Saturday, February 5, 2011

என்ன தவம் செய்தனை யசோதா..


உலகத்தையே கட்டிக் காக்கும் அந்த பரம்பொருளின் தாய்க்கு ஏதாவது கவலை இருக்குமா?
குழந்தை கீழே விழுந்தால் அடிபடுமே என்று கவலைப்படுவாரா?
மண்ணைத் தின்று விட்டால் பதைபதைத்துப் போவாரா?

ஆம். கண்டிப்பாக.

‘டெல்லிக்கே ராஜான்னாலும், தன் தாய்க்கு அவர் சேய்தானே!!!’

அவர்தான் யசோதா.

உலகத்தையே தன் வாயில் காட்டினாலும்,
ஒரே சமயத்தில் பல வீட்டிலிருந்து வெண்ணைய் தின்று, மாட்டி கொண்டுவரப்பட்டாலும்,
இன்னும் பல்வேறு அதிசயங்களை நிகழ்த்திக் காட்டினாலும்

ம்ஹூம். No.

அவன் என் மகன்.

இன்னும்
ச்சின்னப் பையன்தான்
அவனுக்கு ஒண்ணும்(!) தெரியாது.

என்று சொல்வாராம்.

அப்பேர்ப்பட்ட குழந்தையை வளர்க்கும், கட்டிப் போடும், அந்த குழந்தையோடு விளையாடும் பாக்கியம் பெற்ற யசோதாவைத்தான் பாபநாசம் சிவன் பாடினார்.. என்ன தவம் செய்தனை யசோதா.

**



அதே போல்,

யசோதாவைப் பார்த்து பாடும்படி,
யசோதாவே பாடும்படி

பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார் நம்ம புரந்தரதாஸர்.

தன் அனைத்துப் பாடல்களைப் போலவே, இந்த பாடல்களிலும் கண்ணனின் புகழ், அவனிடத்தில் தான் கொண்ட பக்தி அனைத்தையும் காட்டியுள்ளார் தாஸர்.

அப்படிப்பட்ட பாடலில் ஒன்று - மிகவும் பிரபலமான, யூட்யூபில் தேடினால், நூற்றுக்கணக்கான வீடியோக்கள் வரும் - ஜகதோத்தாரணாவை இன்று பார்ப்போம்.

***

ஜகதோத்தாரனா அடிசிதளே யசோதே
அகிலத்தையே உத்தாரணம் (ரட்சிக்கும்) பரமாத்மனோடு
யசோதை விளையாடினாள்

ஜகதோத்தாரனா மகனெந்து திளியுதா
சுகுணாந்த ரங்கன அடிசிதளே யசோதே (ஜக)

அகில உலகத்தையே ரட்சிக்கும் கிருஷ்ணனை
(கடவுள் என்று நினைக்காமல்) தன் மகன் என்று மட்டுமே நினைத்து
அனைத்து நற்குணங்களை கொண்டவனாகிய அந்த ரங்கனோடு
ய்சோதை விளையாடினாள்

நிகமகே சிலுகதா அகணித மஹிமன
மகுகள மாணிக்யன அடிசிதளே யசோதே (ஜக)

வேதங்களுக்கு அப்பாற்பட்டவனும்
எண்ணிக்கையில்லா மகிமையுடையவனுமாகிய
குழந்தைகளில் மாணிக்கமாகிய
கிருஷ்ணனுடன் யசோதை விளையாடினாள்

அனோரணீயன மஹதோ மஹீயன
அப்ரமேயன அடிசிதளே யசோதே (ஜக)

அணுவைவிட சிறியவனாக இருப்பவனும்
பெரியதைவிட பெரியவனாகிய இருப்பவனும்
அளக்கமுடியாதவனுமாகிய கிருஷ்ணனுடன்
யசோதை விளையாடினாள்

பரம புருஷன பரவாசுதேவன
புரந்தர விட்டலன அடிசிதளே யசோதே (ஜக)

உத்தம புருஷனான இருப்பவனும்
சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்டவனுமாகிய
புரந்தர விட்டலனுமாகிய கிருஷ்ணனுடன்
யசோதை விளையாடினாள்

**

ஜகதோத்தாரனா, நம்ம எம்.எஸ். அம்மா குரலில்:



ஜகதோத்தாரனா, வீணை திரு.எஸ்.பாலசந்தரரின் கைவண்ணத்தில்.



**

ஜகதோத்தாரனா.
அந்த கிருஷ்ணனுக்கே அர்ப்பணம்.

**

4 comments:

Lalitha Mittal said...

the song which we hear frequently just because
m.s's voice is so sweet has such a beautiful meaning too!reminds me of one more most popular
krishna song"enna thavam seithanai,yasodha"

குமரன் (Kumaran) said...

நிறைய முறை எம்.எஸ். அம்மாவின் குரலில் இந்த இனிய பாடலைக் கேட்டிருக்கிறேன். இன்று பொருளும் புரிந்தது. நன்றி ச்சின்னப்பையன்.

சின்னப் பையன் said...

நன்றி லலிதா மிட்டல் மற்றும் குமரன்,

அடிக்கடி வாங்க. தாஸர்களின் பக்தியை, அவர்கள் கடவுளை கொண்டாடிய விதத்தை அனைவரும் அறிவோம்.

chinnapiyan said...

நன்றி நன்றி. அருமை வாழ்த்துகள் :)

நான் 30 வருடங்களாக மைசூர் BS Rajam Iyengar ன் ஜாகதோ தாரனாவை கேட்டுக்கொண்டு வருவதால்தான் உங்களை கேட்டேன். நன்றி மீண்டும். விளக்கவுரை மிகவும் உபயோகமாக எனக்கு உள்ளது.
https://www.youtube.com/watch?v=AHEnGa9TK24