Tuesday, July 12, 2011

அடுத்த பதிவு 2012 ஜனவரி 15ம் தேதிதான்.

புரந்தர விட்டலன் தூங்கற நேரம் வந்தாச்சு. அதனால் நானும் தாசர் பாடல்களுக்கு கொஞ்ச நாள் இடைவெளி விடலாம்னு முடிவு பண்ணிட்டேன். இனிமே அடுத்த பதிவு மறுபடி விட்டலன் துயிலெழுந்து கொள்ளும் தினமான மகர சங்கராந்தி அன்று வரும்.

அதுக்குள்ள ரீடரிலிருந்து பதிவை தூக்கிடாதீங்க!

நிறைய அற்புதமான பாடல்கள் வெறும் ஒன்று / இரண்டு சொற்களுக்கு விளக்கம் தெரியாமல் ட்ராஃப்டில் இருக்கின்றன. அவை அடுத்த வருடம் உத்திராயணத்தில் கண்டிப்பாக வரும் என்று சொல்லிக் கொள்கிறேன்.

அதுவரை நாம ஏற்கனவே பார்த்த பாடல்களை கேட்டுக் கொண்டிருங்கள்.

ஜெய் ஜெய் விட்டலா!
பாண்டுரங்க விட்டலா!!

*****

9 comments:

குமரன் (Kumaran) said...

புரந்தர விட்டலன் தூங்கும் நேரம்ன்னு எதைச் சொல்றீங்க? புரியலையே?

சின்னப் பையன் said...

குமரன் அண்ணா, இந்த வாரம் தட்சிணாயண புண்யகாலம் வருது. அடுத்த 6 மாதம் விஷ்ணு ‘புரண்டு’ படுத்து தூங்குவதாகவும், உத்திராயணத்தில் துயில் எழுவதாகவும் நம்பிக்கை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அடுத்த 6 மாதம் விஷ்ணு ‘புரண்டு’ படுத்து//

'புரண்டுர' விட்டலனா?:))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

யோவ், அதுக்கு எதுக்குய்யா பதிவை நிப்பாட்டுற? கோயிலை தட்சிணாயணத்தில் மூடியா வைக்குறாங்க?

குமரன் (Kumaran) said...

தூங்குமூஞ்சி சாமின்னு சொல்றது சரியாத் தான் இருக்கு. இப்படி ஆறு மாசமா படுப்பாங்க? கும்பகர்ணன் மாதிரி!

Lalitha Mittal said...

ச்சின்னப்பையனுக்குத் தூக்கம் வந்துடுத்தோ?தாச்சிதூங்குப்பா!ஆராரோ..ஆரிரரோ!அதுக்காக அவன் மேல பழி போடணுமா?

Giri Ramasubramanian said...

சார்,
பதிவைத் தொடருங்க. இல்லாகாட்டி நானும் உங்களை 'யோவ்'ன்னு சொல்லிடுவேன்.

jaganathan said...

// கிரி ராமசுப்ரமணியன் said...
சார்,
பதிவைத் தொடருங்க. இல்லாகாட்டி நானும் உங்களை 'யோவ்'ன்னு சொல்லிடுவேன்.//

ரிப்பீட்டு

Sri said...

//யோவ், அதுக்கு எதுக்குய்யா பதிவை நிப்பாட்டுற?

இதுக்கு ஒரு ரிப்பீட்டு

//சார்,
பதிவைத் தொடருங்க. இல்லாகாட்டி நானும் உங்களை 'யோவ்'ன்னு சொல்லிடுவேன்.

இதுக்கும் ஒரு ரிப்பீட்டு போட்டுக்கொள்கிறேன்
தொடரவும்....

Srini