Monday, February 2, 2015

ஸ்ரீ குரு ராகவேந்திரரை வணங்குவோம்

இறைவனைப் பற்றி தாசர்கள் பாடிய பாடல்களை பார்த்தோம். பின்னர் வந்த தாசர்கள்,  குருபக்தியை வெளிப்படுத்தும் விதமாக, தங்கள் குருவைக் குறித்தும் பல பாடல்களைப் பாடியுள்ளனர்.

அவற்றுள் ஒருவரான கமலேஷ விட்டல தாசர் என்பவரின் பாடலை இன்று பார்ப்போம். இவர், மந்திராலய மகான், ஸ்ரீ குரு ராகவேந்திரரின் வழி வந்தவர் ஆவார். ஆகவே குருவைக் குறித்து பல அருமையான பாடல்களைப் பாடியுள்ளார்.



இவரது ‘கரெதரே பரபாரதே’ பாடலை ஏற்கனவே இங்கே பார்த்துள்ளோம்.

***

துங்கா தீர விராஜம் பஜமன
ராகவேந்திர குரு ராஜம் பஜமன (துங்கா)

துங்கபத்ரா நதி தீரத்தில் வீற்றிருப்பவரை வணங்குவோம்
ராகவேந்திரரை, குருராஜரை வணங்குவோம் (துங்கா)

மங்கள கர மந்திராலய வாசம்
ஸ்ரிங்காரானன ராஜித ஹாசம்
ராகவேந்திர குரு ராஜம் பஜமன (துங்கா)

மங்களங்களைத் தரக்கூடிய மந்திராலயத்தில் வசிக்கும்
அழகான திருமுகத்தில், வசீகரிக்கும்படியான புன்னகையை உடைய
ராகவேந்திரரை, குருராஜரை வணங்குவோம் (துங்கா)

கரத்ருத தண்ட கமண்டல மாலம்
சுருசிர சேலம் த்ரித மணி மாலம்
ராகவேந்திர குரு ராஜம் பஜமன (துங்கா)

கைகளில் தண்டம், கமண்டலங்களை கொண்டவரான
அழகான, காவி உடை அணிந்தும், கழுத்தில் (துளசி) மணிமாலை அணிந்தவருமாகிய
ராகவேந்திரரை, குருராஜரை வணங்குவோம் (துங்கா)

நிருபம சுந்தர காய சுஷீலம்
வர கமலேஷார்பித நிஜ சகலம்
ராகவேந்திர குரு ராஜம் பஜமன (துங்கா)

ஒப்பில்லாதவரும், தூய்மையான மேனியைக் கொண்டவரான
(அனைத்தையும்) கிருஷ்ணார்ப்பணம் என்று சமர்ப்பிப்பவருமான
ராகவேந்திர குரு ராஜம் பஜமன (துங்கா)

***

இந்தப் பாடலை பாடியுள்ள திரு.மகாராஜபுரம் சந்தானம் அவர்கள்: (Youtubeல் இன்னும் பலர் பாடியதும் கிடைக்கும்).



2 comments:

Vaishnavi said...

do you know a song written by purandaradasar Muthina ungara rama kotta hanumanu(A pearl ring given by ama.whole sundaragandam in this krithi.i search the google.i am not get the right one.

சின்னப் பையன் said...

தெரியலீங்க. கண்டிப்பா தேடிப் போடறேன். நன்றி :-)