Wednesday, August 23, 2017

எதைக் கண்டு மயங்கினாய்?


எதைக் கண்டு மயங்கினாய்?


நிந்தா ஸ்துதி: இறைவனின் சிறப்புகளை நேரடியாகப் பாடுவது போல்; அவனை திட்டுவது போல் திட்டி, அவனின் சிறப்புகளைப் பாடுவது - நிந்தா ஸ்துதி எனப்படும். பல தாசர்கள் இந்த மாதிரி பல பாடல்களைப் பாடியுள்ளனர். இன்றைய பாடலும் - புரந்தரதாசர் பாடிய, நிந்தா ஸ்துதியே ஆகும்.


இந்தப் பாடல், இறைவனின் மனைவி இலக்குமி தேவியைப் பார்த்து - நீ ஏன் இந்த இறைவனை - ஸ்ரீமன் நாராயணனை - திருமணம் செய்து கொண்டாய்? அவனிடம் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? எனக் கேட்டு - நாராயணனின் பத்து (முக்கிய) அவதாரங்களைப் பற்றியும் பாடுகிறார். அப்படிப் பாடும்போது, அந்த அவதாரங்களைப் பற்றி திட்டுவதைப் போல் சொற்களைப் பயன்படுத்திப் பாடுகிறார்.

அந்தந்த அவதாரங்களின் பெயர்களும் கீழே பொருளை விளக்கும் வரிகளில் கொடுக்கப்பட்டுள்ளன.



***

ஏனு மெச்சிதே ஹெண்ணெ ஏனு மருளாதே

(ஸ்ரீமன் நாராயணனிடத்தில்) எதைக் கண்டு நீ புகழ்ந்தாய் பெண்ணே,
எதனால் மயங்கினாய் (ஏனு)

நோடதி செலுவனிவ னெம்பனே சஞ்சல
மாடதி செலுவ நெம்பனெ பென்னு முகுடு
கூடதந்த ஹல்லு மொளதுத்தத மோரே
பூடகதனதி பாயி தெரெது அஞ்சிபகே (ஏனு)

மத்ஸ்யம் -> பார்ப்பதற்கு அழகாய் இருக்கிறானோ? ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டிருப்பவன்
கூர்மம் -> பேசும் பேச்சு அழகாய் இருக்கிறதோ? முதுகில் இவ்வளவு பெரிய மேடு இருப்பவன்
வராகம் -> பெரிய பல்லுடன்; முழ நீளத்தில் முகம் கொண்டவன்
நரசிம்மம் -> பயங்கரமான முகத்தைக் காட்டி பயமுறுத்துபவன் (ஏனு)

அணுரூபதவனிவ நிலுவுள்ள நரனல்லா
பனவதரிவவனந்தே கையல்லி கொடலி
மனுஜரனு தாபிட்டு கபிகளனு கூடுவ
மனெமனெயனு பொக்கு கத்து திம்புவகே (ஏனு)

வாமனன் -> ஒரு சமயத்தில் சிறுவன்; ஒரு சமயத்தில் மிகப் பெரியவன்; ஒரு நிலையில் நிற்கும் மானிடன் அல்லவே?
பார்கவ -> வனத்தை வெட்டி அழிக்கப்போவதுபோல் கைகளில் கோடரியுடன் சுற்றுபவன்
ராமன் -> (தன் உதவிக்கு) மனிதர்களை விட்டுவிட்டு, குரங்குகளைக் கூப்பிட்டவன்
கிருஷ்ணன் -> வீடுவீடாகப் போய் திருடித் தின்பவன் (ஏனு)

கம்பீர புருஷனிவ எம்பனே திகம்பர
அம்பரதொளகெ குதுரெயனு குணிஸுவ
அம்புஜாக்‌ஷ ஸ்ரீ புரந்தர விட்டலன
சம்ப்ரமதி நீ மெச்சி மதுவெயாத்யல்லே (ஏனு)

பௌத்த -> கம்பீரமாக இருக்கிறான் என்று சொல்லாமோ? திகம்பரமாக (அம்மணமாக) இருப்பவன்
கல்கி -> வானத்தில் குதிரையுடன் ஏறுபவன்
தாமரைக் கண்ணனான ஸ்ரீ புரந்தரவிட்டலனை
மிகவும் மகிழ்ந்து, காதலித்து நீ திருமணம் செய்துகொண்டாயே (ஏனு)

***

வித்யாபூஷணரின் குரலில் இந்தப் பாடல்:


No comments: