Tuesday, April 5, 2011

கேசவ முதலான 24 நாமாக்கள் - பகுதி 1 of 2


விஷ்ணுவின் சஹஸ்ர நாமத்தில் 24 நாமங்கள் மிக முக்கியமாக கருதப்படுகின்றது. அவை என்ன?


கேசவ நாராயண மாதவ கோவிந்தா விஷ்ணு மதுசூதனதிரிவிக்கிரம வாமன ஸ்ரீதர் ரிஷிகேஷ பத்மநாபா தாமோதரசங்கர்ஷன வாசுதேவ பிரத்யும்ன அநிருத்த புருஷோத்தமா அதோக்ஷஜாநரசிம்ஹா அச்யுத ஜனார்த்தன உபேந்திரா ஹரி ஸ்ரீகிருஷ்ணா.


எந்த காரியத்தை செய்வதானாலும், மனத்தூய்மையுடன் கடவுளை வணங்கி செய்தால் அந்த காரியம் சுபமாக முடியும் என்பது நம்பிக்கை. அதற்காகவே பூஜை, சந்தியாவந்தனம் ஆகியவைகளை துவக்கும்போது 'ஆசமனம்' செய்யவேண்டுமென்றும், அப்படி செய்யும்போது மேற்கூறிய கடவுளின் 24 நாமாக்களையும் சொல்ல வேண்டும் என்றும் நிர்ணயித்திருக்கிறார்கள். பொருள் அறிந்தோ அறியாமலோ இந்த நாமாக்களை சொல்வதால் உள்ளே இருக்கும் பாவங்கள் போகும், மோட்சம் கிட்டும் என்பது அஜாமிளன் கதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த நாமாக்களின் மகிமையை நமக்கு தெரிவிக்க வேண்டுமென்று ஸ்ரீ கனகதாஸர் ஒரு பெரிய்ய்ய பாடலை பாடியிருக்கிறார். ஒவ்வொரு நாமாவுக்கும் கடவுளிடம் ஒரு வேண்டுகோள், இரண்டு வரி. வேண்டுகோள்னா உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் - கிரைண்டர், மிக்சி இதெல்லாம் கிடையாது. அவன் கருணைப் பார்வை மட்டுமே.


மிகப் பெரிய பாடல் ஆகையால், இரண்டு பகுதியா பிரிச்சி போடறேன். இதற்கு சரியான காணொளியும் கிடைக்கலை. வெறும் ஒலிதான். அதை இரண்டு பதிவிலும் இணைத்திருக்கிறேன். கேட்டு ரசிங்க. வித்யாபூஷணரின் குரலில் இந்த மிக மிக அழகான பாடலை கேட்டு மகிழுங்கள்.***


ஈச நின்ன சரண பஜனே ஆசேயிந்தா மாடிதேனோ தோஷராசி நாச மாடோ ஸ்ரீச கேசவ!

ஈசனே உன் பாதத்தை ஆசையுடன் வணங்கி பஜனை செய்தேன் நான் செய்த பாவத்தை நாசம் செய்வாம் ஸ்ரீ கேசவனே.

சரணு ஹொக்கேனய்யா என்ன மரண சமயதல்லி நின்ன சரண ஸ்மரணே கருணிசய்யா நாராயணா!


உன் பாதத்தை விடமாட்டேன், என்னை மரண சமயத்தில் உந்தன் சரணத்தை நினைக்கும்படி வைப்பாய் நாராயணா.

சோதிசென்ன பவத கலுஷ போதிசய்யா ஞானவெனகே பாதிசுவ யமன பாதே பிடிசு மாதவா!


வாழ்க்கையின் கஷ்டங்களை போக்கி, ஞானத்தை கொடுப்பாய் யமனால் ஏற்படும் துன்பத்திலிருந்து விடுவிப்பாய் மாதவா.


ஹிந்தனேக யோனிகளல்லி பந்து பந்து நொந்தேனய்யா இந்து பவத பந்த பிடிசோ தந்தே கோவிந்தா!


