Wednesday, January 26, 2011

என்னை உன் தாஸனாக ஏற்றுக் கொள்வாய்!


ஒரு கும்பல் நிறைந்த கடைத்தெருவில் ஒரு சிறுமி தன் தந்தையுடன் சென்று கொண்டிருந்தாள். அப்போ அப்பா சொன்னார் - என் கையை கெட்டியா பிடிச்சிக்கோம்மா. எங்கேயாவது தொலைஞ்சிடப் போறே. அதற்கு அந்த சிறுமி சொன்னது - என்னை உங்க கையை பிடிக்க சொல்லாதீங்கப்பா. நான் விட்டாலும் விட்டுடுவேன். நீங்க என்னை பிடிச்சிக்கோங்க. நீங்க என்(னை) கைவிட மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். அதனால் நான் தொலைந்து போகவும் வாய்ப்பில்லை.

இதே கருத்தைத்தான் புரந்தரதாஸரும் இந்த பாடலில் சொல்கிறார். நாம் கடவுளை வணங்கி, அடிபணிந்து, அவன் தாஸனாக மாறுவதைவிட, அந்த பெருமாளே நம்மை தாஸனாக
ஏற்றுக்கொண்டுவிட்டால், அதைவிட பெரிய பாக்கியம் நமக்கு ஏது? அப்படி தாஸனாகி விட்டால், அந்த கிருஷ்ணனே சொன்னதுபோல், ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ - தன்னை சரணடையும் தன் பக்தர்கள் அனைவரையும் அவர் காப்பாற்றுவார்.


சரி, அது என்ன பாட்டு?

தாஸன மாடிகோ என்ன
ஸ்வாமி சாசிர நாமத வேங்கடரமணா (தாஸன)

Infinity பெயர்களை கொண்ட வேங்கடரமணனே, ஸ்வாமி, என்னை உன் தாஸனாக ஏற்றுக் கொள்.

துர்புத்தி களனெல்ல பிடிஸோ
நின்ன கருணகவசவென்ன ஹரணக்க தொடிஸோ
சரணசேவே எனகெ கொடிஸோ
அபய கரபுஷ்பவ என்ன சிரதல்லி முடிஸோ (தாஸன)

கெட்ட எண்ணங்களை என் மனதிலிருந்து விடுவிப்பாய்
உன் கருணை என்னும் கவசத்தால் என் வாழ்க்கையை ரட்சிப்பாய்
உன் திருவடியை வணங்கி சேவை செய்யும் பாக்கியத்தை எனக்கு கொடுத்து
உன் அபயத்தை அளிக்கும் கரத்தை என் தலையில் வைத்து என்னை காப்பாற்று.

த்ருடபக்தி நின்னல்லி பேடி
நான் அடிகெரகுவேனய்ய அனுதின பாடி
கடெகண்ணிலே என்ன நோடி
பிடுவே கொடு நின்ன த்யானவ மனசுசி மாடி (தாஸன)

எப்போதும் மாறாதிருக்கும் திடமான பக்தியை உன்னிடத்தில் வேண்டி,
நான் உன் பாதத்தில் தினமும் விழுந்து உன் நாமத்தை பாடிக்கொடிருப்பேன்.
உன் கடைக்கண்ணால் என்னை பார்த்து
நான் என்றென்றும் உன்னை தூய மனதோடு நினைத்துக்கொண்டிருக்குமாறு அருள்புரிவாய்.

மரெஹொக்க வரகாய்வ பிரிது
என்ன மரெயதே ரஷணே மாடய்ய பொரது
துரிதகளெல்லவ தரிது
ஸ்ரீ புரந்தரவிட்டல என்னனு பொரெது (தாஸன)

காப்பாற்று என்று உன்னை வேண்டியவருக்கெல்லாம் சமயத்தில் வந்து உதவி புரிந்த வரலாறு இருக்கிறது
அதே போல் (நானும் வந்திருக்கிறேன்) என்னையும் கண்டிப்பாக காப்பாற்று
என் அனைத்து பாவங்களையும் போக்கி
உன் கருணையால் என்னை கரையேற்று ஸ்ரீ புரந்தர விட்டலா!

**


முதல் இரண்டு பத்திகளில் பக்தி மேலோங்க பெருமாளிடம் வேண்டுகோள் வைக்கும் தாஸர், கடைசி பத்தியில் உரிமையுடன் கேட்பது போல் பாடியிருக்கிறார். கஜேந்திர மோட்சம், த்ரௌபதிக்கு அபயம் அளித்தது இது போன்ற உதாரணங்கள் இருக்கிறதே, அதே போல் எனக்கும் அபய ஹஸ்தம் கொடுப்பாய் என்று கேட்கிறார்.

Total Surrender என்று சொல்வதைப் போல் தன்னை முழுமையாக அந்த புரந்தரவிட்டலனிடம் அர்ப்பணித்து, தன்னை ரட்சிக்குமாறு வேண்டி நிற்கும் தாஸரின் பக்தியை அப்படியே உள்வாங்கி நம்ம எம்.எஸ்.அம்மா பாடுவதை பார்த்து மகிழுங்க.




**
புரந்தரதாஸரின் தினம் அடுத்த வாரம் 2/2/2011 (புஷ்ய மாதம் அமாவாசையன்று) வருகிறது. அந்த நன்னாளில் புரந்தரவிட்டலனின் பேர்பாடி நாமும் அவனருள் பெறுவோமாக!

**

2 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Awesome song
Awesome composer
Awesome voice

//த்ருடபக்தி நின்னல்லி பேடி
நான் அடிகெரகுவேனய்ய அனுதின பாடி//

என்ன ரைமிங்க்கா இருக்கு!

//புரந்தரதாஸரின் தினம் அடுத்த வாரம் 2/2/2011//

அன்று கண்ணன் பாட்டில் இதை இடுகிறீர்களா? அழைப்பு அனுப்பட்டுமா?

புரந்தரதாசர் திருவடிகளே சரணம்!

நாடி நாடி நரசிங்கா! said...

தாஸன மாடிகோ என்ன
ஸ்வாமி சாசிர நாமத வேங்கடரமணா (தாஸன)

ஆஹா அருமை அருமை :
தாசர் பாடல்கள் மேல் விருப்பம் வருகின்றன
இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா கேட்க ஆரம்பித்திருக்கிறேன் .