Wednesday, March 2, 2011

ஒம் நமச்சிவாய.. ஓம் நமச்சிவாய..மாக மாதம், கிருஷ்ண பட்ச சதுர்த்தசியான இன்று மஹா சிவராத்திரி. சிவபெருமானுக்கு உகந்த நாள். சிவத்தலங்களில், சிவன் கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும் நாளாகும். சிவராத்திரியின் சிறப்புகளையும், சிவனைக் குறித்து பூஜைகள் செய்வதால் ஏற்படும் பலன்கள் குறித்து ஒரு நல்ல பதிவு இங்கே இருக்கிறது. படித்து விடவும்.

***

வைணவ சம்பிரதாயத்தை பின்பற்றும் புரந்தரதாஸர், கனகதாஸர் மற்றும் பிற தாஸர்கள் பாடிய பாடல்கள் (ஏறக்குறைய) அனைத்தும் ஸ்ரீமன் நாராயணன் மற்றும் லட்சுமிதேவியைக் குறித்து பாடியவையே ஆகும். ஆனாலும், ஸ்ரீருதரதேவரும் (சிவன்) அந்த சம்பிரதாயத்தின் தாரதம்யத்தில் (hierarchy) இருப்பதால், சில பாடல்கள் அவரைக் குறித்தும் பாடப்பட்டுள்ளன. மேலும், மஹா சிவராத்திரியை கொண்டாடும் மத்வர் மற்றும் தாஸர்கள் வழியில் வந்த வைணவர்கள், இன்று சிறப்பு பூஜைகளும் செய்து வழிபாடு செய்கின்றனர். ருத்ரதேவரைக் குறித்து மத்வர், ஸ்ரீ வாதிராஜர், ஸ்ரீ வியாஸராஜர் மற்றும் பலரும் பல்வேறு ஸ்தோத்திரங்களை அருளியுள்ளனர். அவை இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.


***

இன்று நாம் பார்க்கப் போகும் இந்தப் பாடலை இயற்றியவர், ஸ்ரீ விஜயதாஸர். காலம் 1682-1755. புரந்தரதாஸரை தன் குருவாக ஏற்று, அவரைப் போலவே இனிமையாகவும் எளிமையாகவும் கன்னடத்தில் ஏகப்பட்ட பாடல்களை எழுதியவர். இவரது பாடல்களின் இறுதியில் ‘விஜயவிட்டலா’ என்ற பெயரைப் பொறித்து, அந்த பாடல்களை இறைவனுக்கு அர்ப்பணித்தவர். இந்த விஜயதாஸர், ஈசனைக் குறித்து பாடிய பாடல் இதோ.

கைலாச வாசா கௌரீஸ ஈசா
தைல தாரேயந்தே மனசு கொடோ ஹரியல்லி சம்போ (கைலாச)


கைலாச வாசனே கௌரியின் தலைவனே ஈசனே
எண்ணெய் ஊற்றுவதைப் போல் (தெளிவாக, மனது அலைபாயாமல்)
ஹரியினிடத்தில் மனதைக் கொடுக்க வரம் தருவாய் சம்போ (கைலாச)

அஹோராத்ரியலி நானு அனுசராக்ரனியாகி
மஹியொளகே ஜரிசிதெனோ மஹாதேவனே
அஹிபூஷணனே என்ன அவகுணகளெணிசலதே
விஹித தர்மதி விஷ்ணு பகுதியனு கொடோ சம்போ (கைலாச)


இரவும் பகலுமாக நான் உன் வேலைக்காரனாக வேண்டி
இந்த உலகத்தில் பிறந்தேனே மஹாதேவனே
பாம்பை அணிந்தவனே, என் கெட்ட எண்ணங்களை எண்ணாமல்
விதித்த தர்மங்களின்படி விஷ்ணுவை வணங்க பக்தி கொடு சம்போ (கைலாச)

மனசு காரணவல்ல பாப புண்யக்கெல்லா
அனலாக்‌ஷ நின்ன ப்ரேரணேயில்லதே
தனுஜ கதமன ஹரி தண்ட ப்ரணமமால்பே
மணிசோ ஈ ஷிரவ சஜ்ஜன சரண கமலதலி (கைலாச)


மனது காரணமில்லை பாவ புண்ணியங்களுக்கெல்லாம்
தீஜ்வாலை (போல் கண்களையுடையவனே) உன் ஆணையில்லாமல்;
(சர்வாங்கமும் தரையில் பட) சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்த செய்த என்னை
மன்னிப்பாய், இந்த (என்) சிரசை, படித்த, நற்குணங்களுடையவர்களின் பாதங்களில் விழுந்து வணங்குவேன் (கைலாச)

பாகீரதீ ஹரனே பயவ பரிஹரிசய்யா
லேசாகி நீ சலஹோ சந்தத சர்வதேவா
பாகவத ஜனப்ரிய விஜயவிட்டலங்க்ரி
ஜாகு மாடதே பஜிப பாக்யவனு கொடோ சம்போ (கைலாச)


பாகீரதியை காப்பாற்றியவனே என் பயத்தை போக்குவாய்
என்னை கரையேற்றுவாய், எப்போதும் அனைவருக்கும் தலைவனே
பக்திமான்களுக்கு பிரியமான விஜயவிட்டலனைக் குறித்து
சோம்பலில்லாமல் எப்போதும் பாடிக் கொண்டிருக்கும் பாக்கியத்தை கொடு ஈசனே (கைலாச)

***

கேட்ட வரங்களை தவறாது அளிக்கும் சிவனை வணங்கி, அந்த விஷ்ணுவை மறக்காமலிருக்கும் வரத்தை தருவாய் என்று என்ன அழகாய் வேண்டுகிறார், இந்த விஜயதாஸர்.

***

இந்த பாடலை நம்மவர் எப்படி பாடுறார் கேளுங்க. கண்டிப்பா மனசு உருகிடும். ஓம் நமச்சிவாய.***

நம: பார்வதி பதயே.. ஹர ஹர மஹாதேவ..

***

3 comments:

Anonymous said...

மிக்க அருமை சத்யா
தெளிவாக, மனது அலைபாயாமல்)
ஹரியினிடத்தில் மனதைக் கொடுக்க வரம் தருவாய்
என் கெட்ட எண்ணங்களை எண்ணாமல்
விதித்த தர்மங்களின்படி விஷ்ணுவை வணங்க பக்தி கொடு சம்போ //

இந்த மாதிரி ஈசனிடம் பெருமாள் மீது தூய பக்தி கொடு என்றெல்லாம் வேண்டியிருக்கிறேன் . ஆனால் வேண்டும்போது எங்கே சிவன் கோச்சுப்பாரோ என்று எண்ணி சிறிது தயக்கத்தோடுதான் வேண்டுவேன் . இப்ப தாசரே இந்த மாதிரி பாடியிருக்கிரப்போ தைரியமா சிவன்கிட்ட பெருமாள் பக்தி கொடுக்க வேண்டாலாம் என்று தோன்றுகிறது . மிக்க மிக்க நன்றி ஜி!

Lalitha Mittal said...

joshiji is taking us straight to shivaa's kailasam with his ' ganeerkkural'.v.dasa's
lyrics sung by joshiji sounds [tastes] like
fruits dipped in honey!iam at loss of words to make thamizhppaattu which can fit in this tune.
total surrender to kailasa vaasan;aum namah
shivaaya!

குமரன் (Kumaran) said...

அருமையான பாடல். நம்மவரும் ரொம்ப அருமையாகப் பாடியிருக்கிறார்.