Tuesday, August 22, 2017

இந்த தற்காலிகமான வாழ்க்கையில்...

இந்த தற்காலிகமான வாழ்க்கையில்...

இந்த வாழ்க்கை தற்காலிகமானது. இதில் கிடைக்கும் சுகங்கள் தற்காலிகமானவை. எப்போது யாருக்கு மரணம் வரும் என்பது யாரும் அறியாதது. அப்படி நிலையில்லாத வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் - என்ன செய்யக்கூடாது என்று புரந்தரதாசர் விளக்குகிறார்.



***

அந்தகன தூதரிகே கிஞ்சித்து தயவில்லா
சிந்தெயனு பிட்டு ஸ்ரீஹரிய நெனெயோ (அந்தகன)

யம தூதர்களுக்கும் கொஞ்சம்கூட ஈவு இரக்கம் கிடையாது
ஆகவே (அவர்களைப் பற்றிய) கவலையைவிட்டு நீ ஸ்ரீஹரியை நினை (அந்தகன)

தினராத்ரி என்னதலெ விஷயலம்படனாகி
சவியூடகள உண்டு ப்ரமிசபேடா
அவன கொந்திவன கொந்தர்த்தவனு களிசுவரெ
யமன தூதரு பருவ ஹொத்த நீனரியே (அந்தகன)

நாள்தோறும் இந்த உலக விஷயங்களில் (சபலப்பட்டு) ஏமாறாமல்
சுவையான உணவினை உண்டு (அனுபவித்து), அதில் மூழ்காதே
அவை (சபலங்கள்) அனைவரையும் கொன்று, அப்படிக் கொல்வதில் ஆனந்தப்படும்
யமதூதர்கள் வரும் வேளை நீ அறியமாட்டாய் (அந்தகன)

ஹொஸ மனெய கட்டிதேனு
க்ருஹ ஷாந்தி மனெயொளகெ
பசிரி ஹெண்டத்தி மகன மதுவே நாளே
ஹசனாகிதே பதுகு சாயலாரெனு எனலு
குசுரிதரியதே பிடரு யமனபடரு (அந்தகன)

புதிய வீடு கட்டியிருக்கிறேன்
அதற்கான கிருகப்பிரவேசம் நாளை
மனைவி கர்ப்பிணி; மகனுக்கு நாளை திருமணம்
இப்போ என் வாழ்க்கை மிகவும் இனிமையாக உள்ளது - நான் சாகவே மாட்டேன்
எதுவும் அறியாத மனிதர் இப்படி சொல்லலாம் - ஆனால் யமதூதர்கள் விடமாட்டார்கள் (அந்தகன)

புத்ர ஹுட்டித திவச ஹாலு ஊடத ஹப்ப
மத்தொப்ப மகன உபநயன நாளே
அர்த்தியாகிதே பதுகு சாயலாரெனு எனலு
ம்ருத்யு ஹெடதலெயெல்லி நகுதிர்பளு (அந்தகன)

இன்று என் மகனின் பிறந்த நாள்; பாயசம் சாப்பிடும் நாள் (பண்டிகை)
இன்னொரு மகனின் உபநயனம் நாளை
வாழ்க்கையில் இன்னும் (அனுபவிக்க வேண்டியது நிறைய) இருக்கிறது - அது வரை நான் சாகமாட்டேன்
சாவின் நிழலில் இப்படி சொல்வதைக் கேட்டு, அவன் (இறைவன் / எமன்) சிரிக்கிறான் (அந்தகன)

அட்டடிகே உணலில்லா இஷ்ட தருஷனவில்லா
கொட்ட சாலவ கேள்வ ஹொத்தனரியே
கத்ளே தும்பித மேலே க்‌ஷணமாத்ர இரலில்லா
அஷ்டரொளு புரந்தரவிட்டல நெனெ மனவே (அந்தகன)

இன்னும் பிடித்த உணவை உண்ணவில்லை; போக நினைத்த ஊருக்குப் போகவில்லை
கொடுத்த கடனை (இந்தப் பிறப்பை) திருப்பிக் கேட்கும் நேரம் எப்போதென்று தெரியாது
(மரணம் என்னும்) இருள் சூழும் நேரத்தில் எதற்கும் நேரம் இருக்காது
அத்தகைய நேரம் வருவதற்குள் புரந்தரவிட்டலனை நினைத்துவிடு மனமே (அந்தகன)

***


No comments: