவிட்டலனே, இன்னும் இந்த தாஸனின் மேல் (இன்னு)


***

இன்னு தய பாரதே - சுதா ரகுநாதனின் குரலில்:***

இன்னு தய பாரதே - பம்பாய் சகோதரிகள் குரலில் :***

4 comments:

Lalitha Mittal said...

i tried to sing in thamizh in the tune as sung bybombay sisters by making very few changes in your[thamizh] words.my song was as below:

innum dhayai varavillaiyo indha dhaasanmel?
pannaga sayanane,paramapurushaa,hariye[innum]

2)as what you have written outside brackets

3)manam,sol,mei moonraalum naan seithavai yaavum
dhaanavaraiyazhiththa unakke arppanam seithen
naanenna seithaalum ennuyir unathaiyaa
sreenaathaa,purandharavitalaa,indha thaasanmel[innum]

theselyrics fit in that tune very well!
thank you ,i had a very nice time!

ச்சின்னப் பையன் said...

கலக்கறீங்க லலிதாஜி. நன்றிகள் பல.
அனைத்தும் கிருஷ்ணார்ப்பணம்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இன்னு தய பாரதே தாஸன மேலே//

புரந்தரதாசர் அன்று கேட்டது எவ்வளவு வசதியா இருக்கு எனக்கு? நானும் கேட்கிறேன் அவனை...
இன்னு தய பாரதே தாசன மேலே?
நீனே கதியெந்து நம்பின அடியேன் மேலே...

@லலிதாம்மா...மொழியாக்கம் அருமை!
இரண்டாம் பத்திக்கும் (அனுபல்லவி), முயலுங்கள்..மெட்டோடு!

ச்சின்னப் பையன் said...

வாங்க KRS தாஸரே,
இது எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நான் இந்த பாடலைத்தான் கேட்பேன்..