Tuesday, February 28, 2012

பாரய்யா வேங்கடரமணா...



புரந்தரதாசருக்கு திருப்பதி வெங்கடரமணன் மேல் அபார பிரியம். அவரைக் குறித்து பற்பல பாடல்களைப் பாடியிருக்கிறார். அனைத்துமே புகழ் பெற்ற பாடல்கள்தான். அவற்றில் ஒன்றுதான் இன்று பார்க்கப் போவது. இதுவும் ஒரு புகழ்பெற்ற பாடல்தான்.


ஸ்ரீமன்நாராயணனின் பத்து அவதாரங்களையும் சொல்லி, அவன் சிறப்புகளை பாடி, அவனை எப்படி அழைக்கிறார் என்று இந்த பாடலில் பார்ப்போம்.


பாரய்யா வேங்கடரமணா பாக்யதா நிதியே
பாரோ விஸ்வம்பரனே பாரோ
பக்தர சலஹுவனே பாரோ (பாரய்யா)

அளவில்லாத செல்வத்தை வேண்டியவருக்கு
வாரி வழங்கும் வேங்கடரமணனே, நீ வாராய்.
உலகத்தையே ஆடை/அணிகலனாக அணிந்தவனே,
பக்தர்களை கைவிடாமல் காப்பவனே, நீ வாராய் (பாரய்யா)

வேத கோசரனே பாரோ ஆதி கஷ்யபனே பாரோ
மேதினி சுரரொடெயனே பாரோ
பிரஹ்லாதன காய்தவனே பாரோ (பாரய்யா)

வேதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவனே,
முதன்முதலில் தோன்றிய கூர்மமே,
வராகனாய் உலகத்தை மீட்டவனே,
பிரகலாதனை காத்த நரசிம்மனே நீ வாராய் (பாரய்யா)

வாமன பார்கவனே பாரோ ராம கிருஷ்ணனே பாரோ
பிரேமதிம் பௌத்தனே பாரோ சுவாமி கல்கி நீ பாரோ (பாரய்யா)

வாமனனே, பார்கவனே, ராம, கிருஷ்ணனே,
அன்பே உருவான பௌத்தனே, கல்கியே நீ வாராய் (பாரய்யா)

குரு மத்வபதி நீ பாரோ வரத கேசவனே பாரோ
பரமாத்மா நீ பாரோ புரந்தரவிட்டலனே நீ பாரோ (பாரய்யா)

மத்வபதியான ஸ்ரீ மத்வரே, வரதராஜனே,
பரமாத்மனே, ஸ்ரீ புரந்தர விட்டலனே, நீ வாராய் (பாரய்யா)

*** மிகவும் அழகான இந்த பாடலை கேட்க:

http://www.muzigle.com/track/baarayya-venkataramana

***

அதே பாடல் முழுவதுமாக இல்லை, ஆனாலும் இவர் பாடும்போது கேட்பதற்கு ஆனந்தமாக இருக்கும்.

***

பாரய்யா வேங்கடரமணா!

***

1 comment:

Anonymous said...

தாசரு சாகித்யங்களில், எனக்கு மிகவும் பிடித்த பாடல்!
அதனால் இன்னும் லயிப்போடு, இசைத் தமிழில்.....

வாரய்யா வேங்கட ரமணா
வளங்கிளர் நிதியே
வாராய் வையத்தின் ஐயா
அன்பர்களைக் கைவிடாதே
(வாரய்யா)

ஓல மறைகள் காக்க மீனம்
ஒரு அமுதினை அருளக் கூர்மம்
அழுந்தும் உலகைத் தூக்க வராகம்
குழந்தைப் பேச்சுமெய் ஆக்கச் சிம்மம்
(வாரய்யா)

உலகை அளந்து, பரசு சுமந்து
உயிர் ராகவா, உயர் யாதவா
நிலத்தில் யார்க்கும் அன்பு சுரந்து
புத்தனே கல்கி வித்தனே
(வாரய்யா)

மத்வ பீட வரதனே - குரு
சித்த பீட அமுதனே
புரந்தர விட்டல நிரந்தரா
வரந்தர வாராய் வாராய்
(வாரய்யா)