Monday, October 12, 2015

கிருஷ்ணனை கண்டீர்களா?



சற்றே பெரிய பாட்டு. கிருஷ்ணனின் லீலைகள், அந்தக் குழந்தையின் சேட்டைகள் அனைத்தையும் சொல்லணும்னா, எவ்வளவு பத்திகள் பாடினாலும் போதாதே?

குட்டி கிருஷ்ணன் உங்க வீட்டுக்கு வந்தானா என்று கேட்டவாறு அவன் அருமை பெருமைகளைப் பற்றி புரந்தரதாசர் பாடும் பாடல். மிகவும் எளிமையான, மிகச் சுலபமாக புரியும் பாடல்.

இத்துடன் மூன்று ஒளித்துண்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடகரும் சிற்சில பத்திகளை மட்டுமே பாடியுள்ளனர்.



***

அம்மா நிம்ம மனெகளல்லி
நம்ம ரங்கன காணீரே (அம்மா)

அம்மா உங்க வீட்டில்
நம்ம ரங்கன் வந்தானான்னு பார்த்தீர்களா (அம்மா)

ப்ரம்ம மூர்த்தி நம்ம கிருஷ்ணன
நிம்ம கெரெயல்லி காணீரே (அம்மா)

கிருஷ்ணன், பிரம்மனும் அவனே
உங்க தெருக்களில் வந்தானான்னு பார்த்தீர்களா (அம்மா)

காசி பீதாம்பர கையல்லி கொளலு பூசித
ஸ்ரீ கந்த மையொளகம்மா
லேசாகி துளசிய மாலெய தரிசித
வாசுதேவனு பந்தா கண்டீரேனே (அம்மா)

காசிப் பட்டு, கைகளில் குழல்,
உடம்பில் சந்தனம் பூசியவன்
கழுத்தில் துளசி மாலை அணிந்திருப்பான்
அந்த வாசுதேவன் வந்தானான்னு பார்த்தீர்களா (அம்மா)

கரதல்லி கனகன பெரெளல்லி உங்குர
கொரளல்லி ஹாகித ஹுலியுகுரம்மா
அரளெலெ கனக குண்டல காலந்துகே
உரக சயன பந்தா கண்டீரேனே (அம்மா)

கைகளில் வளையல், விரல்களில் மோதிரம்,
கழுத்தில் புலி நகத்தாலான மாலை
தங்கத் தோடுகள், கொலுசுகள் இவற்றையணிந்து
பாம்புப் படுக்கை கொண்டவன், வந்தானான்னு பார்த்தீர்களா (அம்மா)

குங்கும கஸ்தூரி கரி நாம திட்டி
சங்க சக்ரகள தரிசிஹனம்மா
பினகதிந்தலி கொளலூதுத பாடுத
பங்கஜாக்‌ஷனானு கண்டீரேனே (அம்மா)

குங்குமம், கஸ்தூரி ஆகியவற்றால் நெற்றியில் நாமம் தீட்டி
சங்கு சக்கரங்களுடம் இருப்பானம்மா
தன் குழலை வாசித்தவாறே பாடுவானம்மா
அந்த தாமரைக் கண்ணனை பார்த்தீர்களா (அம்மா)

மாவன மடுஹித ஷகடன கெடஹித
கோவர்தன கிரி எத்திதனம்மா
அவ தாயிகே ஈரேளு ஜக தோரித
காமனய்யா பந்தா கண்டீரேனே (அம்மா)

தன் மாமன் கம்சனைக் கொன்றவன், சகடாசுரனை வென்றவன்
(மக்களைக் காப்பதற்காக) கோவர்த்தன மலையைத் தூக்கியவன்
தன் தாய்க்கு ஈரேழு உலகத்தையும் (தன் வாயில்) காட்டியவன்
மன்மதனின் தந்தை வந்தானா பார்த்தீர்களா (அம்மா)

காலல்லி கிரு கெஜ்ஜெ நீலத பாவுலி
நீலவர்ணனு நாட்யவாடுதல்லி
மெலகி பாயல்லி ஜகவன்னு தோரித
மூருலோகதொடெயன கண்டீரேனே (அம்மா)

கால்களில் சிறு கொலுசு, நீலத்தினாலான காதணிகள்
நடனமாடியவாறு கார்வண்ணன்
தன் வாயில் உலகத்தைக் காட்டியவன்
மூன்று உலகங்களின் தலைவனை பார்த்தீர்களா (அம்மா)

ஹதினாரு சாவிர கோபியர கூடி
சதுராங்க பாகதேயன்ன ஆடுவனம்மா
மதன மோஹன ரூப எடெயல்லி கௌஸ்துப
மதுசூதன பந்தா கண்டீரேனே (அம்மா)

16,000 கோபியர்களுடன் சேர்ந்து
சதுரங்கம் விளையாடுபவன்
அழகான தோற்றம் கொண்டவன், இடையில்
கௌஸ்துபம் (என்கிற நகை) அணிந்தவன்,
மதுசூதனன் வந்தானா பார்த்தீர்களா (அம்மா)

தெட்டெச கோடி தேவருகள ஒடகூடி
ஹத்தவதாரவன்னு ஹெத்திதனம்மா
சத்யபாமப்ரிய ப்ரிய புரந்தரவிட்டலா
நித்யோத்ஸவ பந்தா கண்டீரேனே (அம்மா)

33 கோடி தேவர்கள் கூடியிருப்பார்கள்
இந்த உலகத்தில் 10 அவதாரங்கள் எடுத்தவன்
சத்யபாமையின் ப்ரியமான அந்த புரந்தர விட்டலன்
தினந்தோறும் உத்சவம் செய்து கொள்பவன்
இங்கு வந்தானா பார்த்தீர்களா (அம்மா)

***

2 comments:

maithriim said...

மிக மிக அருமையான பாடல். நன்றி :-)

amas32

Guru said...

Thank you so much. Excellent collection. Do you have a YouTube playlist of all songs.