Tuesday, October 20, 2015

தர்மத்தின் வாழ்வுதனை..


தர்மத்தின் வாழ்வுதனை..

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இறுதியில் தர்மமே வெல்லும்.
இந்த வாக்கியத்தின் பொருளையே இந்த முழுப்பாடலில் சொல்லியிருக்கிறார் புரந்தரதாசர்.

நமக்கு கெட்டது நினைப்பவர்கள், நம் எதிரிகள், இப்படி அனைவருக்கும் நாம் என்ன செய்ய வேண்டும்? பாடலைக் கேட்டு, விளக்கத்தைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இப்படியெல்லாம் செய்ய முடியுமா? செய்யவும் வேண்டுமா என்ற கேள்விகளுக்கு பதில்? தாசர் சொன்னபிறகு அதற்கு எதிராக ஏதேனும் சொல்ல முடியுமா? அதனால் அவர் சொன்னதேதான் பதில்.



***

தர்மவே ஜயவெம்ப திவ்ய மந்த்ர
மர்மவனரிது மாடலு பேகு தந்த்ர (தர்மவே)

தர்மம் வெல்லும் - இதுவே உண்மையான மந்திரம் ஆகும்
அது எப்படி என்று தெரிந்து கொள்வது சுலபமல்ல (சில வழிகளைக் கையாள வேண்டும்)

விஷவிக்கிதவகே ஷட்ரசவனுணிசலு பேகு
த்வேஷ மாடிதவன போஷிசலு பேகு
புசியாடி கெடிசுவன ஹாடி ஹரசலு பேகு
மோச மாடுவன ஹெசரு மகனிகிட பேகு (தர்மவே)

விஷம் கொடுத்தவருக்கு அறுசுவை உணவுகளையும் கொடுக்க வேண்டும்
விரோதம் செய்தவனிடம் நட்பு பாராட்ட வேண்டும்
பொய்களைச் சொல்லி (நம்மை) கெடுப்பவனை, பாடிப் புகழ்ந்து பாராட்ட வேண்டும்
மோசம் செய்பவனின் பெயரை நம் வாரிசுக்கு வைக்க வேண்டும் (தர்மவே)

ஹிந்தே நிந்திபரன்னு வந்திசுதலிரபேகு
பந்தனதொளிட்டவர பெரெய பேகு
கொந்த வைரிய மனெகே நடெது ஹோகலு பேகு
குந்தெணிசுவவர கெளெதன மாட பேகு (தர்மவே)

நம் பின் நம்மைப் பற்றி புரளி பேசுபவரை எப்போதும் வணங்கிக் கொண்டிருக்க வேண்டும்
நம்மை கைது செய்ய வைத்தவரை (பிரச்னைகளிலிருந்து) காப்பாற்ற வேண்டும்
எதிரியின் வீட்டுக்கு நடந்து சென்று (அவரிடம்) பேச வேண்டும்
நமக்கு கெட்டது நடக்கவேண்டும் என்று நினைப்பவருக்கு நல்லதே செய்ய வேண்டும் (தர்மவே)

கொண்டைது படியுவர கொண்டாடுதிர பேகு
கண்டு சஹிசதவர கரெய பேகு
புண்டரீகாக்‌ஷ ஸ்ரீ புரந்தர விட்டலன்ன
கொண்டாடி தான் தன்யனாக பேகு (தர்மவே)

நமக்கு துன்பம் கொடுப்பவரை, புகழ்ந்து கொண்டாட வேண்டும்
நம்மைக் கண்டு பொறாமை கொள்பவரை வீட்டுக்குக் கூப்பிட்டு (உபசரிக்க) வேண்டும்
புண்டரிகாட்சனான ஸ்ரீ புரந்தர விட்டலனை
கொண்டாடி, மகிழ்ச்சி பெற வேண்டும் (தர்மவே)


***



***

1 comment:

இனியன் பாலாஜி said...

அருமை sir
அற்புதம்...புத்தகம் தேடி பார்த்தேன்.
கிடைக்க வில்லை.....
இதே போல் நிறைய அனுப்பவும்.

என்னால் முடிந்த உதவி செய்கிறேன்.
Astrologer
Balaji
9150010995