நிறைய பிறவிகள் எடுத்து வந்து நொந்து போயுள்ளேன் இந்த பந்த பாசத்திலிருந்து என்னை விடுவிப்பாய் கோவிந்தா.


ப்ரஷ்டனெனிச பேட கிருஷ்ணா இஷ்டு மாத்ர பேடிகொம்பே சிஷ்டரொடனே இஷ்டு கஷ்ட பிடிசு விஷ்ணுவே!

சுயநலவாதி என்றெண்ணாமல் இது மாத்திரம் செய்துவிடு நல்லவர்களுக்கு கஷ்டத்தை கொடுக்காதே விஷ்ணுவே.


மதனனய்யா நின்ன மஹிமே வதனதல்லி நுடியுவந்தே ஹ்ருதயதொளகே ஹுதுகிசய்யா மதுசூதனா!

மன்மதனின் தந்தையே, உன் மகிமையை என் வாயால் எப்போதும் பாடுவதற்கு இதயத்திலே (உன் மகிமையை) வைத்திருப்பாய் மதுசூதனா.


கவிதுகொண்டு இருவ பாப சவிது போகுவந்தே மாடோ ஜவன பாதேயன்னு பிடிசோ ஸ்ரீ த்ரிவிக்ரம!

என்னை சூழ்ந்திருக்கும் பாபத்தை ஓடஓட விரட்டுவாய் யமனின் செயல் தரும் கஷ்டத்திலிருந்து என்னை காப்பாய் திரிவிக்ரமா.


காமஜனக நின்ன நாமா ப்ரேமதிந்தா பாடுவந்தா நேமவெனகே பாலிசய்யா ஸ்வாமி வாமனா!


மன்மதனின் தந்தையே உன் நாமத்தை ப்ரேமத்துடன் பாடுவதை ஒரு வழக்கமாக வைத்துக்கொள்ள அருள்வாய் வாமனா.


மொதலு நின்ன பாத பூஜே ஒதகுவந்தே மாடோ என்ன ஹ்ருதயல்லி சதன மாடோ முததி ஸ்ரீதரா!

காலையில் (முதல்வேலையாக) உன் பாதபூஜை செய்ய அருள்வாய் என் இதயத்தில் வாசம் செய்வாய் ஸ்ரீதரா.


ஹுசியனாடி ஹொட்டே ஹொரெவ விஷயதல்லி ரசிகனெந்து ஹுசிகே ஹாகதிரோ என்ன ரிஷிகேசனே!

வெறும் பொய்களைச் சொல்லி (சம்பாதித்து) வயிற்றை ரொப்பும் மனிதனென்று எண்ணி என்னை புறக்கணித்துவிடாதே ரிஷிகேசனே.


பித்து பவதனேக ஜனும பத்தனாகி கலுஷதிந்தா கெத்துபோப புத்தி தோரோ பத்மனாபனே!


எல்லா ஜென்மங்களிலும் பாவங்களையே செய்து வந்திருக்கிறேன் - இதை வெல்லும் புத்தியைக் கொடு பத்மநாபனே.


காமக்ரோத பிடிசி நின்ன நாம ஜிஹ்வெயொளகே நுடிசோ ஸ்ரீ மஹானுபாவனாத தாமோதரா!


காம, க்ரோதங்களிலிருந்து விடுவித்து, உன் பெயரையே என் நாவில் இருக்கச் செய்வாய் எல்லோருக்கும் தலைவனான தாமோதரனே.


*****


http://music.raag.fm/Carnatic_Movies/songs-19128-Udaya_Raaga-Sri_Vidyabhushana இந்த சுட்டியில் உள்ள பட்டியலில் இரண்டாவது பாடலே நாம் மேலே பார்த்தது. கேட்டு மகிழுங்கள். பாடியவர் வித்யாபூஷணர்.


***


No comments: