Friday, February 10, 2012

கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா...



இன்றைய பாட்டின் முன்னுரை - திரு. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் தொடர் 'கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்'லிருந்து எடுக்கப்பட்டது.


பகவானுக்காக அவனது திருநாமத்தை நீங்கள் சொல்லவில்லை. உங்களுக்காக, உங்களின் நலனுக்காகத்தான் அவனது திருநாமத்தைச் சொல்கிறீர்கள். ஆகவே, அவனுடைய திருநாமத்தை, அனுதினமும் சொல்லவேண்டும்; சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும் என்று நீங்கள் மனதார ஆசைப்பட வேண்டும். ஒரு பொருளை அடைவதற்கு ஆசைப்படுகிறோம். இத்தனைக்கும் அந்தப் பொருள், மிகமிகச் சாதாரணமானதாக இருக்கலாம்; கீழே விழுந்தால், சுக்குநூறாக உடையக்கூடிய தன்மை கொண்டதாகவும் இருக்கலாம்.



ஆக, நிலையற்ற ஒரு பொருளை அடைவதற்கு, எவ்வளவு ஆசைப்படுகிறோம்! அந்த ஆசையை, பகவானின்மீது வையுங்கள்; அவனை நினைப்பதில் விருப்பமாக ஈடுபடுங்கள்; அவனுடைய திருநாமத்தைச் சொல்வதில் கிடைக்கிற ஆத்மதிருப்தியை நேசியுங்கள். பகவானின் திருநாமத்தை ஆசையுடனும் பிரியத்துடனும், அன்புடனும் நேசத்துடனும் நீங்கள் சொல்லச் சொல்ல, அவனது பரிபூரணமான ஆசீர்வாதம் உங்களையும் உங்களின் சந்ததியையும் வந்து அடையும் என்பதில் மாற்றமில்லை!



எனவே, பகவானின் நாமங்களை, ஒரு கடமையாக, ஒரு தவமாக, சந்தோஷமாக, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் சொல்லி வாருங்கள். யார் கண்டது… உங்கள் வீடு தேடி அந்தக் கண்ணனே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!


***

நரஜன்ம பந்தாக நாலிகே இருவாக
கிருஷ்ணா என பாரதே

கிருஷ்ணா எந்தரே கஷ்டவு பரிஹார
கிருஷ்ணா என பாரதே (நரஜன்ம பந்தாக)

மனிதப் பிறவி வாய்த்திருக்கும்போது,
நாக்கும் (பேச்சும்) இருக்கும்போது
கிருஷ்ணா என சொல்லக் கூடாதா?

கிருஷ்ணா என்று சொன்னால்,
அனைத்து கஷ்டங்களும் போய்விடுமே,
கிருஷ்ணா என சொல்லக் கூடாதா?

ஸ்நான பான ஜப தபகள மாடுத்தா
கிருஷ்ணா என பாரதே

ஷால்யான்ன ஷடுரச திந்து த்ருப்தனாகி
கிருஷ்ணா என பாரதே

கந்தன்ன பிகி பிகிதப்பி முத்தாடுதா
கிருஷ்ணா என பாரதே

மந்தகாமினியொளு சரசவாடுத்தலொம்மே
கிருஷ்ணா என பாரதே (நரஜன்ம பந்தாக)

குளிக்கும்போதும், குடிக்கும்போதும்,
தியானங்கள் செய்யும்போதும்

அறுசுவைகளுடன் செய்த விருந்தினை உண்டு
திருப்தியாக இருக்கும்போதும்

உடலெங்கும் சந்தனம் பூசிக் கொள்ளும்போதும்

மனதுக்கு பிரியமானவளுடன் சிரித்துப் பேசும்போதும்
கிருஷ்ணா என சொல்லக்கூடாதா?

பரிஹாஸ்யத மாத ஆடுத லொம்மே
கிருஷ்ணா என பாரதே

பரிபரி கெலசதொளு ஒந்து கெலசவெந்து
கிருஷ்ணா என பாரதே

துரித ராசிகளன்னு தரிது பிடிசுவ
கிருஷ்ணா என பாரதே

கருடகமன நம்ம புரந்தர விட்டலன
கிருஷ்ணா என பாரதே (நரஜன்ம பந்தாக)

நகைச்சுவையாக பேசும்போதும்

தினப்படி வேளைகளில் இன்னொரு வேலையாகவும்

துஷ்ட ராசிகள் தூர விலகிப் போகும்படியான

கருட வாகனனான நம் புரந்தர விட்டலனை
கிருஷ்ணா என சொல்லக் கூடாதா?

****

கேட்டீங்கல்லே? சொல்லுங்க. கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா..

***

இப்போ ஸ்ரீ வித்யாபூஷணர் குரலில் இந்த அருமையான பாடல்.

***

4 comments:

சமுத்ரா said...

நன்று. பாடலின் ராகத்தையும் போட்டால் நன்று.தாசரின் பாடல்களுக்கு Fixed ராகம் கிடையாது என்றாலும் பொதுவாகப் பாடப்படும் ராகத்தைப் போடலாம்.இந்தப் பாடலின் ராகம் சௌராஷ்டிரம்

குமரன் (Kumaran) said...

ஆஹா. நிஜம்மாவே ரொம்ப நல்ல பாடல். அதுவும் ரெண்டாவது பத்தி ரொம்ப பிடிச்சிருக்கு.

குமரன் (Kumaran) said...

ஆஹா. நிஜம்மாவே ரொம்ப நல்ல பாடல். அதுவும் ரெண்டாவது பத்தி ரொம்ப பிடிச்சிருக்கு.

தி. ரா. ச.(T.R.C.) said...

நன்றி எனது நெடுநாள் கனவு நிறவேறியது. தாசர் படால்களை பாடி தமிழ் அர்தத்தை படிக்க்வேண்டும் என்று. சி
ன்னப் பயல்தான் "பார் அதி சின்னப் பயல்" போல