Saturday, February 25, 2012

தேனீயை போன்ற வாழ்க்கை என்னுடையது.



***

தோழனாக, தாயாக, குழந்தையாக இன்னும் பலவாறெல்லாம் தன்னை எண்ணி பாடியிருக்கும் ஸ்ரீ புரந்தரதாசர் இந்த பாடலில், தன்னை ஒரு தேனீ'யாக நினைத்து பாடியிருக்கிறார்.

தேனுக்காக எப்பொழுதும் மலர்களையே சுற்றி வரும் தேனீயைப் போல, இவரும் அந்த புரந்தரவிட்டலனின் பாதமலர்களையே சுற்றி வருவதாக கற்பனை செய்து பாடுகிறார்.

இதோ பாடல்.

***

மதுகர விருத்தி என்னது -
அது பலு சன்னது
பதுமனாபன பாத - பதும மதுபவெம்ப (மதுகர)

தேனீயைப் போன்ற வாழ்க்கை என்னுடையது
அது (வாழ்க்கை) மிக அருமையானது
பத்மனாபனின் சரணத்தை - தாமரையாக பாவித்து
அதை சுற்றி வரும் (மதுகர)

காலிகெ கெஜ்ஜெ கட்டி நீல வர்ணன குண
ஆலாபிஸுத்த பலு ஒலக மாடுவந்த (மதுகர)

கால்களில் கொலுசு அணிந்து - நீலவண்ணனின் குணத்தை
புகழ்ந்து பாடியவாறே திரிந்தவாறு இருக்கும் (மதுகர)

ரங்கனாதன குண ஹிங்கதெ பாடுத்த
சிருங்கார நோடுத்த கண்களானந்த வெம்ப (மதுகர)

ரங்கனாதனின் குணங்களை மறைக்காமல் பாடியவாறு
அவன் அழகை என் கண்களால் ரசித்தவாறே இருக்கும் (மதுகர)

இந்திராபதி புரந்தர விட்டலனல்லி செந்தத
பக்தியிந்தானந்தவ படுவந்த (மதுகர)

இலக்குமியின் கணவனாகிய புரந்தர விட்டலனிடத்தில்
ஆழமான பக்தி வைத்து
அதனால் ஆனந்தமாய் பாடியவாறு இருக்கும் (மதுகர)

***

இந்த பாடலை அருமையாக பாடும் வித்யாபூஷணர்.



புரந்தரதாஸரைப் பற்றிய கன்னட திரைப்படம் - நவகோடி நாராயணா படத்தில் வந்த இந்த பாடல்.

***

1 comment:

Anonymous said...

(புரந்தரதாசர் - தாச சாகித்யம்...அதே மெட்டில், தமிழில்)

மதுமலர் வண்டோ நானும்
மகரந்த வாழ்க்கை வாழும்
மாலவன் பரமன் பாதம் - அதை
மாந்தி மகிழ்வேன் நாளும்!

காலினில் கிண்கிணி கொஞ்ச
வாயினில் மாயவன் மிஞ்ச
வேதியன் அவன்திரு நாமம் - அதை
ஓதியே வருவேன் நாளும்!

அரங்கனின் குணமே சுரங்கம்
அதிலென் மனமே இரங்கும்
கண்ணன் திருக்கண் மலர்கள்-அதை
உண்ணவே வருவேன் நாளும்!

நிரந்தரி நாயகன் இவனே!
புரந்தர விட்டலன் இவனே!
பற்றியே பரமன் இவனை-நானும்
சுற்றியே வருவேன் நாளும்!