அஜாமிளன். துவக்கத்தில் ஒரு நல்ல பக்தனாக இருந்து தினசரி பூஜைகளெல்லாம் செய்து வந்தவர். நடுவில் மதி மயங்கி, அனைத்தையும் மறந்து வேறொரு பெண்ணின் பின்னால் திரிந்து வாழ்ந்தார். தன் இறுதிக் காலத்தில் அவரை அழைத்துப் போக எமதூதர்கள் வந்து நின்றிருந்தபோது, கடைசி மகனை ‘நாராயணா’ என அழைத்த நேரத்தில் உயிர் பிரிந்ததால், நாராயணனின் தூதர்கள் வந்து அவரை சுவர்க்கத்திற்கு அழைத்துப் போனார்கள் என்று சொல்வார்கள்.
அப்படின்னா, நாம ஏன் வாழ்நாள் முழுக்க நாராயணனை நினைக்கணும்? அவன் பெயரை சொல்லணும்? அஜாமிளன் மாதிரி கடைசி காலத்தில் மட்டும் சொன்னால் போதுமேன்றவங்களுக்கு தாசர் ஒரு தனி பாடலில் - தம்பி, அப்படி முடியாது. அந்த நேரத்தில் உன்னால் எதுவுமே செய்ய முடியாது என்கிறார். அந்த பாட்டு வேறொரு நாளில். இன்றைய பாட்டு வேறே.
இன்னிக்கு தாசர் சொல்றது - எப்போதும் ஹரியை நினைத்துக் கொண்டேயிரு; அதுவே மோட்சத்திற்காக சுலபமான வழி என்கிறார். அதற்கு அவர் சொல்கிற உதாரணங்கள், நாம அடிக்கடி, எல்லா பாடல்களிலேயும் பார்க்கிற உதாரணங்கள்தான். கஜேந்திரன், திரௌபதி, மேலே பார்த்த அஜாமிளன் இப்படி. ’ஹரி ஸ்மரணே மாடோ’ என்ற இந்தப் பாட்டு மிகவும் புகழ்பெற்றது. யூட்யூபில் தேடினால் பற்பல பாடகர்கள் பாடியுள்ளதாக காணொளிகளை காணலாம்.
ஹரி ஸ்மரணே மாடோ நிரந்தர
பரகதிகே இது நிர்தார நோடோ (ஹரி)
எப்போதும் ஹரியை நினைத்துக் கொண்டே இரு
மோட்சத்திற்கு இதுதான் கண்டிப்பான வழி பாரு (ஹரி)
துரித கஜக்கே கண்டீரவ எனிசித
சரணாகத ரக்ஷக பாவன நீ (ஹரி)
கஷ்டத்தில் இருந்து பிளிறிய கஜேந்திரனுக்கு விரைவாக
சரணாகதி கொடுத்து ரட்சித்தவனை நீ (ஹரி)
ஸ்மரணேகைத ப்ரஹ்லாதன ரக்ஷிஸித
துருள ஹிரண்யகன கரவ சீளித
தருணி த்ரௌபதி மொரெயிடதாக்ஷண
பரதிந்தாக்ஷயவிட்ட மஹாத்மன (ஹரி)
எப்போதும் அவனை நினைத்துக் கொண்டேயிருந்த பிரகலாதனை ரட்சித்து
ஹிரண்யகசிபுவின் கையை முறித்து
(காப்பாற்று என்று) த்ரௌபதி முறையிட்ட அதே நொடியில்
முடிவில்லாத ஆடையை வழங்கிட்ட மகாத்மாவான (ஹரி)
அந்து அஜாமிள கந்தன கரெயலு
பந்து சலஹி ஆனந்தவ தோரித
ஸ்ரீஷ புரந்தர விட்டல ராயன
சிருஷ்டிகொடேயன முக்தி பஜிஸி நீ (ஹரி)
அன்று அஜாமிளன் தனது மகனை கூப்பிட்டபோது
உடனே வந்து அவனுக்கு ஆனந்தத்தை காட்டிய
ஸ்ரீபதியான புரந்தர விட்டலனிடம்;
பிறப்பை தருபவனிடம், முக்தியை வேண்டி பாடல்களைப் பாடி நீ (ஹரி)
***
இந்தப் பாடலை மிகவும் பக்தியுடன் அழகாகப் பாடியிருக்கும் திரு.வித்யாபூஷணர்.
நடுவில் ஒரு பத்தியை விட்டுப் பாடியிருக்கும் எம்.எல்.வி. அம்மா.
***
038/365
3 comments:
எனக்கு சிறு வயது முதலே புரந்தர தாசர் பாடல்கள் மேல் ரொம்ப ஈர்ப்பு. எனக்கு மொழி புரியாவிட்டாலும் என்னமோ மொத்தமாக அவர் பகவானுக்காக உருகுகிறார் என்பது மட்டும் நன்றாகப் புரிந்து விடும். அதுவும் எம்.எல்.வசந்தகுமாரி பாடிய சில தாசர் கிருதிகள் என்னை அழ வைத்திருக்கின்றன. உங்கள் பதிவுக்கு என் மனமார்ந்த நன்றி.
amas32
எனக்கு சிறு வயது முதலே புரந்தர தாசர் பாடல்கள் மேல் ரொம்ப ஈர்ப்பு. எனக்கு மொழி புரியாவிட்டாலும் என்னமோ மொத்தமாக அவர் பகவானுக்காக உருகுகிறார் என்பது மட்டும் நன்றாகப் புரிந்து விடும். அதுவும் எம்.எல்.வசந்தகுமாரி பாடிய சில தாசர் கிருதிகள் என்னை அழ வைத்திருக்கின்றன. உங்கள் பதிவுக்கு என் மனமார்ந்த நன்றி.
amas32
அருமையான பாடல். நன்றி.
Post a Comment