Friday, February 20, 2015

ராமா, உன் கால்களைக் காட்டு!

ராமா, உன் கால்களைக் காட்டு!

ஸ்ரீ ரங்கனாதனின் கால்களின் பெருமையைப் பற்றி இந்தப் பாட்டில் பார்த்தோம்.



அப்படிப்பட்ட பாதங்களைப் பற்றி, இவ்வுலகில் வேறொன்றினைப் பற்றியும் கவலைப் படாமல், நமக்கு வேண்டிய அனைத்தையும் அந்த ராமனே பார்த்துக் கொள்வான் என்ற பொருளுடன் ஸ்ரீபாதராயர் பாடும் பாடல் இது.



***

ஸ்ரீராமா நின்ன பாதவ தோரோ
மோஹன்ன குணதாமா நின்ன மோஹத பாதவ (ஸ்ரீராமா)

ஸ்ரீராமா உன் பாதங்களைக் காட்டு
நற்குணங்கள் அனைத்தையும் கொண்டவனே, உன் அழகிய பாதங்களைக் காட்டு (ஸ்ரீராமா)

வரகுணஜால சுரகணலோல 
கருணா பால தருணி பரிபால (ஸ்ரீராமா)

உன்னதமான குணங்களைக் கொண்டவனே, கடவுளர்கள் சூழ் வலம் வருபவனே
கருணையுள்ளம் கொண்டவனே, பெண்ணைக் (திரௌபதி, அகலிகை) காப்பாற்றியவனே (ஸ்ரீராமா)

அஜபவ புஜித கஜவர பாவித 
சுஜனர சேவித த்ரிஜக வந்தித (ஸ்ரீராமா)

அனைவர்களாலும் பூஜிக்கப்படுபவனே; யானைக்கு வரம் கொடுத்து காத்தவனே
மக்களால் வணங்கப்படுபவனே, மூவுலகிலும் கொண்டாடப்படுபவனே

அங்கஜ ஜனக விஹங்க துரங்க
துங்க விக்ரம ஸ்ரீ ரங்க விட்டலா (ஸ்ரீராமா)

கருணையுள்ளம் கொண்டவனே, தந்தையே, சூரியனே, (சூரியனைப் போல்) வேகமாகப் பயணிப்பவனே,
உயர்ந்தவனே வீரனே ஸ்ரீ ரங்க விட்டலா (ஸ்ரீராமா)

****





***

Sri Rama Ninna Padhava Thoro by SriPadaRayaru


No comments: